நான் ஆணையிட்டால்,.?

 படித்து தெரிந்து கொள்ளுங்கள் கலைஞரை விமர்சிக்கும் தற்குறிகள்

கலைஞருக்கு எதிராக சர்க்காரியா கமிசன் மட்டுமே. 

ஆனா MGR-க்கு எதிராக பால்கமிசன், ரே கமிசன் எரிசாராய முறைகேடு, மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு, ராபின் மெயின் முறைகேடு, பாஸிச அடக்குமுறை ஆட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள், பொருளாதார நாசம், பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு, நீதித்துறை மிரட்டல் என எண்ணற்ற குற்றச்சாட்டுகள். 

ஆனால் எதுவுமே பேசப்படவில்லையே; ஏன்? 

இவர் சினிமாவில் நடிகராக  உத்தமர், வீரர், மக்கள் போராளிகுடியை எதிர்ப்பவர் என பல வேசங்களில் வலம் வந்தவர்.

ஆனால் உண்மையில் அவர் யார்?

திமுகவின் பொருளாளராக அனைத்து அதிகாரத்துடன் இருந்த MGR கணக்கு கேட்டாராம். ஆனா கலைஞர் கணக்கு தரவில்லையாம். அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களாம். வேடிக்கையா இருக்குமே…?!

ஆனால் ஊரெல்லாம் இதே பேச்சு தான் எல்லோரும் நம்பினர். ஆனா இந்திராவின் மிரட்டல் தான் MGR ன் இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் காரணம்.

MGR ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி. மத்தியில் யார் பிரதமரோ, யாரிடம் வருமான வரித்துறை இருக்கிறதோ அவர்களை கண்டாலே நடுக்கம் தான். அப்படித்தான் இந்திராவின்அடிமையாக மாறி திமுகவை பிரித்தார். MGR ன் அடிமைத்தனத்தால் கச்சத்தீவை இந்திரா கொடுத்த போது திமுக மட்டுமே அதை எதிர்த்தது. அதிமுக அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டது. 

சட்டமன்ற  தீர்மானத்தை கூட ஆதரிக்கவில்லை. 2016ல் C1 சட்டமன்றத்தில் கச்சத்தீவை பற்றி வாய்கிழிய பேசிய போது

MGR ன் கோழைத்தனத்தை பற்றி பேசாதது ஏன்? மேலும் C1 பேசும் போது 2008ல் தான் கச்சத்தீவை மீட்க வழக்கு போட்டதாக சொல்லியிருக்கிறார்.

1977 ல் ஆட்சிக்கு வந்த MGR ஏன் வழக்கு போடவில்லை? 

1991ல் C1 ஆட்சிக்கு வந்ததும் ஏன் வழக்கு போடவில்லை? 

ஏனென்றால் இதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலைஎன்பது C1க்கு நன்கு தெரியும். இனி கச்சத்தீவை மீட்க வழியே இல்லை. 1974 ல் திமுகவுடன் காங்கிரஸ் மற்றும் அதிமுக சேர்ந்து மத்திய அரசின் முடிவை எதிர்த்திருந்தால் அப்போதைய கச்சத்தீவு தாரை வார்ப்பை தடுத்திருக்கலாம். 

ஆனா அப்போது பொத்திக்கொண்டு இருந்த அதிமுகவும் C1யும் பின்னர்வாய்கிழிய பேசியது உச்சகட்ட நகைச்சுவை.

1976ல் எமர்ஜென்சி நேரத்தில் கலைஞர் மீது எண்ணிலா வழக்குகளை போட்டார் இந்திரா. அவரது நோக்கம் கலைஞரை ஊழல்வாதியாக ஒரு பிம்பத்தை உருவாக்குவதே. 

அத்தனை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் 2G விவகாரத்தை எப்படி ஊதிஅன்றும் அவாள் சார்பு பத்திரிக்கைகள் தினம் தினம் சர்க்காரியா விசாரணை செய்திகளை பரப்பின. எமர்ஜென்சி என்பதால் ஒரு தரப்பான கலைஞருக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டது. கலைஞர் தரப்பு நியாயங்கள் மக்களுக்கு போய் சேராமல் பார்த்துக்கொண்டன. 

மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் பெருக்கினார்களோ அதே மாதிரி தான்அப்படியே நம்பினார்கள். இன்றும் கலைஞர் மீது அன்று குத்தப்பட்ட ஊழல் முத்திரை விலகவில்லை. 

ஆனால் இறுதிவரை சர்க்காரியா கமிசனால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் மக்களிடத்தில் திமுக மீது வெறுப்பு வந்தது. 

விளைவு.

1977ல் அதிமுக + இந்திரா கூட்டணி பெரும் வெற்றி. ஆனால் ஒன்றியத்தில்காங்கிரஸ் தோல்வி. வழக்கம் போல வடிகட்டிய கோழை MGR ஒன்றிய அரசு பக்கம் சாய்ந்ததுடன் தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார்.

ஒன்றிய அரசுக்கு பயந்துக்கொண்டு தஞ்சை MP இடைத் தேர்தலில் இந்திரா போட்டியிட விரும்ப, MGR அதை ஏற்கவில்லை. இந்திரா கர்நாடகா சிக்மக்ளூரில் நின்று வென்றார்.

ஒன்றிய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக தன்னை நிராகரித்த கோழை MGR மீது கடும் கோபம் கொண்ட இந்திரா, தான் கலைஞருக்கு செய்த கொடுமைகளுக்கு வருந்தி கலைஞருக்கு தூது அனுப்பி பின்பு மெரினாவில் மக்களிடம் தனது ஆட்சியின் எமெர்ஜென்சி கால தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்க திமுக-காங்கிரஸ்உறவு ஏற்பட்டு 1980 ல் தமிழகத்தில் ஒரு இடம் தவிர அனைத்து MP தொகுதிகளிலும் அந்த கூட்டணி வென்றது. 

ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் MGR மீண்டும் வெல்ல, அதன் பிறகே MGR ன் உண்மை முகம் வெளியானது

-நந்தினி(டுவீட்டரில்)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?