முடக்கப்பட்ட நீயா?நானா??
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற விவாத நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா தான். இந்நிகழ்ச்சியை 15 ஆண்டுகளுக்கு மேலாக கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
பல்வேறு சமூக பிரச்சனைகளை விவாதித்துள்ள இந்நிகழ்ச்சி, அண்மையில், தமிழ்நாட்டில் பற்றி எரியும் மும்மொழிக் கொள்கை விவகாரத்தை ஆதரிப்பவர்கள் வெர்சஸ் எதிர்ப்பவர்கள் என்கிற தலைப்பில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியானபோதே இதன்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த எபிசோடு ஷூட்டிங் முடிக்கப்பட்டு, அதன் எடிட்டிங் வேலைகளும் நிறைவடைந்து, இந்த வாரம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த வாரம் அந்த எபிசோடு ஒளிபரப்பப்படவில்லை.
பாஜக (எல்.முருகன்) அழுத்தம் காரணமாக மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முடிவை விஜய் டிவி கைவிட்டுவிட்டு, வேறொரு டாப்பிக்கில் விவாதம் நடத்தி அந்த எபிசோடை இந்த வாரம் ஒளிபரப்பி இருக்கிறார்கள்.
மேலும் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சியின் போது அதனை எதிர்ப்பவர்கள் முன்வைத்த வாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல் மும்மொழிக் கொள்கையை ஆதரித்தவர்கள் திணறியதாகவும். தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கையே போதுமானது என்கிற குரல் ஓங்கி ஒலித்ததன்

அண்மையில் மோடி எதிராக புகைப்படம் வெளியிட்ட ஆனந்த விகடன் தளம் முடக்கப்பட்டதை போல் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சியையும் தடுத்து நிறுத்தி உள்ளது கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறி ஆக்குவதாக கூறும் நெட்டிசன்கள் பாஜகவை விமர்சித்து பதிவுகளை போட்டு வருகிறார்கள்.
மேலும் மும்மொழிக் கொள்கை தொடர்பாக நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பலவீனமான ஐ.நா.அவை!
காசாவின் குருதி நனைந்த மண்ணில் வரலாறு தன்னை மீண்டும் எழுதுகிறது. மனித குலத்தின் கண்முன்னே, 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலை அரங்கேறியது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளி யிட்டுள்ள அறிக்கை வெறும் வார்த்தைகளைத் தாண்டி, காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கொடூரத்தின் முழு அளவை பதிவு செய்துள்ளது.

ஐ.நா. அறிக்கை இஸ்ரேலின் இந்த மோசமான மீறல்களை ஆவணப்படுத்துகிறது, ஆனால் நட வடிக்கை எங்கே? சர்வதேச நீதிமன்றத்தின் உத்தர வுகளுக்குப் பின்னும், காசா மேலும் மேலும் இடி பாடுகளாக மாறியதை இந்த உலகம் பார்த்தது.
நேதன்யாகுவின் “யூத எதிர்ப்பு” என்ற ஐநா மீதான குற்றச்சாட்டுகள் அவர்களின் பாதுகாப்பு கவசம் - விமர்சனத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஒரு கேடயம். ஆனால் உண்மை என்ன வென்றால், பாலஸ்தீன மக்கள் கூட்டம் முழுமை யாக அழிக்கப்படுகிறது - அவர்களது வரலாறு, கலாச்சாரம், எதிர்காலம் உட்பட.
ஹமாஸின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால் பாலஸ்தீனிய குழந்தைகளின் இரத்தம் அந்த கொடூரமான செய லுக்கான பழிவாங்கலுக்கு எவ்வாறு நியாயம் ஆக முடியும்?
பதிலுக்குப் பழிவாங்கல் இனப்படு கொலையாக மாறும்போது, மனிதகுலம் தன் ஆன்மாவை இழக்கிறது.
காசாவின் இடிபாடுகளுக்கிடையே, ஐ.நா.வின் கையறு நிலையும், உலகின் மௌனமும் வரலாற்றின் கருப்புப் பக்கமாகப் பதிவாகும். ஒவ் வொரு நாளும் அவசரகால உதவி தடுக்கப் பட்டது. ஒவ்வொரு மணி நேரமும் பாதுகாப்பான இடங்கள் குறிவைக்கப்பட்டன.
இஸ்ரேலிய பொருளாதார நலன்களும், கூட்டாளி நாடுகளின் ஆயுத வர்த்தகமும் மனித உரிமைகளை விட முக்கியமா? அரபு நாடுகளின் பிளவுகளும், அமெரிக்காவின் வெளிப்படை யான ஒருதலைப்பட்சமும் இந்த இனப்படுகொ லைக்கு தடையற்ற அனுமதியளித்தன.
சர்வதேச சட்டங்கள் வெறும் காகிதங்களாகத் தோன்று கின்றன - காசாவின் கதறல்கள் கேட்காமல் போயின. வல்லரசுகளின் இரட்டை நிலைப்பாடு கள் வெளிச்சமாகிவிட்டன. ஐ.நா. அறிக்கை கூறு வது போல நிர்ப்பந்திக்கப்பட்ட பட்டினி, நிர்வாண மாக்கல், பாலியல் வன்முறை - இவை அனைத்தும் ஒரு இனத்தை வேரறுக்கும் முயற்சியின் பகுதி கள். ஒரு மனித இனத்தை அவமானப்படுத்தி, அழிப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள்.
பேரழிவின் இந்த வட்டத்தை உடைக்க, இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகள், ஆயுத விற்பனைத் தடை, தனிமைப்படுத்தல் என உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.