அலை பாயுதே,,,,,,,

அலைவரிசையாக வருகிறது ,2ஜி-அலக்கற்றை முறைகேடு விவகாரங்கள்
.

* ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் சி.பி.ஐ.,யும், அமலாக்கப் பிரிவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இதுவரை, இரண்டு குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், மற்ற குற்றப்பத்திரிகைகளை இம்மாதம் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. முறைகேட்டில் தொடர்புடைய பணம் எங்கிருந்து வந்தது. இப்பணம் எங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி எல்லாம், அமலாக்க துறை தீவிர விசாரணை நடத்தியது. இதில், மொரீஷியஸ் உட்பட ஆப்ரிக்க நாடுகளில் முதலீடு செய்திருப்பது தெரிந்தது. எனவே, இது பற்றி வெளிநாடுகளில் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அடுத்த குற்றப்பத்திரிகை தாக்கலை, மே 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், இதற்கென வழங்கப்பட்ட காலக்கெடுவை தள்ளிவைக்க கோரிக்கை வைக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்போதுள்ள சட்டப்படி, மொரீஷியஸ் நாட்டில் முதலீடு செய்யும் பணத்திற்கு, எவ்வித வரி விதிப்பும் அந்நாட்டு அரசு செய்வதில்லை.

எனவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலன் அடைந்தவர்கள், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் பணப்பரிமாற்றத்திற்கு அந்த நாட்டை மையமாக பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிந்துள்ளது. இதையடுத்து, மொரீஷியஸ் நாட்டில் செய்யப்பட்டுள்ள முதலீடு, யார் யாருக்கு மொரீஷியசில் இருந்து பணம் எந்ததெந்த வகையில் போய் இருக்கிறது என்பது பற்றி சி.பி.ஐ.,யும், அமலாக்கப் பிரிவும் தீவிரமாக விசாரிக்க உள்ளன. முதலில் கிடைத்த தகவலின் அடிப்படையில், 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒரே மாதியான முகவரியைக் கொடுத்து, போர்ட் லாயிஸ் நகரில் முதலீடு செய்துள்ளன. குறிப்பாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தொடர்புடைய பத்து நிறுவனங்கள், மொரீஷியஸ் நாட்டில் செயல்படுவது போல் பல்வேறு பெயர்களில் பதிவு செய்துள்ளன. ஆனால், இவை கொடுத்துள்ள முகவரி பொதுவாக உள்ளது. "தி லெஸ் கேஸ்கேட்ஸ் பில்டிங், எடித் காவெல் தெரு, போர்ட் லாயிஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, மொரீஷியஸ் அரசின் கம்பெனிகள் பதிவாளர் மொரீஷியஸ் ஆப்÷ஷார் வங்கி ஆணையம் ஆகியவற்றிற்கு அளித்த தகவலில் ஒரே இடத்தில் செயல்படுவது போல் காட்டப்பட்டுள்ளது.

 இந்தியாவுக்கும் மொரீஷியஸ் நாட்டிற்கும் இடையே இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் கிடையாது. இந்தியாவில் செயல்படும் கம்பெனிகள், தங்களது வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், மொரீஷியஸ் நாட்டில் ஒரு கம்பெனியை துவக்கி, இந்தியாவில் முதலீடு செய்வது போல் காட்டினால் வரி விதிப்பில் இருந்து தப்பி விடாலம். மேலும் மொரீஷியஸ் நாடும் வரி விதிப்பது இல்லை. "2ஜி' ஸ்பெக்ட்ரமில் தொடர்புடைய நிறுவனங்களின் பண பரிவர்த்தனை மொரீஷியஸ் வழியாக நடந்துள்ளது.மொரீஷியஸ் நாட்டில் முதலீடு செய்துள்ள கம்பெனிகள், தனிநபர்கள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக, இதன் அதிகாரிகள் அடுத்த வாரம் ஆப்ரிக்க நாடுகளுக்கும் சில நாட்களில் செல்ல உள்ளனர். முதலில் மொரீஷியஸ் நாட்டில் நிதி அமைச்சக அதிகாரிகள், கம்பெனிகள் பதிவாளர், மற்றும் ஆப்சோர் வங்கி ஆணையம் ஆகியவற்றுடன் பேச்சு நடத்த உள்ளனர்.இத்தகவலை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு வந்துள்ள நேரடி அன்னிய முதலீட்டில் 44 சதவீதம் மொரீஷியஸ் வழியாக வந்துள்ளது. மொரீஷியஸ் வழியாக வரும் முதலீடுகளை ஏற்கனவே "செபி' மூலம் "பார்ட்டிசிபேட்டரி நோட்' தகவல்களை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளன. தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கான முதலீடு இந்த வழியில் வருவதாக நீண்ட நாட்களாக கூறப்படும் புகார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற இரண்டு நிறுவனங்கள் பற்றிய தகவலை பெறுவதற்காக, மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கையை சி.பி.ஐ., மேற்கொண்டது. மொரீஷியஸ் அரசும் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு தர முன்வந்திருக்கிறது.
 ப்படியோ அலைக்கற்றை முறைகேடுகள் பற்றி அலை,அலையாக செய்திகள் வருகின்றது. இப்படி செய்திகளை மட்டும் விட்டு,விட்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடாதீர்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?