வரலாறே துரோகம்தான்!

 ராணுவ ரகசியங்களை பாக். உளவு அமைப்புக்கு கொடுத்த ஆயுத ஆலை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களை காட்டி மயக்கும் ஹனி டிராப் முறையில் ஊழியரிடம் இருந்து ரகசியங்களை ஐஎஸ்ஐ அமைப்பு பெற்றது அம்பலம். பாக். உளவு அமைப்பு ஏற்பாட்டில் நேஹா சர்மா என்ற பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்-ல் ராணுவ ரகசியங்களை அனுப்பியுள்ளார்.

'மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு முடிவு எடுக்கக் கூடாது': -கேரள முதல்வர் பினராயி விஜயன்.
'ஆதாரங்கள் ஏதுமின்றி உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது: அமலாக்கத்துறை மீது சட்ட நடவடிக்கை; 'அமைச்சர் செந்தில்பாலாஜி.








வரலாறே துரோகம்தான்!

சசிகலாவின் காலை நோக்கி ஊர்ந்து போய் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமி, அந்தப் பதவியைத் தக்க வைக்க பா.ஜ.க.வின் பாதம் தாங்கினார், அதற்காக தமிழ்நாட்டையே பா.ஜ.க.வுக்கு அடமானம் வைத்தார் என்பது ஊரறிந்த உண்மை ஆகும். 

இந்த உண்மைமீது விவாதம் நடத்த வேண்டுமா?

 'கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?' என்பதைப் போல, பழனிசாமியின் துரோக வரலாற்றை விவாதம் நடத்தித்தான் வெளிச்சம் போட வேண்டுமா?

பதவி பறிக்கப்பட்டு பரிதாபமாக நிற்கும் பழனிசாமி, 'தமிழ்நாட்டு மக்கள் பழசு அனைத்தையும் மறந்திருப்பார்கள்' என்று அதிகப்படியாகத் துள்ளிக் குதிக்கிறார். 'நான் எங்கே தமிழ்நாட்டை அடமானம் வைத்தேன்? நான் விவாதிக்கத் தயார்' என்று பழனிசாமி குதிப்பதும், அதற்கு, 'ஜெயலலிதாவால் பதவி பறிக்கப்பட்டது' ஜெயக்குமார் சாமரம் வீசுவதும் சகிக்கவில்லை.

ஜெயலலிதாவே எதிர்த்த 'உதய் மின்' திட்டத்தில் கையெழுத்திட்டது யார்?

 2816 வரையில் நடக்காத நீட் தேர்வை 2017- ஆம் ஆண்டிலிருந்து நடத்த அனுமதித்தது யார்?

 நாடாளுமன்றத்தில் சுரங்க, கனிமவள மசோதாவுக்கு ஆதரவு தெரி- வித்த அடிமைக் கட்சி எது? 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, சட்டம் வர காரணமாக இருந்தது யார்?

 முத்தலாக் சட்டத்தை ஆதரித்துப் பேசியது யாருடைய நாக்கு யாருடையது?

- இப்படி தொடர் துரோகம் கொண்டதுதான் பழனிசாமியின் வரலாறு.

இந்தியாவில் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்த ஒரே கட்சித் தலைவர் பழனிசாமிதான். 'மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக விவாதம் நடத்தத் தயார்' என்று சவடால் விட்டவர்தான் பழனிசாமி. டெல்லியில் போராடும் விவ- சாயிகளை 'புரோக்கர்' என்ற புரோக்கர்தான் பழனிசாமி.

குடியுரிமைதிருத்தச் சட்டமே அ.தி.மு.க. வாக்களித்ததால்தான் நிறைவேறியது. '

எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்? காட்டுங்கள்' என்று வாய்ச்சவடால் விட்டவர் அவர்தான்.

இப்போதுகூட, தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்திருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை பழனிசாமி கண்டித்தாரா? அது யாருடைய நிதி? தி.மு.க.விற்கு வர வேண்டிய நிதியா?

 நம் மாணவர்களின் கல்வி நிதிதானே! நியாய- மாக எதிர்க்கட்சித் தலைவராக என்ன செய்திருக்க வேண்டும்? அரசின் ஒன்றிய செயலை கடுமையாக எதிர்க்க வேண்டும். எதிர்த்தாரா பழனிசாமி?

'மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி தருவோம்' எனப் பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் கூறுகிறார். பழனிசாமி கோபப்பட்டுப் பொங்கி எழுந்து ஒன்றிய கல்வி அமைச்சரைக் கண்டித்தாரா?

 தமிழர்களை 'நாகரிகமற்றவர்கள்' என அவமதித்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதமர் தி.மு.க. தீரத்தோடு எதிர்த்தது. பழனிசாமி 'ரெய்டு' பயத்தோடு பதுங்கினார்!

பழனிசாமியின் துரோக வரலாற்றை விவாதம் நடத்தித்தான் வெளிச்சம் போட வேண்டுமா? : முரசொலி!

'அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழிக்கு இல்லம் எதற்கு?' எனப் பாடினார் எம்.ஜி.ஆர். கோழி பழனிசாமியின் உடம்பில் ஓடியது அடிமை ரத்தம்தானே!

மக்களாட்சியை ஒழித்து, சர்வாதிகார அதிபர் ஆட்சியைக் கொண்டுவரத் துடிக்கும் பா.ஜ.க.வின் மறைமுகச் சதித்திட்டம்தான் ஒரே நாடு -ஒரே தேர்தல். இந்தத் திட்டத்தை முதன்முறையாக மோடி அரசு கொண்டு வர முயன்றபோது, ​​அம்மையார் ஜெயலலிதா உயிருடன்தான் இறந்தார்.

 2915-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தார், நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அ.தி.மு.க. அறிக்கையே வழங்கியது. அதன்பிறகு பழனிசாமி அவர்கள் ஆட்சியில் அமர்ந்தபோது, ​​'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மீண்டும் கொண்டுவர முயன்றார் பிரதமர் மோடி. இதை 2018 ஆம் ஆண்டு எதிர்த்தார் பழனிசாமி.

2021 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடந்தால் தனது பதவி முன்கூட்டியே போய்விடும் என்று பயந்தார் பழனிசாமி.

2018 ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில் டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக் கட்சிகளும் 59 மாநிலக் கட்சிகளும் பங்கேற்றன. அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையும் சி.வி. சண்முகமும் கலந்து கொண்டார்கள். 

அந்தக் கூட்டத்திற்கு முன்பாகவே 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' திட்டத்திற்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 2018 ஜூன் 29-ஆம் தேதி சட்ட ஆணையத்திற்கு அன்றைக்கு ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கி- இணைப்பாளராகவும் இருந்த பன்னீர் செல்வமும் பழனிசாமியும் சேர்ந்து கடிதம் எழுதினார்கள். 

அதில், 'ஒரேநாடு- ஒரே தேர்தலுக்கு' எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு, தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தைக் குறைக்கும் வகை - யில் எந்த மாற்றமும் கொண்டுவரக் கூடாது எனவும் சொன்னார்கள். 

அவர்களுடைய ஆட்சிக்கு எந்தப் பங்கமும் வராமல் பார்த்துக் கொண்டார்கள். தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு அப்படியே பல்டி அடித்தார் பழனிசாமி. ஆதரித்துக் கொண்டிருக்கிறார்.

பழனிசாமிக்குப் பதவி கொடுத்தது சசிகலாதான் என்பது ஊரறிந்த உண்மை. 'நீ ஏன் கட்சியைச் சொந்தம் கொண்டாடுகிறாய்? 

நீ எனக்குப் பதவி கொடுத்தியா?' என்று கேட்ட துரோகி தான் பழனிசாமி. இந்தத் துரோகப் படலத்தை எல்லாம் பட்டிமன்றம் வைத்துத் தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?

                                                       நன்றி; முரசொலி


2025-2026 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மொத்த வருவாய் ரூ.3.31 லட்சம் கோடி யாக இருக்கும். இதில், சொந்த வரி வரு வாய் ரூ.2.20 லட்சம் கோடியாக உயரும்  என மதிப்பீடு. வரியில்லாத வருவாயாக ரூ.28,818 கோடி கிடைக்கும் என மதிப்பீடு.

 ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதிப் பங்கீடு  ரூ.58.021 கோடியாக மதிப்பீடு. ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் மானியங்கள்  வரும் நிதியாண்டில் ரூ.23,834 கோடியாக இருக்கும் என மதிப்பீடு. செலவினம் மொத்த செலவினம் ரூ.373 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

பொது கடன் வட்டி செலவினம் ரூ.70,753 கோடியாக இருக்கும். மானியங்கள் உள்ளிட்ட செலவினங்கள் ரூ.1.53 லட்சம் கோடியாகவும், ஓய்வூதியம் வகை செலவினமாக ரூ. 41,290 கோடி இருக்கும் என மதிப்பீடு மூலதனக் கணக்கு 2024-25 நிதியாண்டில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.46, 766 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில் இது ரூ.57,230 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,634  கோடியாக இருக்கும் என மதிப்பீடு. துறை வாரியாக நிதி ஒதுக்கீடு உயர் கல்வித்துறைக்கு ரூ.8,494 கோடி  பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி  நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி  இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.572 கோடி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,975 கோடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு. முக்கிய திட்டங்கள் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூன்றாம் பாலி னத்தவர்க்கும் விரிவுபடுத்தப்படும். 10 இடங்களில் ரூ.77 கோடியில் தோழி விடுதி அமைக்கப்படும்.

880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம்  உயர்த்தப்படும். 2,676 பள்ளிகளில் வகுப்பறைகள் ரூ.65 கோடியில் தரம் உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள் பராமரிப்புக்கு அன்புசோலை மையங்கள் அமைக்கப்படும். முதல்வரின் காலை உணவு திட்டம், நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய ரூ.600 கோடி ஒதுக்கீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும். 

அரசு பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு. ஆசியாவிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் மாற்றப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு. ட்ரோன் தொடர்பாக புதிய பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். 

தமிழகத்தில் அனைத்து வகை அரசு கல்லூரிகளின் மேம்பாட்டுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு 8 மாவட்டங்களில் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும். 2025-26 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2500 கோடி கல்விக் கடன் வழங்கப்படும். காஞ்சிபுரம் புற்றுநோய் மையத்தை மேம்படுத்த 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இராமதாதபுரத்தில் நாவாய் அருட்காட்சியகம் அமைக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு அனைத்து நகர்ப்புறங்களிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.3,700 கோடி ஒதுக்கீடு முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் 6,100 கி.மீ., நீள சாலைகள் மேம்படுத்தப்படும்; இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் கட்டி தரப்படும். 

ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டப்படும். ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்கப்படும். ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக் குழாய்த் திட்டத்திற்கு ரூ.2,423 கோடி ஒதுக்கீடு.

 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ.6,668 கோடி ஒதுக்கீடு. மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு. 10 ஆயிரம் பெண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்படும்.

 இதற்கு ரூ.37 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கு சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.

ஆடு 10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலை ஞர்கள் பயன்பெறும் வகையில் 74 கோடி ரூபாய் மானிய நிதி  ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?