இந்தியில் தோல்வி!

  *மும்மொழி கொள்கை அமலில் உள்ள கர்நாடகாவில் 90,000 மாணவர்கள் இந்தியில் தோல்வி!* 

🔹கர்நாடகாவில் கடந்த 2024ம் ஆண்டு SSLC தேர்வில் மூன்றாம் மொழிப்பாடமான இந்தியில் 90,000-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்

மும்மொழிக் கொள்கையை நிறைவேற்றுவதற்காக இந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால், அது மாணவர்களின் அறிவுக்கு பங்களிக்கவோ, அவர்களின் எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாகவோ இல்லை என்பதையே இம்முடிவு எடுத்துக் காட்டுவதாகக் கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்

மாநில அரசு மாணவர்களின் எதிர்கால நலனில் தொடர்புடைய ஒன்றைத் தேர்வு செய்ய அனுமதிக்காமல், எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியைக் கட்டாயப்படுத்துகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேலும், மூன்றாவது மொழியாக இந்தியை கற்பதால் ஏற்படும் கூடுதல் சுமையால், தாய்மொழி மற்றும் இரண்டாம் மொழியான ஆங்கிலத்தை கற்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. 

அரசாங்கம் கன்னடம் மற்றும் ஆங்கிலக் கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுவே அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை சார்ந்த எதிர்காலத்திற்கு இன்றியமையாததாக இருக்குமெனப் பேராசிரியர் நிரஞ்சனாராத்யா வலியுறுத்தியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?