ஹைகோர்ட் மீது துப்பாக்கிச் சூடு!

 பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். 

சென்னை கிண்டியில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். 

துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ஹைகோர்ட் மகாராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா. 

இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் போலீசார் நடத்திய சோதனையில் தூத்துக்குடியை சேர்ந்த சில ரவுகள் கைது செய்யப்பட்டனர்.

அந்த ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவும் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், சென்னை கிண்டியில் பதுங்கி இருந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை இன்று போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். 

ஆதம்பாக்கத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளரை கொலை செய்யும் நோக்கத்தோடும் தூத்துக்குடி ரவுடி கும்பல் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி ஹைகோர்ட் மகாராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சட்டவிரோத தணிக்கையில் ஈடுபடுவதாக ஒன்றிய அரசு மீது வழக்கு 

தகவல் தொழில்நுட்ப சட்டம்-2000 மூலம் சட்டவிரோத தணிக்கை செய்யப்படுவதாக எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் ஒன்றிய அரசு மீது கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது

எக்ஸ் நிறுவன தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 79(3)(b) அரசு நிறுவனங்களுக்கான தணிக்கை கருவியாக அல்லாமல், இடைத்தரகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடாக வடிவமைக்கப்பட்டது எனக் கூறியுள்ளது

மேலும் இப்பிரிவு உள்ளடக்கத்தை (content) நீக்கப் பயன்படுத்துவது அரசியலமைப்பு பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் பிரிவு 19(1)(a) (பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம்) ஆகியவற்றை மீறுவதாக அமைகிறது என்றும் தெரிவித்துள்ளது

முன்னதாக எக்ஸ் நிறுவனத்தின் AI Grok அவதூறான கருத்துக்களையும், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்தது பேசுபொருளான நிலையில், எக்ஸ் நிறுவனத்திடம் இது குறித்து விளக்கம் கேட்க இருப்பதாக ஒன்றிய அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.






பனங்கிழங்கு.

பனங்கிழங்கு ஊட்ட சக்தி மிகுந்த்து.

இது ரத்த விருத்தி ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்த சோகை தீரும். அதிக நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல் பிரச்னைக்கு சிறந்த மருந்து உணவு இந்த கிழங்கு. இந்த கிழங்கு குளிர்ச்சி தன்மை உடையது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கிழங்கு நல்லது. பொதுவாக, மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்குகள் கெடுதி என்பார்கள். ஆனால், இந்த கிழங்கை சர்க்கரை நோயாளிகள் மிதமான அளவு சாப்பிடலாம் என்கிறார்கள். காரணம், அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது. 

அதே போல, பனங்கிழங்கில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை கூட்டச்செய்கிறதாம். அதனால், சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது இந்த கிழங்கை சாப்பிடலாம். பனங்கிழங்கில் புட்டு செய்வார்கள். அவியல் செய்வார்கள். வடை செய்வார்கள். பாயாசம் செய்வார்கள். தோசை செய்வார்கள். உப்புமா செய்வார்கள்.
தோசை, பாயாசம் சுவைக்கேற்றபடி இன்னும் எத்தனையோ வகைகளில் செய்து சாப்பிடலாம்.

 ஆனால், மருத்துவ பலன்களுக்கு சில வழிகளை பயன்படுத்தி மட்டுமே உணவாக எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக, பனங்கிழங்கை வேக வைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து இடித்து மாவாக்கி வைத்து கொள்ள வேண்டும் அல்லது துண்டுகளாக நறுக்கி வெயிலில் 3 நாட்களுக்கு காய வைத்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இந்த மாவு மட்டுமே பல பிரச்னைகளுக்கு தீர்வுகளை தருகிறது.

இந்த மாவுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு தேவையான பலன் கிடைக்கும். இந்த பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால், பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு மாவுடன், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து சாப்பிடலாம். 

இந்த மாவில், கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிடலாம். ஆனால், எப்போதுமே பனங்கிழங்கு செய்தால், அதில் நான்கைந்து மிளகு சேர்த்து கொள்ள வேண்டும். காரணம், இந்த கிழங்கில் சற்று பித்தம் உள்ளது. அதேபோல, பனங்கிழங்கு சாப்பிட்டால் சிலருக்கு வாயுத்தொல்லை வரலாம். அப்படியிருந்தால், பூண்டு சேர்த்து கொள்ளலாம். 

இந்த பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த சோகையை நீக்கி ரத்த விருத்தியை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உடலைப் பெற, பனங்கிழங்கை சமைக்கும்போது, அதில் மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடல் பித்தம் அதிகரிக்கும். பொதுவாகவே பனை மரத்தை கற்பக விருட்சம் என்பார்கள். 

அந்தவகையில், பனங்காய் மட்டுமல்ல, பனங்காயின் விதையும் கூட மருத்துவ குணம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?