கண்டா வரச் சொல்லு

 செந்தில் பாலாஜி டாஸ்மாக்கில் 40,000 கோடி திமுக தலைமைக்குபோனது.என செய்திகளுக்கு இறக்கை முளைப்பதன் பிண்ணனியில் ஆடுமலை,ஆதவ் அர்ஜுன் ரெட்டி இருக்கிறார்கள்.ரெய்டில் பிடிபட்ட 42 லட்சம் பணத்தை திருப்பி தந்துவிட்டு நடையை கட்டியுள்ளது ED.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தார்ப்பாய்களால் மூடப்படும் மசூதிகள்.ஹோலி பண்டிகை அன்று நடைபெறவுள்ள பேரணிக்கான பாதையில் மசூதிகள் உள்ளதால், அதனை மூட வேண்டும் என உ.பி,மாநில அரசு உத்தரவு.

கண்டா வரச் சொல்லு மல.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயில்களில் 

டீ விற்கும் தமிழனைக் கண்டதுண்டா?

கண்டா வரச் சொல்லு மல.

மத்தியப் பிரதேசத்தில் போக்குவரத்து சிக்னல்களில் கார் ஸ்டிக்கர் விற்கும் தமிழனைக் கண்டதுண்டா?

கண்டா வரச் சொல்லு மல.

ஜார்கண்ட் மாநில ரயில் நிலைய வாசல்களில் கைக்குழந்தைகளோடு பொம்மை விற்கும் தமிழனைக் கண்டதுண்டா?

கண்டா வரச் சொல்லு மல.

பீஹார் மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவதில் வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா?

கண்டா வரச் சொல்லு மல.

ராஜஸ்தான் செங்கல் சூளைகளில் குடும்பத்தோடு வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா?

கண்டா வரச் சொல்லு மல.

வட மாநிலங்களில் ஒன்றிய அரசுப் பணிகளை ஆக்கிரமித்த தமிழனைக் கண்டதுண்டா?

கண்டா வரச் சொல்லு மல.

குஜராத் கிரானைட் கடைகளில் குடும்பத்தோடு தங்கி கூலி வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா?

கண்டா வரச் சொல்லு மல.

வடமாநில டிராபிக்களில் ஹிந்தி தெரியாமல் பிச்சை எடுக்கும் தமிழனைக் கண்டதுண்டா?

கண்டா வரச் சொல்லு மல.

ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்வோரே,

புலம் பெயர் தொழிலாளிகளாய்

வடமாநிலங்களிலிருந்து தமிழகம் நோக்கி, குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, கூட்டம் கூட்டமாக நடந்து வந்த

தமிழனைக் கண்டதுண்டா?

கண்டா வரச் சொல்லு மல.

இந்தியாவே தமிழ்நாட்டில் வந்து வாழ்கிறது.

இவனுக்கு வாழத் தகுதியில்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதாம்.

வாழ்த்தகுதியில்லாட்டா

உ.பி.க்கோ,ம.பி.க்கோ போடா.

                                    -சூர்யா.சேவியர்(டுவீட்டரில்)





தமிழ்நாடு வரவு செலவு அறிக்கை இன்று தாக்கல்.

டாஸ்மாக்-அமுலாக்கத்துறை 

அமலாக்கத்துறை சார்பில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் டாஸ்மாக் தொடர்புடைய நிறுவனங்கள், தொடர்புடைய நபர்களின் இடங்கள் ஆகியவற்றில் மார்ச் 6ஆம் தேதி சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

"மதுபான கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. சோதனையில் கணக்கில் வராத ரூ. 1,000 கோடிக்கும் மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

பார் உரிம டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. டாஸ்மாக் அதிகாரிகளின் உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிஸ்டில்லரிகள் மற்றும் பாட்டிலிங் நிறுவன சோதனையில்நிதிமோசடிதெரியவந்துள்ளது

பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறுவனங்களுக்கு டாஸ்மாக் ஆண்டுதோறும் ரூ.100 கோடி செலுத்தியுள்ளதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு குற்றச்சாட்டுகளில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய கூட்டாளிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூத்த அதிகாரிகளுக்கு விரைவில் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரையோடிய  வன்மம்!

அடிமனதில் எவ்வளவு வன்மம் புரையோடிப் போயிருக்கிறது என்பதன் அடையாளம்தான் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் வாயில் இருந்து உதிர்த்த சொற்கள் ஆகும். அவர்கள் மொழியில் சொல்வதாக இருந்தால் 'நீச பாஷைகள்' ஆகும்.

“தமிழ்நாட்டில் 43 இலட்சம் பள்ளி மாணவ – மாணவியர் நலனுக்காகத் தர வேண்டிய இரண்டாயிரம் கோடியை ஏப்பம் விட்டுவிட்டீர்களே?

எப்போது தருவீர்கள்?"

என்று கேட்டால், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாட்டு எம்.பி.க்களும் மக்களும் நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள்' என்கிறார்.


முன்பு பெங்களூரில் தன்னை நோக்கிக் கேள்வி கேட்ட மாணவனை, 'இந்த மாதிரி எல்லாம் சிங்கப்பூர்ல கேள்வி கேட்க முடியாது' என்றும், தூத்துக்குடியில், 'இனி யாரும் உண்டியல்ல காசு போடாதீங்க' என்றும் சொல்லி நாகரிகத்தின் அடையாளமாக விளங்கக் கூடியவர் நிர்மலா சீதாராமன் என்று நாடும் நாட்டு மக்கள் அறிவார்கள்.


இவர் நாடாளுமன்றத்தில் இதற்குத் தொடர்பு இல்லாத வகையில் தந்தை பெரியார் மீதான தனது வன்மத்தைக் கக்கி இருக்கிறார். 'தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் படத்தை திராவிட இயக்கத்தவர் அனைவரும் தங்கள் அறையில் மாட்டி வைத்திருப்பது ஏன்?' என்று கேட்கிறார்.


நிர்மலா சீதாராமன் பெரியாரை படிக்கத் தொடங்க வேண்டும். முன்னையும் பின்னையும் வெட்டி சங்கிகள் பரப்பும் 'வாட்ஸ் அப்' வதந்திகளாக இல்லாமல் முழுமையாகப் படியுங்கள் பெரியார் சொன்னதன் முழுப் பொருளை உணரலாம். 'காட்டுமிராண்டித் தனமான ஆரியக் கொள்கைகள் தமிழை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதே' என்ற ஆத்திரத்தில் தான் பெரியார் அப்படிச் சொன்னார்.

அறிவியல் தமிழாக அதனை வளர்க்க வேண்டும் என்பதற்காக அப்படிச் சொன்னார்.


“தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பாய் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்கு முக்கியக் காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ்மொழி சிக்கிக் கொண்டது தான். மதக் கொள்கையைப் பரப்ப வடமொழியும், விதம் கலைகளும் அதிகமாகத் தமிழ்நாட்டில் புகத் தொடங்கின.

தமிழ் மன்னர்கள் ஆரிய மதத்தை ஏற்றுக்கொண்டதால் அம்மதக் கருத்துக்களை விளக்கத் தமிழில் சொற்கள் இல்லாது போகவே, அதிகமாக வடமொழிச் சொற்களைக் கையாள்கின்றனர். ஆரம்பித்தனர்.


தமிழிலிருந்து ஆரியத்தை போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமாய் இருந்து வருவனவெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய, தமிழ்மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லையென்பது இங்கு கவனிக்கத்தக்கது” (– மொழி எழுத்து நூல்) என்று எழுதி இருக்கிறார் பெரியார்.


“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழ் மரபில் – இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை.


ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கட்டளையிட்டார் பெரியார்.


“ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பது தமிழ் வளர்ச்சி அடையாப் பழங்கால மொழி என்பது என்னுடைய மதிப்பீடு ஆகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும் பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிரத் தமிழ் மீது எனக்கு தனி வெறுப்பில்லை” (விடுதலை 1.12.1970) என்றார் பெரியார்.


தமிழ் மீது அவர் வைத்த பாசம்தான், அதன் வளர்ச்சிக்காக அப்படி அவரைப் பேச வைத்தது! “உண்மைத் திராவிடன் தீட்டிய 'திருக்குறள்' குப்பையிலே கிடக்க – திராவிடத் துரோகிகள் தீட்டிய நூல்கள் அதிகாரத்தில் இருந்து வருகின்றன” என்று பொங்கினார்.


“நாம் மிகப் பெரிய சமுதாயம். நாம் எவ்வளவு முன்னேற வேண்டும்? நாதியற்றுப் போய் காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம்?

சொல்லுங்கள்!


வெளிநாட்டுக்காரனைப் பார். வெள்ளைக்காரனைப் பாரய்யா!” என்று தனது இறுதிச் சொற்பொழிவில் கூட கெஞ்சியவர் தந்தை பெரியார்.

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று ஏன்?

'அதனைக் காட்டுமிராண்டிக் காலத்தைப் போலவே வைத்திருக்காதே, வளர்ச்சிக்குரியதாக மாற்று' என்று சொன்னார். புராணக் கதைகளைத் தமிழ்ப் படுத்திச் சொல்லிக் கொண்டிருக்காதே என்பதற்காகச் சொன்னார்.


இன்று இருந்திருந்தால் அப்படிச் சொல்லி இருப்பாரா? மாட்டார். ஏனெனில் இன்று அனைத்தும் தமிழில் வந்துவிட்டது.

1950 காலக்கட்டத்தில் கம்பராமாயணம் – பெரியபுராணம் போன்றவையே தமிழாகப் பேசப்பட்டது. பரப்பப்பட்டது. 1970 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் 'தமிழ்நாடு பாடநூல் வளர்ச்சிக் கழகம்' மூலமாக அனைத்து அறிவியல் நூல்களையும் தமிழ்ப்படுத்தி வெளியிடப்பட்டது. தொடங்கினார்.

இயற்பியல், வேதியியல், கணிதவியல், மருத்துவம் அனைத்துக்கும் தமிழ்ச் சொற்களைச் சொல்லும் நூற்றுக்கணக்கான எழுத்துக்கள் வந்துவிட்டன.

இன்று அறிவியல் தமிழாக, கணினித் தமிழாக, இணையத் தமிழாக, புலனத் தமிழாக – தமிழ் உயர்ந்துவிட்டது.


ஊடகம் – தொழில் நுட்பம் வளர வளர தமிழ் அதற்காக சொற்களைத் தேர்வு செய்து புழக்கத்தில் விடுகிறது. இன்றைய தமிழ், பழந்தமிழாக மட்டுமே – ஆரியக் கருத்துக்களைச் சொல்லும் தமிழாக இல்லை. அறிவுபூர்வத் தமிழாக இருக்கிறது. இப்படி வளர வேண்டும் என்றே பெரியார் விரும்பினார்.


தமிழ் எழுத்துக்களைக் குறைக்கச் சொல்லி, எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தவர் பெரியார். அதுதான் இன்று கணினியில் தமிழை எளிமையாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பாகவும் அமைந்துவிட்டது என்பதை நிர்மலா அறிவாரா?


தமிழை 'நீஷ பாஷை' என்று சொன்னது யார் என்று தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். 'குளித்த பிறகு நீச பாஷை காதில் விழக்கூடாது' என்று சொன்னது யார் என்றும் தமிழ்நாடு அறியும்.

'உன் மொழியே இழிவானது' என்பது இதன் பொருள்.

பெரியார் சொல்ல வந்தது, தமிழை அறிவுமொழியாக, அறிவியல் மொழியாக, பயன்பாட்டு மொழியாக மாற்று என்பதுதான்.

அசிங்கப்படுத்தச் சொன்னதற்கும் – அக்கறையோடு சொல்வதற்கும் வேறுபாடு உணர்ந்த சமூகம் தமிழ்ச் சமூகம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?