வியாழன், 19 மே, 2011

பணம்-அம்பலம்-

======================================
பேஸ்புக்கின் ரகசியங்கள் அம்பலம்
===================================
மோசமான தந்திரங்களைப் பிரயோகிக்கும் மக்கள் தொடர்பு நிறுவனமொன்றை வாடகைக்கு அமர்த்தி கூகுள் நிறுவனத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக் நடந்து கொண்டது அம்பலமாகியுள்ளது.சமூக இணையத்தளமான பேஸ்புக் உரிமையாளர்கள் பேர்ஸன் மாஸ்டெல்லர் என்ற நிறுவனத்தின் சேவையை இதற்கெனப் பெற்றுள்ளனர். கூகுள் நிறுவனம் பற்றி எதிரிடையான செய்திகளை பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்வதே இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டப் பணி.
இந்த நிறுவனம் போக்லாந்து யுத்தத்தின் போது ஆர்ஜன்டீன ஆட்சியாளர்களை பிரதிநிதித்துவம் செய்த நிறுவனமாகும். வாசிப்போர் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் வகையில் கூகுளின் சமூக வட்ட சேவை தொடர்பான கதைகளை இந்த நிறுவனம் வெளியிட்டது.
கூகுளின் சமூக இணையத்தளம்(சோஷியல் சேர்கள்) வாடிக்கையாளர்களின் இரகசியங்களை மீறிவிட்டது என்ற அடிப்படையில் தான் இந்தப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பேஸ்புக்கிற்கு நேரடி சவால் விடுக்கக் கூடிய ஒரு சமூக இணையத்தளமாக இருப்பது கூகுளின் சோஷியல் சேர்கள் மட்டுமே.
வாடிக்கையாளர்கள் படங்கள், வீடியோக்கள் உட்பட பல்வேறு தகவல்களை இதில் தரவேற்றம் செய்ய முடியும். பேஸ்புக்கில் இருந்து அங்கீகாரமற்ற முறையில் தரவுகளையும், ஏனைய சேவைகளையும் இது பெற்றுக் கொள்வதாக பேஸ்புக் குற்றம்சாட்டியிருந்தது.
பேஸ்புக்கால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பாக ஒரு குறிப்பை எழுதுவதற்கு அமெரிக்காவின் பிரபல சட்டநிபுனர் ஒருவரை நாடியுள்ளது.
வாஷிங்டன்போஸ்ட் உட்பட பிரபல பத்திரிகைகளில் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க எழுதுமாறு கேட்டு அவரைக்க்ப்ப்ரியுள்ளது. அவர் இந்த முயற்சிக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியபோது மேற்படி நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது.
அதனையடுத்து அந்த சட்டநிபுனர் இது தொடர்பான ஈ மெயில் தொடர்புகளை இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ளார். அதனையடுத்தே பேஸ்புக்கின் குட்டு வெளியாகியுள்ளது.
==========================================================================

  குந்தைகள் தற்கொலைப்படை. உருவாக்கும் தாலிபான்,

ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் தற்கொலை படையை தலிபான், தீவிரவாதிகள் உருவாக்கி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.

அவர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, தலைமையிலான “நேட்டோ” படைகள் ஈடுபட்டுள்ளன. எனவே அவர்களை அழிக்கவும், அரசுக்கு நெருக்கடி கொடுக்க பொதுமக்கள் மீதும் தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்காக அப்பாவி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அவர்களிடம் இன வெறியை தூண்டி, மூளை சலவை செய்து தற்கொலை படையில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இளைஞர்கள் மட்டுமின்றி தற்போது குழந்தைகளையும் தற்கொலை படையில் சேர்த்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் வாழும் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களின் பெற்றோருக்கு தீவிரவாதிகள் பண ஆசை காட்டுகிறார்கள். பின்னர் குழந்தைகளை விலைக்கு வாங்கி சென்று தங்கள் இயக்கத்தில் சேர்க்கின்றனர்.

ஒன்றும் அறியாத மனதில் தீவிரவாதம் என்ற நஞ்சை கலக்குகின்றனர். அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டுகளை கையாளுதல் போன்ற பயிற்சிகளை அளிக்கின்றனர். இறுதியில், தற்கொலை தாக்குதல் நடத்தும் போது உடைகள் அணிவது, வெடி குண்டுகளை இயக்கி வெடிக்க வைக்க கற்றுக் கொடுக்கிறார்கள்.

இதற்காக வறுமையில் வாடும் 10 முதல் 16 வயது குழந்தைகளை தேர்ந்தெடுத்து குழந்தை தற்கொலை படை அமைத்து வருகின்றனர். பெரும்பாலும், இந்த முகாம்கள் நகர்புறங்களில் இருந்து மிக உள்ளடங்கிய கிராமப்புறங்களில் செயல்படுகின்றன. இங்கு அமெரிக்க படையினர் சென்று அதிரடி தாக்குதல் நடத்தி குழந்தை தற்கொலை படை தீவிரவாதிகளை மீட்டு வருகின்றனர்.
==================================================================================================================
வரி ஏய்ப்பு ; ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் மீட்பு.
   கடந்த இரண்டு ஆண்டுகளில் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து சேர்த்த கறுப்புப் பணம் ரூ. 30 ஆயிரம் கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுபோன்ற கறுப்புப் பணம் சேர்ப்பவர்கள் குறித்து புலனாய்வு செய்யவும், விசாரிக்கவும் சிபிடிடி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தால் இவ்விதம் கைப்பற்றப்படும் கறுப்புப் பணத்தின் அளவு மேலும் அதிகரிக்கும்.

 கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் மூலம் ரூ. 18,500 கோடி கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது.

 ஆதாரபூர்வமான தகவல் கிடைக்காமல், எவருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடச் செல்வது கிடையாது.

 பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். அதிக வருமானம் ஈட்டும் அதிகாரிகள் அனைவருமே எங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் வருகின்றனர்.
 கடந்த பிப்ரவரி மாதம் வரை உரிய கணக்கு காட்டிய 1.15 கோடி பேருக்கு அவர்கள் செலுத்திய வரி திரும்ப (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 1.04 லட்சம் கோடி.

 மார்ச் வரையான காலத்தில் மொத்தம் வசூலான வருமான வரித் தொகை ரூ. 74 ஆயிரம் கோடி. இத்துடன் ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணமும் சேரும் என்றார்.

 கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டில் மே 15-ம் தேதி வரை 45 நாள்களில் ரூ. 28 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான தொகையைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.

 வருமான வரித்துறையில் புலனாய்வுப் பிரிவு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்றத்துக்கென தனியான கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பிரிவை ஏற்படுத்தப்போவகின்றனர். இதன் மூலம் தகவல் கோரும் நாடுகள் விவரங்களை இந்தப் பிரிவுக்கு அனுப்பினால் போதுமானது. இது தவிர, கிரிமினல் புலனாய்வு இயக்குநரகத்தை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.
 ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை அமலாக்கப் பிரிவுக்குத் தருவதில்லை. எனவே இப்போது வரித்துறை சாராத அமலாக்கப் பிரிவு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது.அதன் மூலம் இத்தகைய தகவலைப் பெறுவதற்கு வழி கிடைக்கும்.
   வரி விதிக்கப்படாத14 நாடுகள்உள்ளன. இவற்றுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. பஹாமஸ், நெர்முடா, ஐசில் ஆஃப் மேன் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகள் தகவல்களை அளிக்கின்றன.

 இதுபோன்ற தகவல்களை அளிக்காத நாடுகள் ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் என அறிவிப்பதற்கு விதிமுறையில் இடமுள்ளது. இவ்விதம் அறிவிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்தாலோ, அல்லது இத்தகைய நாடுகளில் இந்தியர்கள் வர்த்தகம் செய்தாலோ அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
அது சரி கறுப்பு பணம் வெளிநாடுகளில் லட்சக் கோடி கணக்கில் சேர்த்து வைத்துள்ள வர்கள் பெயர்களை வெளியிடாமல் அவர்களைப் பாது காப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.