இன்னொன்னா,,,,,,[தேநீர் விருந்து தாங்க]

அ.தி.மு.க தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று நாளை தமிழக முதல்வராகஜெயலலிதா பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதாவை தேநீர் விருந்துக்காக டெல்லி வருமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.

வெற்றிபெற்றவர்களை சோனியா இதுவரை இப்படி தேநீர் விருந்துக்கு அழைப்பு விட்டதில்லை என்பதால் இந்த அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இது திமுக ,வை கழட்டிவிட்டு செல்வதற்கான காங்கிரஸின் ஆயத்தவேலையாக இருக்கலாம்.பாவம் தி.மு.க.
சோதனை மேல் சோதனை என்று பாடி சோகத்தை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
 அலைக்கற்றையில் குடும்ப மானம் போச்சு,அதனால் வாக்குகளும் போச்சு,அதனால் எதிர் கட்சித்தலைவர் இடமும் போச்சு,இப்போ காங்கிரசு உறவும் போச்சுனு நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
 ஆனால் தி.மு.க.வுக்கு இது புதுசு அல்ல.இது போன்ற மரண அடிகள் பலவற்றை  இதற்கு முன் கண்டு அதையெல்லாம் தாண்டிதான் வந்துள்ளது.
ஜெயலலிதா மட்டும் என்ன? முந்தைய மக்களவைத்தேர்தலில் 40க்கு ’0’
 எடுத்தவர்தானே! பழச யாரும் மறக்கக் கூடாது....[சோனியாவும் வாஜ்பாய் 13 மாத ஆட்சிக்கு  ஜெயலலிதா கொடுத்த தேநீர் விருந்து பற்றி வாஜ்பாயிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.அல்லது சு,சாமியிடமாவது விசாரித்துக் கொள்ளவும்.]
==========================================================================
குகிளின் புதிய லேப்டாப்
குகிள்
குகிள்
குகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள்.
இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.
இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொருள் இல்லாமல் எங்கோ சேமித்து வைத்திருக்கும் மென்பொருளை இண்டர்நெட் மூலமாக பயன்படுத்துவதால் லேப்டாப்புகளின் விலை குறையும், அதிக செயல்திறன் தேவையில்லை, அடுத்ததாக விரைவாக லேப்டாப்பை உயிர்பித்து விடலாம், பேட்டரி எனப்படும் மின்சக்தி நேரமும் நீட்டிக்கலாம் என்பது போன்ற பலன்கள் கிடையாது என்று கூறுகின்றனர்.
இந்த கருத்தை பிரதிபலிப்பவர் தொழில்நுட்ப நிபுணரான ரூபர்ட் குட்வின்ஸ், இவர் ‘இசட் டி நெட்’என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். அத்தோடு இந்த புதிய நுட்பத்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். ஏனென்றால் தற்சமயம் உலகத்தில் இருக்கும் லேப்டாப்புகளில் 90 சதவீதம், இவர்களின் மென்பொருள் தயாரிப்புகளால் தான் இயங்கி வருகின்றன.
அதே சமயம், இண்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே பெரும்பாலான செயல்களை இந்த லேப்டாப்பில் செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இன்னமும் உலகத்தின் பல பகுதிகளில் இண்டர்நெட் சேவை என்பது முழுதாக கிடைக்கவில்லை, அல்லது தங்கு தடையின்றி கிடைக்கவில்லை. இது போன்ற காரணங்களால் குகிளின் குரோம்நோட்புக் விற்பனை எப்படி இருக்கும் என்பது சரியாக கூற முடியவில்லை.
  ஒரு சில நிபுணர்கள் குகிளின் இந்த லேப்டாப் புரட்சி ஒன்றும் கிடையாது, இது ஒரு பரிணாம வளர்ச்சி தான், ஏனென்றால் இன்றுள்ள நவீன செல்போன்கள், டேப்ளட் கம்ப்யூட்டர்கள் எனப்படும் சின்னஞ்சிறு கம்ப்யூட்டர்கள் எல்லாம் இந்த முறையிலேயே இயங்கி வருகின்றன என்பதை குறிப்பிடுகின்றனர்.
 ==============================================================================

னைத்து வீடியோ வகைகளையும் விண்டோஸ் மீடியா பிளேயர்யில் பிளே செய்ய

ஒவ்வொரு format-இற்கும், கோப்புகளின் வீடியோ தரம் குறையாமல், கொள்ளளவு மட்டும் குறைப்பதற்குத் தனி algorithm உபயோகிப்பர். அதையே Codec என்போம். ஒவ்வொரு வித video format-க்கும் ஒவ்வொரு player நிறுவ வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்குப் பதில், அதன் codec-ஐ மட்டும் நமது கணினியில் நிறுவினால் போதும், மேலே கூறிய அனைத்து வகை கோப்புகளும் “Windows Media Player”-இலேயே பார்க்கலாம். “Windows® Essencials Codec Pack” என்ற codec pack-ஐ நிறுவினால், போதும். அனைத்து வகை கோப்புகளும், உங்கள் “Windows Media Player”-இலேயே பார்க்கலாம்.மேலும் இது மொத்தமே 6mb தான்.
Windows Media Player-ல் MKV கோப்புகளும், flv கோப்புகளும் மட்டும் play ஆகாது, “Media Player Classic” என்ற மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
===========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?