நிதி நிறுத்தமே நோக்கம்?

 கல்வித்துறையில் தமிழ்நாட்டிற்கான 2154 கோடியை நிறுத்தியது ஏன்? என்கிற எனது கேள்விக்குபாஜகவின் தொலைக்காட்சி பங்கேற்பாளர்கள் போலவே பாராளுமன்றத்தில் பதில் சொல்லியுள்ளார் அமைச்சர்.

நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி தருவது நோக்கம் என்கிறார்.

ஆனால் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு மட்டும் நிதியை நிறுத்துகிறார்.

இது தான் இவர்களது சொல்லும், செயலும்.

இழைத்த அநீதியை மறைக்கும் ஒன்றிய கல்வி அமைச்சர்

எனது நாடாளுமன்ற கேள்விக்கு திசை திருப்புகிற பதில்

நாடாளுமன்றத்தில் நான் சமக்ரா சிக்சா அபியான் திட்டத்திற்கான ரூ 2154 கோடி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பது பற்றிய கேள்வி (எண் 2666/ 17.03.2025) ஒன்றை எழுப்பி இருந்தேன். 

தமிழ்நாட்டுக்கு ரூ 2154 கோடிகளை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்து இருக்கிறதா? ஏன் நிறுத்தப்பட்டுள்ளது? தேசிய கல்விக் கொள்கையின் பகுதியாக இந்தியைத் திணிக்க முயற்சிப்பது மொழி பன்மைத்துவத்திற்கு எதிரானது இல்லையா? கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மாறானது இல்லையா என்றெல்லாம் கேட்டிருந்தேன். 

இதற்கு பதில் அளித்த ஒன்றிய கல்வி இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கொண்டு போய் சேர்க்கும் இலக்கை கொண்டது என்று சிலாகித்து சமக்ரா சிக்சா அபியான் பற்றியும் விலாவாரியாக தெரிவித்துள்ளார். 

2023 - 24 இல் ரூ 1876 கோடி தமிழ்நாட்டிற்கு தரப்பட்டது என்றும், 2024 - 25 க்கு 4305 கோடி நிதிக்கு திட்ட ஒப்புதல் குழு இசைவு தந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தாய்மொழி கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் தருவதாகவும், மும்மொழிக் கொள்கையானது கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமலாக்கப்படும் என்றும், எந்த மொழியும் மாநிலத்தின் மீது திணிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் தெரிவின் அடிப்படையிலேயே மொழிகளை அவர்கள் கற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

பாஜகவின் தொலைக்காட்சி பங்கேற்பாளர்கள் போலவே அமைச்சர்களின் நாடாளுமன்ற பதில்களும் அமைந்து வருகிறது என்பதன் வெளிப்பாடே இது. கேட்கிற கேள்விகளை விட்டு விட்டு எதையோ சொல்லி திசை திருப்புவது, உண்மையை மறைத்து தகவல்களை தருவது என்ற உத்திகளை நாடாளுமன்ற பதில்களிலும் கடைப்பிடிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றுவதாகும். 

தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை அமலாக்குவதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் நிதியை நிறுத்தி இருக்கிறோம் என்பது குறித்த ஒரு வார்த்தை கூட அமைச்சரின் பதிலில் இல்லை. தாங்கள் செய்ததை வெளிப்படையாக அவர்களால் சொல்ல முடியவில்லை. முழுப் பூசணிக்காய் சோற்றுக்குள் இருந்து சிரிக்கிறது. 

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை தருவது என்று சொல்லிவிட்டு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைப்பது என்கிற முரண் எவ்வளவு மோசடித்தனமானது, குரூரமானது, மக்களை ஏமாற்றுவது! இந்தியைத் திணிக்கவில்லை என்று அமைச்சர் தருகிற விளக்கம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாக இருக்கும். 

இந்தி திணிப்பை நியாயப்படுத்தி தினந்தோறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் தொடர்ந்து

பேசிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தி தெரியாவிட்டால் பேல் பூரி கூட சாப்பிட முடியாது என்ற அளவிற்கு அவர்களுடைய விவாத தரம் இருக்கிறது. 

தமிழ்நாட்டில் உள்ள எல்லா குழந்தைகளும் தமிழ் மொழியில் படிக்கலாம் என்று அமைச்சர் சொல்கிறார். அப்படியானால் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் இருந்து தானே முதலில் தாய்மொழிக் கல்வி துவங்கி இருக்க வேண்டும்! ஒத்திசைவு பட்டியலில் உள்ள கல்வி சம்பந்தமான முடிவுகளை ஒன்றிய அரசு தன்னிச்சையாக எடுக்கலாமா என்ற கேள்விக்கும் அமைச்சரிடம் விடை இல்லை. 

எங்கு கேட்டாலும் பொறுப்பான பதில் கிடைக்காது என்கிற ஒன்றிய ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத அணுகுமுறையின் உச்சம் நாடாளுமன்றத்திலும் வெளிப்பட்டுள்ளது. 

                                       சு. வெங்கடேசன் எம்.பி,






ஐசிஎஃப் யாரோட நிறுவனம்..?
ஒன்றிய அரசோட நிறுவனம்..

இந்திய ரயில்வே யாரோட நிறுவனம்..?
ஒன்றிய அரசோட நிறுவனம்..

இப்ப வந்தே பாரத்.. நமோ பாரத்னு நிறைய ரயில்கள் விடுறாங்க.. அந்த ரயில்களுக்கு பெட்டிகளை எல்லாம் தயாரிக்கிறது யாரு..?

ஐசிஎஃப்..

ஆனா ரயில்வே துறை யாருகிட்ட இருந்து அந்த பொட்டியை எல்லாம் வாங்குது.?

தனியார் நிறுவனம் கிட்ட இருந்து..

அதாவது ஐசிஎஃப் தயாரிக்குது. அதை ரயில்வே வாங்குது.. 

ஐசிஎஃப் எம்புட்டுக்கு தயாரிக்குது..?
எழுவது கோடிக்கு.. 
ஆனா பன்னாட்டு  கார்ப்பரேட் அல்லது தனியார் முதலாளிகள் அந்த எழுவது கோடிக்கு ஐசிஎஃப்கிட்ட இருந்து வாங்கி ஒன்றிய ரயில்வேக்கு எம்புட்டுக்கு விக்குது..? 

நூத்தி இருவது கோடிக்கு..  அதாவது ஒரு பொட்டிக்கு அம்பது கோடி அதிகம்.. 

இது வரைக்கும் என்ன நடந்துக்கிட்டு இருந்துச்சு..?

ஐசிஎஃப் தயாரிச்சு குடுத்துச்சு.. அதை ஒன்றிய ரயில்வே துறை நேரடியா வாங்கிச்சு.. 

இப்ப..?

ஐசிஎஃப்தான் தயாரிக்குது. ஆனா அதே பொட்டிய ஒன்றிய ரயில்வே துறை தனியார்கிடட இருந்து அம்பது கோடி எக்ஸ்ட்ரா குடுத்து வாங்குது..

இதுக்குப் பேரு என்னப்பா..?

தனியார் மயம்.

இல்லப்பா.. இதுக்குப் பேரு ஊழல். பச்சை அயோக்கியத்தனமான ஊழல்.. அதானே. பாரத்னு பேரு வச்சு இந்த டிமோ அரசு எது பண்ணாலும் அதுல ஊழல் இல்லாம எப்புடி இருக்கும்..? மொத்தம் எம்புட்டு தொகை ஊழல்..?

அது கெடக்கும் 10 வருசத்துல அம்பதாயிரம்  கோடி ரூவா ஊழல்..

ஆனா ஊழல் கட்சின்னா யாரு..?
தி. மு. க தான்..!! 

நீ யாரு..?
வலதுசாரி சிந்தனையாளர்...!!
போ... போய் ஓரமா ஒக்காந்து ஊர உறுப்புடாம பண்ணு...

நான்கு முதல்வர்கள்!

2026 ம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 

அக்கூட்டத்தில் இப்பிரச்சினை தொடர்பாக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைக்கப்பட்டுள்ளது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைத்ததும் தலைவர் தீர்மானிக்கப்பட்டது.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு : முதலமைச்சரின் தலைமையில் கூடும் அகில இந்திய தலைவர்கள் !

அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகள் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார்.

 அதோடு தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.பிக்கள் பிற மாநில அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து இந்த கூட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து , தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 22-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டுக்குழு கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

 மேலும், பிஆர்எஸ், காங்கிரஸ், அகில இந்திய முஸ்லீம் லீக், திரிணாமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?