வெற்றி யார் பக்கம்?

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் இப்போதே வகுக்கத் தொடங்கிவிட்டன. புதிய கட்சியான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் பொதுக்குழுவை நடத்தி, சட்டமன்றத் தேர்தல் என்பது தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்குமான போட்டியாகத்தான் இருக்கும் என்று அறிவித்திருக்கிறது. தி.மு.க.வை அரை நூற்றாண்டு காலமாக எதிர்த்தும், பல முறை வெற்றி பெற்றும் உள்ள அ.தி.மு.க, இப்போதும் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், . பிரபல பத்திரிகை ஒன்று தனியார் நிறுவனத்துடன் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டு, தமிழ்நாட்டில் அடுத்த முதல்வருக்கான ரேஸில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் விஜய்யும் இருப்பதாக வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. நாம் தமிழர் கட்சி சீமானுக்கு இடமில்லையா, இது நியாய...