ஒட்டுமில்லை-உறவும் இல்லை.
ஜெர்மன் நாட்டில் தனியார் நிறுவனம் விண்ணில் செலுத்திய ராக்கெட் சில நொடிகளில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.ஆனாலும் இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிப்பு.
தமிழ்நாட்டின் 2024-25 GDP சுமார் $377 பில்லியன். சிங்கப்பூர் ($466 பில்லியன்), டென்மார்க் ($395 பில்லியன்) ஆகியவை நெருக்கமானவை, ஆனால் சரியாகப் பொருந்தவில்லை. நியூசிலாந்து ($249 பில்லியன்), ஹங்கேரி ($188 பில்லியன்)
உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகளை பணியிட மாற்றம் .


ஒட்டுமில்லை-உறவும் இல்லை.
பாஜகவோடு எந்த ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. இனி எந்த காலத்திலும் அவர்களோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று சொல்லிக்கொண்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அப்படியே அலேக்காக சில நாட்களுக்கு முன்னர் பல்டி அடித்தார். சேலத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த பிரஸ்மீட்டில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதை இன்னும் 6 மாதம் கழித்து வந்து கேளுங்கள் என்றார்.

இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கட்சி நிர்வாகிகளே அதிர்ச்சிக்குள்ளாகியினர். எடப்பாடியின் திடீர் பாஜக பாசத்திற்கு என்ன காரணம் என அவர்கள் துலாவத் தொடங்கினர்.
இந்நிலையில், சட்டப்பேரவை நடந்துக்கொண்டிருக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி புறப்பட்டார். டெல்லி விமான நிலைய வாசலில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டதற்கெல்லாம், ‘நான் எதுக்கு வந்துருக்கேன்னு தெரியாமயே கேக்குறீங்க, அதிமுக அலுவலகத்தை பாக்கத்தான் வந்தேன்.
வேற எதுக்கும் வரல’ என்று மழுப்பாலான பதிலை அளித்துவிட்டு சென்றவர். அன்றைய மாலையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தன்னுடைய அதிமுக நிர்வாகிகள் பட்டாளத்துடன் சென்று பார்த்து, பொன்னாடை போர்த்திவிட்டு திரும்பினார்.
அமித் ஷாவை பார்க்க வந்திருக்கிறேன். மக்கள் பிரச்னைக்காக செல்கிறேன் என்று கூட அதை வெளிப்படுத்தாத எடப்பாடி, அவரை சந்தித்த பிறகு பழைய பஞ்சாங்கத்தை வாசிப்பது போல, மக்கள் பிரச்னை, அது, இது என ஏகத்திற்கு எதை,எதையோ பேசினார்.
ஆனால், அவரின் இந்த டெல்லி பயணம், அதிமுகவினர் பலரை அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.
மத்தியில் பவரில் இருக்கும் பாஜக-வை லெஃப்ட் ஹேண்டில் எடப்பாடி டீல் செய்கிறார். அவர் சமரசம் இல்லாமல் பாஜகவை எதிர்க்கிறார். எதற்கும் அஞ்சாவதவர் என்றெல்லாம் அவரை சுற்றி கட்டமைக்கப்பட்ட ஃபர்னிச்சர்களையெல்லாம் சல்லி, சல்லியாக அவரது டெல்லி பயணம் உடைத்துப் போட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், அதிமுக மூத்த தலைவரும் எடப்பாடிப் பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பவருமான செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணப்பட்டார். இந்த பயணத்தை எடப்பாடி உள்பட எந்த நிர்வாகிகளும் எதிர்பார்க்கவில்லை.
செங்கோட்டையன் டெல்லி செல்லவில்லை. அவர் டெல்லி சென்றதாக கூறுவது எல்லாம் பொய் என சிலர் கம்புச் சுத்தினாலும், அவர் அங்கு சென்றதும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததும் உண்மை என தெரியவர,

அமித் ஷாவை சந்தித்து பேசிய வந்த பிறகும் எடப்பாடி பழனிசாமி அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவில்லையென்றால், அவருக்கு செங்கோட்டையனை வைத்து கட்டம், கட்டும் முடிவை எடுத்தது பாஜக. ஜெயலலிதாவோடு ரத்தமும் சதையுமாக இருந்த சசிகலாவையே அந்த கட்சியில் இருந்து பிரித்து தூக்கியெறிய காரணமாக இருந்த பாஜகவிற்கு, சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி எம்மாத்திரம் ?
கூட்டணியை அறிவிக்கும் முன்னரே, எடப்பாடி பழனிசாமியை ஆழம் பார்க்க நினைத்த பாஜக, வரும் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிடம் இருந்து ஒரு ராஜ்ஜியசபா சீட்டை தரும்படி கேட்டுள்ளது.
அதை எடப்பாடி பழனிசாமி கொடுத்துவிட்டால், கூட்டணி தேதியை பின்னர் அறிவிக்கலாம், இல்லையென்றென்றால் செங்கோட்டையனை வைத்து பிரிவு தேதியை அன்றே அறிவிக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறது பாஜக.
ஒருவேளை எடப்பாடி பழனிசாமி தன்னை ஜெயலலிதா போன்ற ஆளுமை நிறைந்த தலைவராக கருதிக்கொண்டு, பாஜகவை கிள்ளுக் கீரையாக நினைத்து ராஜ்ஜியசபா சிட்டெல்லாம் தர முடியாது என்று கூறினால், செங்கோட்டையன் பிரிவு மூலம் பாஜக, பாமக எம்.எல்.ஏக்களை வைத்து ராஜ்ஜியசபா சீட்டை பெற்றுவிடலாம் என்ற முடிவில் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தேசியத் தலைவர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.