அது என்ன நாக்பூர் திட்டம்?

பாஜகவிடம் கட்சியை முழுமையாக அடமானம் வைத்திருக்கின்ற ஜெயக்குமார் போன்ற அதிமுகவினருக்கு சுயமரியாதை என்பது அறவே பிடிக்காத ஒன்று - அமைச்சர் சேகர்பாபு.

'எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன், உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா?'-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால்.
லண்டனில் எந்த மொழியில் பேசினீர்கள்?படித்தீர்கள்? - பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி.
குட்கா வழக்கில் முன்னால் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ்-யிடம் குற்றப்பத்திரிக்கை நகலை வழங்கியது சென்னை சிறப்பு நீதிமன்றம்..! 

என்ன Mr. ஜார்ஜ் அந்த வார்த்தை ஞாபகம் இருக்க..? அதான் அதிகாரபோதையில் சென்னை மத்தியச் சிறைச்சாலை வாசலில் நீங்கள் தலைவர் கலைஞரைப் பார்த்து சொன்ன அந்த வார்த்தை.

ஜீன் 30-  2001 அன்று நள்ளிரவில் கோபாலபுரத்தில் திபுதிபு வென நுழைந்து அப்போதைய வயது வித்தியாசம் பார்க்காது  கைது செய்து இழுத்து சென்றீர்களே.! அப்போதைய சென்னை மாநகர கமிஷ்னர் முத்துகருப்பன், தமிழ்நாடு டிஜிபி ரவீந்த்ரநாத்,  துணை கமிஷ்னர் ஜார்ஜ்.

உதவி கமிஷ்னர் (AC) முருகேசன் ஆகியோருக்கு அடங்காத வெறியாட்டம்...! கலைஞரின் தோல்பட்டையை அழுத்தி அவருக்கு கழுத்து வலி வரவழைத்த முருகேசனை கூட பின் நாளில் பத்திரிக்கையாளருக்கு பதில் அளித்த கலைஞர் அவர் பெயர் முருகேசன் அல்ல முறுக்(கும்) கேசன் என புன்முறுவலோடு பதிலளித்த அந்த தலைவனைசென்னை சிறைச்சாலை வாசலில் அமர்ந்திருந்த போது கலைஞருடைய குடும்ப மருத்துவர் கோபாலன் "அவருக்கு கழுத்துப்பட்டையில் வலி இருக்கிறது" என்றார்..! அதற்கு ஜார்ஜ் என்ன வார்த்தை கூறினார் தெரியுமா?

 "அதற்கென்று பட்டு மெத்தையில படுக்க வைக்க முடியும்.!" கலைஞர் ஜார்ஜை பார்த்து ஒரே ஒரு புன்முறுவல் 

2006 ஆட்சி மாறியது சென்னை சிட்டி  கமிஷ்னர் முத்துகருப்பன் கலைஞர் காலடியில் வந்து விழுந்தார்...! ஜெயலலிதாவின் பேச்சை கேட்டு மதி இழந்தேன் என்றார்..! 2008 ஆம் ஆண்டு கும்பகோண அரசு தலைமை போக்குவரத்துக் கழக கண்காணிப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்தவர் கலைஞர்..!

DIG (CBCID) முகமது அலி பின்னாளில் முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்..!

 டிஜிபி ரவீந்தர நாத் இளம்பெண்களை வீடியோ எடுத்த வழக்கிலும், பலமுறை ராஜினாமா கடிதம் எழுதி புகழ்பெற்றார்..! பார்ப்பனீய வக்கிர புத்தியில் விழுந்த கடைசி அதிகாரி நீங்கள் மட்டும் தான்.

ஜார்ஜ் அவர்களே..! இன்று குட்கா வழக்கில் சின்னாபின்னாமாகி  இருப்பதை பார்க்கும் கடைகோடி தொண்டனில் ஒருவனாக நிச்சயம் பெருமை கொள்கிறேன்..! பார்ப்பானியம் தன் வேலை முடிந்தவுடன் கைவிடும் என்று உணர்ந்திருப்பீர்கள் திரு.ஜார்ஜ் அவர்களே..! 

அங்கே கலைஞர் சிரிக்கிறார்.



"ஆமா.சமஸ்கிருதம் படித்தால் கோவில்ல மணியடிச்சு தட்டுல ரொம்ப பிச்சை கிடைக்கும்.'


அது என்ன நாக்பூர் திட்டம்?


பா.ஜ.க.வுக்கு இரண்டு தலைமைகள் உள்ளன. ஒன்று பா.ஜ.க. தலைமை. இன்னொன்று ஆர்.எஸ்.எஸ். தலைமை.


ஆர்.எஸ்.எஸ். தலைமையை மீறி பா.ஜ.க. தலைமையால் எதுவும் செய்ய முடியாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் தான், பா.ஜ.க.வின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவார்கள். இத்தகைய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகம் நாக்பூரில் அமைந்திருக்கிறது.

சாதிப் பாகுபாட்டை முழுக்க முழுக்க நியாயப்படுத்தும் அமைப்பு இது. சாதிப் பிரிவு என்பதையே 'வர்ண வியாவஸ்தா' என்று சொல்லிக் கொள்வார்கள். 'இது ஒரு சமூக அமைப்பு. சமூக ஏற்றத்தாழ்வல்ல. நான்கு சமூகப் பிரிவுகளும் அவரவர் சக்திக்கேற்ற கடமைகளைச் செய்வதன் மூலம் கடவுளை வணங்கலாம் என்பதுதான் இதன் தத்துவம். இது ஏற்றத்தாழ்வு அல்ல' என்று சொன்னவர் கோல்வால்கர்.


சாதி அமைப்பு முறைதான் இந்தியாவைக் காப்பாற்றுவது என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். 'சாதி அமைப்பு முறையானது சமூகத்தில் ஒற்றுமையைக் காப்பதற்கே உதவி செய்திருக்கிறது' என்று சொன்னவர் கோல்வால்கர்.


சமஸ்கிருதம் தான் ஆட்சிமொழியாக வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் அமைப்பு இது. அமைப்பின் பெயர் முதல், துணை அமைப்புகள் அனைத்தும் சமஸ்கிருதப் பெயர்களாகத் தான் வைத்திருப்பார்கள்.

கோல்வால்கர் எழுதுகிறார்; “மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது; சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்.” ('லிங்குவா ஃபிராங்கா' பிரச்சனைக்கு தீர்வாக, சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பிடிக்கும் வரை / நாம் சௌகரியத்தின் அடிப்படையில் இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்) என்பதே அவர்களின் கொள்கையாகும்.


'நாடு முழுவதும் சமஸ்கிருதத்தைகட்டாயப் பாட- மாக்க வேண்டும்' என்று ஜனசங்க தீர்மானம் போட்டுள்ளது. சமஸ்கிருத வளர்ச்சிக்காக பல்லாயிரம் கோடியை பா.ஜ.க. அரசு கொட்டிக் கொடுப்பதன் பின்னணி இதுதான்.


மாநில அரசுகளை மதிக்காமல் இன்றைய பிரதமர் மோடி நடந்து கொள்கிறார் என்றால், பிரிக்கப்பட்டதே தவறு என்பதுதான் இவர்களது கொள்கையாகும். 'இந்தியாவில் மாநிலப் பிரிவினையே கூடாது; ஒன்றிய அர-சின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா முழுவதும் இருக்க வேண்டும்' என்பது தான் இவர்களின் திட்டம் ஆகும்.


1954 ஆம் ஆண்டு மாநிலங்கள் புனரமைப்பு கமிஷன் பரிந்துரைகளைக் கடுமையாக எதிர்த்த கோல்வாக்கர், 'இதனால் நாடே சிதறிப் போய்விடும்' என்றார். "மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்காமல், அதற்குப் பதிலாக, ஒரேஅரசாங்கமே இருக்க வேண்டும்; அதுவே இப்போது அவசியம்" என்றார்.

ஆப் இந்தியா நாளேடு 26-1- 1956)


1951ஆம் ஆண்டு ஜனசங்க தேர்தல் அறிக்கையிலும், ஆர்.எஸ்.எஸ். வெளியீடான “அதன் வழிபாடு” என்ற நூலிலும், 'தனித்தனி மாநிலங்கள் கூடாது' என்ற கருத்து வற்புறுத்தப்பட்டிருக்கிறது!


'ஜனசங்கம் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தைத் திருத்திக் கூட்டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு என்று பிரகடனப்படுத்துவோம்.' என்று 1957 ஆம் ஆண்டு பாரதீய ஜனசங்க தேர்தல் அறிக்கை சொல்கிறது. (இவை அனைத்தையும் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள விடுதலை இராசேந்திரன் எழுதிய ஆர். எஸ். எஸ். ஓர் அபாயம், ராவ்சாஹேப் கஸ்பே எழுதியுள்ளார். 'ஆர்.எஸ்.எஸ். ஒரு திரைவிலக்கம் ஆகிய நூல்களைப் பாருங்கள்)


1951ஆம் ஆண்டு ஜனசங்க தேர்தல் அறிக்கையிலும், ஆர்.எஸ்.எஸ். வெளியீடான “அதன் வழிபாடு” என்ற நூலிலும், 'தனித்தனி மாநிலங்கள் கூடாது' என்ற கருத்து வற்புறுத்தப்பட்டிருக்கிறது!


இந்திய வரலாற்றை திருத்துவதற்காக 'பாரதிய இதியாஸ் சங்காலன் யோஜனா' என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இந்த நாட்டின் பூர்வீக குடிகள் ஆரியர்கள் என்ற வரலாற்றை மாற்றினார்கள்.

சாவர்கர்-கோல்வாலகர்


தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி இதைத்தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்.


நாம் சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் பற்றி பேசும் போது, ​​'சிந்து சரஸ்வதி நாகரிகம்' என்று கதை விடுவது எல்லாம் இவர்கள் தயாரித்த கட்டுக்கதை வரலாறுகள் ஆகும். தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளுக்கு சமஸ்கிருதம் தான் மூலமொழி என்றே ஒரு வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்கள்.

இவை தான் பா.ஜ.க.வின் செயல்பாட்டில் பிரதிபலிக்கும்.


'இந்தியாவுக்கு இனி குருகுலக் கல்விதான் தேவை, சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்' என்று கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியன்று ஆர். எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி சொல்லி இருக்கிறார்.


'கல்வி விஷயத்தில் மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆங்கிலேயரின் கல்வி முறையை இந்தியா தழுவி இருக்கக் கூடாது. நாட்டு நலனுக்கு அக்கறை செலுத்தும் வகையில் குருகுலக் கல்வி முறைக்கு மாற வேண்டும்.


சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய். இந்தியாவைப் புரிந்து கொள்ள சமஸ்கிருதமே தேவை. அதனைக் கட்டாயமாக்க வேண்டும்” என்று கோவா டோனாபவுலாவில் நடந்த நிகழ்ச்சியில் சுரேஷ் ஜோஷி பேசி இருக்கிறார். இதுதான் நாக்பூரின் திட்டம்.


அனைவரும் படிக்கக் கூடாது, படித்துவிடக் கூடாது என்பதுதான் இதற்குள் இருக்கும் நாசகாரச் சிந்தனை ஆகும். சிலரை மட்டும் படிக்க வைக்கவும், சிலரை அவர்களுக்கு சேவை செய்ய வைக்கும் சதிச் செயல்தான் இதற்குள் இருக்கிறது.

இந்தி படிக்கலாமா, வேண்டாமா என்று இன்று விவாதங்கள் நடக்கிறது.


'இந்தியர்கள் அனைவரும் படிக்கலாமா? கூடாதா?' என்பதும் இதற்குள் நடக்கும் விவாதம் ஆகும்.

அதனால் தான் இத்தனை நாசகாரத் திட்டம் என்கிறோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?