கடனாளியாக்கியது யார்?

 சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: ஆதரவு - 63; எதிர்ப்பு - 154; பாஜ, பாமக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

நடிகர் விஜய் நல்ல சம்பவம் செய்வார் என்பதற்கான இரண்டு உதாரணங்கள்:

சம்பவம் 1: 2012-ம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார். ஆனால், இதற்கான 'நுழைவு வரியை' அவர் செலுத்த வில்லை. 

இந்த வரியை செலுத்த வணிக வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

"நான் எதுக்கு வரி செலுத்த வேண்டும்? நான் யார் எனக் காட்டுகிறேன்" என கோபப்பட்டு நுழைவு வரிக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். ஆனால், அந்த மனுவில் தன்னுடைய 'நடிகர்' தொழிலை அவர் குறிப்பிடாமல் மறைத்து விட்டார்.

இந்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி சுப்பிரமணி.

அவர், "மனுதாரரின் தொழில் என்ன"? எனக் கேட்க, அதற்கு விஜய் வழக்கறிஞர் "நடிகர்" என வாய்வழியாக கூறியுள்ளார்.

"நுழைவு வரியை செலுத்த மாட்டேன் எனக் கூறியது மட்டுமில்லாமல் அவருடைய தொழிலையும் நீங்க மறைக்கிறீர்கள். உச்ச நடிகராக இருக்கும் விஜய் படத்தில் மட்டும் தான் ஹீரோவாக இருப்பாரா.?

நிஜத்தில் ஹீரோவாக இருக்க மாட்டாரா.?

வரி என்பது விஜய் அளிக்கும் நன்கொடை இல்லை. அவர் விருப்பத்திற்கு கொடுக்க முடியாது என மறுப்பதற்கு. அது அரசுக்கு கட்டாயம் செலுத்த வேண்டியது என விஜய்க்கு தெரியாதா? 

வரி செலுத்தாமல் தவிர்ப்பது தேச துரோகம். இந்த குற்றத்திற்காக அபராதம் உண்டு.

விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். இதனை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் செலுத்த வேண்டும்" என நீதிபதி தீர்ப்பளித்தார்.

சம்பவம் 2: 2015-ல் 'புலி' படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் வருமானத்தில் காட்டாமல் 15 கோடியை சார் மறைத்ததை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்த விவகாரம் தான் 'மாஸ்டர்' பட ஷூட்டிங் போது அவர் ஐ டி அதிகாரிகளால் காரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

விஜய் வீட்டில் நடத்திய சோதனையில் அவர் 15 கோடிக்கு வரி செலுத்தாமல் தேசத் துரோகம் செய்தது நிரூபனமானது. இந்த குற்றத்திற்காக விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதே விவகாரத்தில் 'புலி' பட தயாரிப்பாளரான பிடி செல்வக்குமார் வீட்டில் சோதனை செய்ய தீர்மானித்தபோது அவர் பயந்து ஓடி பாஜக கட்சியில் சேர்ந்துக் கொண்டார்.இப்போது விஜய் பாஜக வால் இயக்கப்பட இதுவும் ஒரு காரணி.

ஆக, நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு தேச துரோக வரலாறு(கள்) இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

திரையில் ஹீரோவாகவும், நிஜத்தில் தேச துரோகியாகவும் இருக்கும் விஜய் திமுக அரசை குறை கூறலாமா?

Ragupathi R





கடனாளியாக்கியது யார்?

அதிமுகவினர் ஆட்சியை விட்டு செல்லும்போது 4 லட்சத்து 80 ஆயிரத்து 300 கோடி கடன் வாங்கினார்கள் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். இது குறித்து அவர், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைவாக பேசக்கூடிய நிலையில், தமிழ்நாடு இரண்டு மடங்காக வளர்ந்து இருப்பது நமது முதலமைச்சரின் நடவடிக்கையே காரணம்.

இந்தியாவில் இரண்டாவது மாநில பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவில் பொருளாதாரத்தில் மற்ற மாநிலங்கள் தடுமாறிக் கொண்டிருந்தபோது, ​​தமிழ்நாட்டில் முதலமைச்சர் பொறுப்பேற்றபோது, ​​ஒரு வலுவான கட்டமைப்பு அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு தற்போது 14.5% வளர்ச்சி பெற முதலமைச்சர் அவர்களின் திட்டங்கள் தான் காரணம்.கடன் வாங்குகிறீர்கள் கடன் வாங்குகிறீர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் தான் கடன் பெறப்பட்டது. தற்போது 8 லட்சத்து 30 ஆயிரம் கோடி தமிழ்நாடு கடன் வாங்கி உள்ளது.

"தமிழ்நாட்டின் கடன் உயர அதிமுக ஆட்சியே காரணம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் !

2011-2016 அதிமுக ஆட்சியில் தொடக்கத்தில் 2,11,866 கோடி கடன் வாங்கப்பட்டது.

2016-2021 கழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி 4 லட்சத்து 80 ஆயிரத்து 300 கோடி கடன் வாங்கினார். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையவில்லை. கடன் வாங்குவது தான் வளர்ச்சி அடைந்தது

திமுக ஆட்சிக்கு வரும்போது நெருக்கடி இருந்தது. எனினும் 93 சதவீதம் தான் இந்த ஆட்சியில் கடன் வாங்கி உள்ளோம்,. அதே அதிமுக ஆட்சியில் 128% கடன் வாங்கி இருக்கிறீர்கள்.நீங்கள் கடன் உயர்வுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.

உரிமையை கேட்டதற்காக ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கவில்லை, மாநில அரசு அந்த நிதியை ஏற்றுக்கொண்டது. வாங்கிய கடன் முறையாகவும் சீரான முறையில் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும்,சமூக நல திட்டத்திற்காக, மக்களின் திட்டத்திற்காக வாங்கப்பட்டது"என்று கூறியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?