ரத்னகிரியில் இருந்து தூத்துக்குடி

 ஸ்டெர்லைட் .
 இன்று.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், அதன் ஊழியர்கள் தங்களுக்கு மாற்றுத் தொழில் அமைத்துத் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

தூத்துக்குடி மக்களின் தொடர் போரட்டத்தையடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
ஆலையில் நிரந்திர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த ஆலையை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
தமிழக அரசின் திடீர் நடவடிக்கையால், அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

 இதனிடையே அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியர்களை கடந்த மே 22ஆம் தேதி முதலே வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாகவும், இனிமேல் பணிக்கு வர தேவை இல்லை என ஒப்பந்த ஊழியர்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதில் ஊதியம் குறித்த எந்தவித தகவலும் இல்லாததால் ஊழியர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இது குறித்து ஒப்பந்த ஊழியர்கள்  பேசியது.

"நான் பதினைந்து ஆண்டுகளாக ஸ்டைர்லைட் ஆலையில் வேலை செய்கிறேன். இந்த திடீர் மூடல் என்பது எங்களுக்கு குடும்ப ரீதியா கஷ்டம் தான். இன்று வரை எங்களுக்கு வேலை இருக்கிறதா இல்லையா என்று தெரியாத நிலையில்தான் 3000 பேரும் இருக்கிறோம்" என்று கூறுகிறார் ஊழியர் தங்கபாண்டி.

கடந்த மாதத்திற்கான ஊதியம் வருமா என்று தெரியாமல் இருக்கும் அவர், தன் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை எவ்வாறு செலுத்த போகிறோம் என்ற கவலையில் உள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாகக் கூறிய அவர், "ஸ்டைர்லைட் ஆலையை மூடியது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக" தெரிவித்தார்.

"புதிதாக ஆலையை விரிவாக்கம் செய்தால், எங்கள் ஊரே காணாமல் போயிடும். கம்பெனிக்குள்ள மாஸ்க் இல்லாம இருக்க முடியாது. ஒரு அடி தோண்னாலும் ஆசீட் தண்ணீ வருது. 
எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாற்று வேலைக்கு வழி செய்து கொடுக்க வேண்டும்" என்றும் தங்கபாண்டி கூறினார்.

இதுகுறித்து பேசிய ஒப்பந்த ஊழியர் ரமேஷ், "ஆலையில் பணிபுரிந்ததால் தோல் நோய், ஆஸ்தும்மா போன்ற நோய்கள் வருவதாகவும் வேறு வழி இல்லாமல் அங்கு வேலை செய்து வருவதாகவும்" குறிப்பிட்டார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தூத்துக்குடி மக்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்கிறார் லாரி எடை மேடை ஊழியர் மணிகண்டன்.

"ஆலைக்கு தினமும் எங்க அண்ணன்தான் குடிநீர் சப்பளை செஞ்சாங்க. இப்ப தொழில் இல்லாம் கஷ்டப்படுறான். நாங்க மாற்று வழியை தான் பாக்கனும். இருந்தாலும் மக்கள பாதிக்கிற ஸ்டைர்லைட் எங்களுக்கு வேண்டாம்" என்று கூறுகிறார் ஆனந்த்.

ஸ்டெர்லைட் ஆலையில் வேலைக்கு சேர்த்து விட்ட, காண்ட்ராக்ட் நிறுவனம் சார்பில் ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


அதில், "மே 22ஆம் தேதியில் இருந்து எங்கள் வேலை முடிந்தது எனவும், எங்களுக்கான செட்டில்மென்ட் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆனால், அதில் எந்த விதமான தெளிவும் இல்லை.

மேலும், வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்க்கு முன்பே அறிவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளதாக" ஒப்பந்த ஊழியர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
 இந்தத் தீர்ப்புக்குப்  பிறகு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படிதான் இந்த ஆலை மூடப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்டால், அது குறித்து விசாரிக்கும் அதிகாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இல்லையென வாதிடப்பட்டது.
அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஸ்டெர்லைட்  ஆலை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும். தேவைப்பட்டால் தொடர்ந்து இது தொடர்பான வழக்குகளைச் சந்திப்போம்" என்று தெரிவித்தார்.

 ஆனால், தாங்கள் உச்ச நீதிமன்றம் கூறியபடி உயர்நீதிமன்றத்தை விரைவில் அணுக உள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சிஇஓ ராம்நாத் தெரிவித்திருக்கிறார். தீர்ப்புக்குப் பிறகு ஆதரவான செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரித்து முடிவெடுக்குமாறு கூறியுள்ளதால், நாங்கள் மீண்டும், உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம்.

 இந்த உத்தரவின் கோப்புகளை முழுவதுமாகப் படித்து, அதில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை பார்த்து முடிவுசெய்வோம்."
என்று கூறியுள்ளார்.

===================================================
ன்று,
பிப்ரவரி-19.
துருக்மேனிஸ்தான் கொடி நாள்
தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் பிறந்த தினம்(1855)
கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார்(1878)
 கலிப்பொலி போர் துவங்கியது(1915)
ஐக்கிய ராஜ்யத்திடம் இருந்து சைப்பிரஸ் விடுதலை பெற்றது(1959)

===================================================

  ஸ்டெர்லைட் .
 அன்று.
இப்போது தூத்துக்குடியில் நிகழ்ந்தது எல்லாம் மராட்டிய மாநிலம் ரத்னகிரியில் நடந்து இருக்க வேண்டியவை

ஆனால், இந்த ஆலைக்கான திட்டம் முன்மொழியப்பட்ட தொன்னூறுகளில், கொங்கனி மக்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர்.
அதனால், அந்த நிறுவனத்தை ரத்னகிரியில் தொடங்க முடியவில்லை.

ஸ்டெர்லைட் நிறுவனம் கொங்கன் பகுதிக்கு 26 ஆண்டுகளுக்கு முன் வந்தது.
 ஒரு லட்சம் பேருக்கு வேலை தருகிறோம், இந்த நகரத்தை செழுமை அடைய செய்கிறோம் என வழக்கமான நிறைய பொய்யான வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்தது வேதாந்தா .

ஸ்டெர்லைட் நிறுவனம், 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது.

 அந்த ஒப்பந்தத்தின்படி ரத்னகிரி அருகே அந்த நிறுவனத்திற்கு, 20,80,600 சதுர மீட்டர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு தரப்பட்டது. தாமிர உருக்காலை அமைக்க வேண்டும் என்பதுதான் அந்த நிறுவனத்தின் நோக்கம்.

ஆனால், இந்த தாமிர உருக்காலையால் சூழலியல் கேடு ஏற்படும் என்று குற்றஞ்சாட்டி, ரத்னகிரி மக்கள், திட்டம் கைவிடப்படும் வரை போராட முடிவு செய்தனர்.
 போராடவும் செய்தனர்.


கொங்கனி ரத்னகிரி பகுதி அல்போன்ஸா, முந்திரிகுப்புகழ் பெற்றது. இங்குள்ள கடற்கரைகள் எல்லாம்  மனம்கவரும் உல்லாச இடங்கள்.
குறிப்பாக அல்போன்ஸா மாம்பழத்திற்கென்று உலகளவில் புகழ் இருக்கிறது.
அதன் உற்பத்தி கெடும் என்று தெரியவந்ததால் இப்பகுதி மக்கள் கவலையடைந்தார்கள்.அவர்களில் ஐந்து பேர் குழு மைக்கப்பட்டு இந்த நச்சு ஆளை வருவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள  திட்டமிட்டு ஸ்டெர்லைட்டை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
ஆலை  முன் அன்றைய ஆர்ப்பாட்டம்


ரத்னகிரியில் இந்த திட்டம் செயல்பட இருக்கிறது என்று தெரிந்த உடனே, 1993 ஆம் ஆண்டு, ஏறத்தாழ 50,000 பேர் திரண்டு மாபெரும் பேரணியை நடத்தினார்கள்.

அவர்களது கோரிக்கை இந்த திட்டம் வேறு ஏதாவது ஒரு பகுதிக்கு மாற்றப்பட வேண்டும் என்பதுதான். இந்தப் புள்ளியிலிருந்து போராட்டம் விரிவடைய தொடங்கியது.

"ரத்னகிரி பச்சோ ஸ்டெர்லைட் ஹத்ஹோ சங்கர்ஷ் சமிதி'(ஸ்டெர்லைட்டை விரட்டு.ரத்னகிரியை காப்பாற்று ஒருங்கிணைப்பு குழு) போராட்டத்தின் தலைவராக கேதன் காக் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்கள் ஒரு பக்கம் தீவிரமாக போராடிக் கொண்டிருக்க, அதைக்கண்டுகொள்ளாமல் ஸ்டெர்லைட் தங்களது நிறுவனத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கியது.
அதுமட்டுமல்லாமல், நிறுவனத்தை தொடங்குவதற்கு தேவையான பொருட்களையும் உள்ளே எடுத்து வர தொடங்கியது.


 இந்த நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட இயந்திரம் மற்றும் பிற பொருட்கள் எதுவும் தரமான பொருட்கள் அல்ல. 1957 - 1977 ஆம் ஆண்டு வரை சிலியில் இயங்கிய ஒரு தாமிர உருக்காலையின் பழைய இயந்திரங்களைதான் மலிவான விலைக்கு ஸ்டெர்லைட் வாங்கி இருக்கிறது என்பதுகண்டுபிடிக்கப்பட்டது.அது மக்களை மிக்வும் கோபம் கொள்ளச்சசெய்தது.

 எப்படியாவது ஸ்டெர்லைட் நிறுவனத்தை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்ற எங்கள் குறிகோளை இந்த பழைய இரும்பு எந்திரங்கள் தகவல்கள்தான்  வலுவாங்கியது.
ஸ்டெர்லைட்டை விரட்டு.ரத்னகிரியை காப்பாற்று.


சங்கர்ஷ் சமிதியின் தலைவர் கேத்தனுக்கு தற்போது  83 வயது.
அவர்களின் போராட்டம் எப்படி வெற்றிப்பெற்றது என்பதை கூறுகிறார்.

 "என்னை தலைவராக அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுத்தபோது, நான் ஒரே ஒரு நிபந்தனையை விதித்தேன்.
அதாவது நமது போராட்டத்தில் அரசியல் கட்சிகள் பங்கு கொள்ள கூடாது. அரசியல் காட்சிகள் எளிதாக விலைபோய் தனது கொள்கை முடிவுகளை மாற்றிக்கொண்டு போராட்டதையே கேலிக்கூத்தாக்கிவிடும் என்பதை தெரிந்து வைதிருத்தோம்..
நாங்கள் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்திய போது, ரத்னகிரி பகுதியில் உள்ள மக்கள் அனைவரின் நம்பிக்கையையும் பெற்றோம்.

அப்படியும் சிலர் தங்கள் சுயநலத்திற்காக இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். அவர்களை எல்லாம் அடையாளம் கண்டு போராட்டத்திலிருந்து விலக்கி வைத்தோம்.

இது ரத்னகிரி நகரத்தின் பிரச்சனை மட்டும் அல்ல, இந்த மாவட்டத்தின் பிரச்சனை என்று புரிய வைத்தோம். நாங்கள் மட்டும் அப்போது தீவிரமாக போராடி இருக்கவில்லை என்றால், இப்போது தூத்துக்குடியில் நிகழ்ந்தது, இங்கு ரத்னகிரியில் நிகழ்ந்து இருக்கும்.அல்போன்ஸா மாம்பழம் உற்பத்தியே நின்று மாமரங்கள் பட்டுப்போயிருக்கும்.எங்கள் மக்கள் வாழ்வாதாரமும் காணாமல் போயிருக்கும் " என்கிறார் கேத்தன்

அப்போது இப்போது போல் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்வீட்டர் என எதுவும் இல்லாத அக்காலத்தில் மாவட்டத்தின்  பத்திரிகை,பத்திரிகையாளர்கள் எல்லோரும் இந்த போராட்டத்திற்கு துணையாக  நின்றநர் .
ரத்னகிரி வரலாற்றிலேயே ஒரு மாபெரும் பேரணியை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒருங்கிணைத்தோம்.
ஆனால் தூத்துக்குடி தமிழ்நாடு பத்திரிகைகள் எல்லாம் ஸ்டெரலைட்  பணத்திற்கும்,விளம்பரத்துக்கு அடிமையாகிப்போனது என்பதை கேள்விப்பட்டோம்.

ஆனால் எங்கள் போராட்ட காலத்தில் 'ரத்னகிரி டைம்ஸ்' என்ற உள்ளூர் பத்திரிகைதான் எங்கள் போராட்டத்திற்கு பெரிதும் துணை நின்றது.
"'ரத்னகிரி டைம்ஸ்' பத்திரிகையின் உரிமையாளர் உல்ஹாஸ் கோசல்கர் போராட்டக்காரர்களின் கரங்களை பலவிதங்களில் வலுப்படுத்தி போராட்டம் வெல்ல வகை செய்தார்.தனது ஊர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள்.ஸ்டெர்லைட் நிர்வாகம் பணம்,விளம்பரம் ஆசைகாட்டியும் அவர் ஸ்டெர்லைட் கைக்கூலியாக மாறவில்லை.

"அரசியல் கட்சிகளை உள்ளே விடாதவரை, நம்மால் போராட முடியும். எங்களுக்கு சூழலியலாளர் ராஷ்மி மயூர் தொழிற்நுட்பம் சார்ந்து பல தகவல்களை அளித்தார். அவர் மட்டும் அந்த தகவல்களை அளிக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் சரியான திசையில் சென்று இருக்காது" என்கிறார் கேத்தன்.
 இந்த சமயத்தில்தான் மத்திய அரசிலிருந்து திரும்பி மாநில முதல்வராக பொறுப்பு ஏற்று இருந்தார் சரத் பவார்.

சங்கர்ஷ் சமிதி போராட்ட குழுவை சேர்ந்தவர்களை சரத் பவார் சந்தித்து இந்த பிரச்சனை குறித்து விவாதித்தார்.
இந்த ஆலைக்கு எதிரான மக்களின் கோபத்தை கண்ட சரத் பவார், இந்த திட்டத்தை ரத்து செய்வதாக சட்டமனறத்திலிலேயே கொள்கை முடிவெடுத்து
முடங்கிய ஸ்டெர்லைட்
அரசாணை வெளியிட்டு வேதாந்தா ஒப்பந்தத்தை நீக்கினார்.


மக்கள் போராட்டம் தீவிரமடைய, ஜூலை 15, 1993 ஆம் ஆண்டு அரசு இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.

இப்போது கூட அந்த ஆலையின் கட்டுமானங்களை இங்கு காணலாம்.

அதன் பின், 2010 ஆம் ஆண்டு, மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகம், தாமிர உருக்காலைக்கு பதிலாக வேறு ஏதேனும் தொழிற்சாலையை தொடங்கி கொள்ளலாம் என்று கடிதம் அனுப்பியது.
ஆனால், இன்றுவரை அந்த கடிதத்திற்கு ஸ்டெர்லைட் பதில் அளிக்கவில்லை.

மீண்டும் ஜுலை 9, 2013 ஆம் ஆண்டு இன்னொரு கடிதத்தை மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகம், தொழில் தொடங்காவிட்டால் மீண்டும் நிலத்தை அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. ஆனல், அதற்கும் ஸ்டெர்லைட் பதில் அளிக்கவில்லை.

அதன் பின், ஜூலை 31, 2014 நிலம் தொடர்பாக இன்னொரு நோட்டீஸை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மஹராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகம் அனுப்ப, உடனே நீதிமன்றத்தை அணுகி அதற்கு இடைக்கால தடை வாங்கியது ஸ்டெர்லைட் நிறுவனம்.
நாசமான நாசகார ஆலை

இப்போது இந்த விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது.
 மஹராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகம் அளித்த தகவலின்படி, ஸ்டெர்லைட் நிறுவனம் அந்த நிலத்திற்கான வரியை செலுத்தி வருகிறது.

 ரத்னகிரி பகுதியின் சாமானிய மக்கள் சரியான நேரத்தில் போராடி ஸ்டெர்லைட் திட்டத்தை முறியடித்து தங்கள் பகுதியிலிருந்து வெளியேற்றினர்.

" அப்போது மட்டும் நாங்கள் போராடாமல், அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளில் வீழ்ந்து இருந்தால், எங்களது நிலை தூத்துக்குடி மக்களின் நிலையைவிட மோசமாக ஆகி இருக்கும்.பல உயிர்கள் பலியாகி இருக்கலாம்.கரணம் ஸ்டெர்லைட் பணம் பாதாளம் வரை பாயும்.தூத்துக்குடியில் அதுதான் நடந்து விட்டது," என்று அன்றைய நிலையையும் இப்போது தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள நிலையையும் ஒப்பிட்டு விளக்குகிறார் கேத்தன்.


இன்றும்   ரத்னகிரியில் இயங்காத ஸ்டெர்லைட்  ஆலையின் அரைகுறை கட்டிடங்களை பாதுகாத்து வரு
கிறார் மிலிந்த் காந்தி என்ற ஒப்பந்த ஊழியர்.1993 முதல் காவலராக இருந்தாலும் தன்னை இன்னும் வேதாந்தா நிறுவனம் தினக்கூலி அடிப்படையில்தான் வைத்திருப்பதாகவும்.நிரந்தரம் செய்யமறுக்கிறது என்றும் கவலையுடன் உள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தமிழக முதல்வர் இத்தீர்ப்பினை சரிவர தெளிவாகப்புரிந்து இப்போதாவது சட்டமன்றத்தை கூட்டி கொள்கையளவில் ஸ்டெர்லைட்டை மூடும் முடிவெடுத்து அரசாணை வெளியிட்ட வேண்டும்.அதுதான் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வைக்கும்.வேதாந்தா நீதிமன்றத்தீர்ப்பை தனக்கு ஆதரவாக பெற்று விடுவதைத்தடுக்கும்."
                                                                                               -மு.க.ஸ்டாலின்.(18.02.2019.)




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?