சில சந்தேகங்கள்

Paristamil
அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு விட்டாலும், அவரின் மரணத்துக்கு பின், பல மர்மங்கள் தொடர்ந்து கொண்டுதான், இருக்கின்றன. தாக்குதல் நடந்த அன்று, அமெரிக்க படையினர் எத்தனை ஹெலிகாப்டர்களில் வந்தனர் என்பது குறித்து, தினமும், புதுப் புது தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் விஷேசமாக வடிவமைக்கப்பட்டது குறித்தும், அவற்றில் ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும், அமெரிக்க பத்திரிகைகள் புதிய செய்திகளை வெளியிட்டவாறு உள்ளன.

அவற்றில் கூறப்பட்டுள்ளதாவது: ஹெலிகாப்டர் தேர்வு பின்லாடன் பதுங்கியிருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டதுமே, தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை அமெரிக்க அரசு தயாரித்தது. தாக்குதல் நடத்துவதற்கு, அமெரிக்க கடற்படையின் "நேவி சீல்' பிரிவு தேர்வு செய்யப்பட்டது. இந்த பிரிவைச் சேர்ந்த 79 வீரர்கள் தாக்குதலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்ததாக, தாக்குதல் நடத்துவதற்கு விமானத்தை பயன்படுத்துவதா, ஹெலிகாப்டரை பயன்படுத்துவதா என்பதில், அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இறுதியாக, ஹெலிகாப்டரை தேர்வு செய்தனர்.

பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த இருப்பதால், அந்த நாட்டு அதிகாரிகளுக்கு, அதுபற்றி முன் கூட்டியே தகவல் தெரிந்து விடக் கூடாது என்பதில், அமெரிக்க அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். இதனால், "ஸ்டெல்த் சாப்பர்ஸ்' என அழைக்கப்படும் ஹெலிகாப்டர்களை தேர்வு செய்தனர். முக்கியத்துவம் வாய்ந்த, ரகசியமான உளவுப் பணிக்காக, இந்த வகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது வழக்கம். எச் 60- பிளாக்ஹாவ்க் "சிகோர்ஸ்கை ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் தயாரிப்பான, எச்60-பிளாக்ஹாவ்க் ஹெலிகாப்டர்கள், தாக்குதலுக்கு சாதகமாக இருக்கும் என்று, அமெரிக்க ராணுவத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதில் இருந்து வெளிப்படும் இரைச்சலை குறைக்கும் வகையில், தொழில் நுட்ப மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, பிளாக்ஹாவ்க் ஹெலிகாப்டரில் தொழில் நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு, நான்கு ஹெலிகாப்டர்கள் உருமாற்றி வடிவமைக்கப்பட்டன.

தொழில் நுட்ப மாற்றம் என்ன? இதற்கு முன் யாரும் பார்த்திராத வகையில், தாக்குதல் நடத்துவதற்கான ஹெலிகாப்டர்கள் மாற்றி வடிவமைக்கப்பட்டன. இதற்கான பணிகள் அனைத்தும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, இந்த ஹெலிகாப்டரின் வால் பகுதி, அதன் சுழலும் பிளேடுகள் ஆகியவை முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டன. குறிப்பாக, வால் பகுதி, வழக்கமான ஹெலிகாப்டர்களில் இருந்து, முற்றிலும் வேறுபட்டதாக மாற்றப்பட்டது. வால் பகுதியில் சுழலும் இயந்திரத்தில் வழக்கமாக வைக்கப்படுவதை விடு, கூடுல் பிளேடுகள் பொருத்தப்பட்டன. இதன் மூலம், ஹெலிகாப்டர் பறக்கும்போது, மிக குறைந்த இரைச்சல் தான் கேட்கும். வழக்கமாக ஹெலிகாப்டர்கள் தூரத்தில் வரும்போதே, அதன் இரைச்சல், அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கேட்கும். கூடுதல் பிளேடுகள் பொருத்தப்பட்டதால், ஹெலிகாப்டர் நம் தலைக்கு மேல் பறப்பதை பார்த்த பின்னர் தான், ஹெலிகாப்டர் பறக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும், எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் வகையிலான தொழில்நுட்பங்களும், இந்த ஹெலிகாப்டர்களில் வடிவமைக்கப்பட்டன. இதற்காக, எப்-117 ரக போர் வானூர்திகளில் இருப்பதைப் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்பின், இந்த ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவில் இருந்து, ஆப்கனின் ஜலலாபாத் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தாக்குதல் நடத்துவதற்காக பாகி ஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றன.

எத்தனை ஹெலிகாப்டர்கள்? தாக்குதல் நடத்துவதற்காக நான்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்தது. தாக்குதல் நடத்திவிட்டு புறப்படும்போது, ஒரு ஹெலிகாப்டரில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதை குண்டு வீசி தகர்த்து விட்டதாகவும் அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தாக்குதல் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தால், அதில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது என்கின்றனர், பல்வேறு நாடுகளின் புலனாய்வு துறை அதிகாரிகள்.

இதுகுறித்து அவர்கள் கூறுவதாவது: தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தில், ஒசாமா தங்கியிருந்த வீட்டின் சுற்றுச் சுவரில் ஒரு ஹெலிகாப்டர், மோதி, சாய்ந்து கிடப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த ஹெலிகாப்டரின் வால் பகுதி சேதமடையாமல் உள்ளது. அப்படியானல், ஹெலிகாப்டரை குண்டு வீசி தகர்த்ததாக, அமெரிக்க படையினர் கூறியது தவறான தகவலா? மற்றொரு புகைப்படத்தில், ஒசாமா தங்கியிருந்த வீட்டு காம்பவுண்டின் மற்றொரு பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் நொறுங்கி, தீப்பிடித்த நிலையில் சுக்கு நூறாகி கிடப்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. அமெரிக்க படையினர் குண்டு வீசி தகர்த்தது இந்த ஹெலிகாப்டர் தானா? அப்படியானால், சுற்றுச் சுவரில் மோதிய நிலையில் கிடக்கும் ஹெலிகாப்டர் எங்கிருந்து வந்தது? ஒசாமா வீட்டில் தங்கியிருந்தவர்களால், அந்த ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அமெரிக்க படையினர் வந்ததாக கூறப்படும் ஹெலிகாப்டர்களில் இரண்டு ஹெலிகாப்டர்கள், அபோதாபாத்திலிருந்து, மீண்டும் புறப்பட்டுச் செல்லவில்லை என்று வைத்துக் கொண்டால், தாக்குதலுக்கு வந்திருந்த 79 வீரர்கள் மற்றும் ஒசாமாவின் சடலம், ஆவணங்கள் அனைத்தும், மீதமுள்ள இர ண்டு ஹெலிகாப்டர்களில் மட்டும் தான் எடுத்துச் செல்லப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. இரண்டு ஹெலிகாப்டர்களில் 79 பேர், பாதுகாப்பாக பயணம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. எனவே, அமெரிக்க படையினர், நான்கிற்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களில் தாக்குதல் நடத்த வந்துள்ளனரா என்ற கேள்விக்கும் இதுவரை பதில் இல் லை.

ஹெலிகாப்டர்கள் தரை இறங்கியதா? தாக்குதல் நடத்துவதற்காக வந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கவே இல்லை என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் தரை இறங்க முயற்சித்த ஹெலிகாப்டர், போதிய இடவசதி இல்லாததால், தரை இறங்கும்போது சுற்றுச் சுவரில் மோதி, விழுந்து இருக்கலாம். இதற்கு பின், மற்ற ஹெலிகாப்டர்கள் மிக குறைந்த உயரத்தில் வானில் வட்டமிட்டுக் கொண்டிருக்க, அதில் இரு ந்து கயிறு மூலம் இறங்கி, அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தியிருக்க கூடும். தாக்குதல் முடிந்தபின், மீண்டும் கயிறு மூலமாகவே அவர்கள் ஹெலிகாப்டரில் ஏறிச் சென்றிருக்க வேண்டும். ஒசாமாவின் உடலையும், கயிறு கட்டித்தான், அவர்கள் மேலே தூக்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை முழுமையாக மறுக்கவும் முடியவில்லை.இவ்வாறு புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்ததன் முழு விவரத்தையும், அமெரிக்க அரசு வெளிப்படையாக தெரிவித்தால் மட்டுமே, மேலே கூறப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும். இல்லையெனில், இது தொடர்பான மர்மங்கள், இன்னும் பல காலத்துக்கு பரப்பாக பேசப்படுவதை தவிர்க்க முடியாது.

ஹெலிகாப்டர் ரகசியம்; அமெரிக்கா அச்சம்: ஒசாமா மீது தாக்குதல் நடத்துவதற்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டர்களின் தொழில் நுட்ப ரகசியம் வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. இதனால்தான், தொழில்நுட்பக் கோ ளாறு ஏற்பட்ட ஹெலிகாப்டரை குண்டு வைத்து தகர்த்ததாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், அந்த ஹெலிகாப்டரின் வால் பகுதி, சேதம் அடையாமல் இருப்பது, புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது ஹெலிகாப்டரின் அந்த வால் பகுதி, பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை, தங்களிடம் ஒப்படைக்கும்படி, அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஒருவேளை, ஹெலிகாப்டரின் அந்த பாகத்தை, திருப்பிக் கொடுக்க, பாகிஸ்தான் மறுத்து விட்டால், என்ன ஆகுமோ என, அமெரிக்க அதிகாரிகள் கவலைப்படுகின்றனர். ஹெலிகாப்டரின் அந்த பாகத்தை, சீனாவுக்கு பாகிஸ்தான் அரசு கொடுத்து விடும் என்றும், இதனால், அதன் தொழில்நுட்ப ரகசியத்தை, சீனா தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்றும் அமெரிக்கா கலக்கம் அடைந்துள்ளது.
==========================================================================
  வேட்பாளர்களின் பின்னணி
பிரத்யா பாசு

இவர் டம்டம் தொகுதி யின் திரிணாமுல் வேட்பா ளர். “சூலை 17” எனும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி னார். இது எனது சொந்த படைப்பு எனவும் கூறினார். ஆனால் உண்மை என்ன?

வங்காளத்தின் தலை சிறந்த நாடகக்கலைஞரான உத்பல்தத்தின் ‘’மக்களின் உரிமைக்காக’’ எனும் நாட கத்திலிருந்து திருடியே இவர் தனது சொந்த கற் பனை எனக் கூறிக் கொண் டார் என ஆனந்தபசார் பத் திரிகை செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்தியது.

இவர் கொல்கத்தா நக ரின் ஒரு அரசு கல்லூரியில் உதவி விரிவுரையாளர். தில்லி பல்கலைக்கழகத் தில் ஒரு ஆராய்ச்சி படிப்பிற் காக சேர்ந்தார். தில்லி பல் கலைக்கழகத்தின் விதிகள் படி அவர் அங்கேயே தங்கி படிக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யாதது மட்டுமல்ல; இரயில்வே யிலிருந்து ஊதியம் பெற்றார். இதற்காக கொல்கத்தா பல் கலைக்கழகம் இவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இத்தகைய பின்னணி கொண்டவர் தான் டம்டம் தொகுதியின் திரிணாமுல் வேட்பாளர்.

ஜாவேத்கான்

கஷ்பா தொகுதியின் வேட்பாளரான இவர் மம்தா பானர்ஜியாலேயே “மஃபியா கும்பல் தலைவன்” என வர்ணிக்கப்பட்டவர். ரிஸ் வானுர் ரஹ்மான் எனும் முஸ்லிம் இளைஞர் தற் கொலை செய்து கொண்டார். இது மேற்குவங்கத்தில் பெரும் விவாதங்களைக் கிளப்பி யது. ரிஸ்வானுர் தன்னை எவரெல்லாம் தற்கொ லைக்கு தூண்டினார்கள் எனும் ஒரு பட்டியலை எழு தி வைத்து மரணம் அடைந் தார். அப்பட்டியலில் உள்ள பெயர்களில் ஒன்றுதான் ஜா வேத்கான். இவரது பெயரை ஏன் குற்றப்பத்திரிகையில் இணைக் கவில்லை என சிபிஐயிடம் நீதிமன்றம் கடிந் து கொண் டது.

அந்த ஜாவேத்கான் தான் கஷ்பா தொகுதியின் திரிணாமுல் வேட்பாளர்.

திலிப் மொண்டல் - ஜெயந்தா நஷ்கார்
திலிப் மொண்டல் பிஷ்னுபூர் தொகுதி வேட் பாளர். குற்றவியல் சட்டம் 376 பிரிவின் கீழ் இவர் மீது பாலியல் பலாத்காரம் செய் ததாக வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது.

ஜெயந்தா நஷ்கார், கொஷாபா தொகுதியின் திரிணாமுல் வேட்பாளர். இந்திய குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இவர் மீது கொலை வழக்கு உள்ளது.

பார்த்தா டே

இவர் திரிணாமுல் காங் கிரசின் பிரச்சார குறுந்த கடை வெளியிடும் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டவர். “கிரீன் கான் கிரீடெக்ஸ்” எனும் நிறு வனத்தின் இயக்குநர். இவர் கொல்கத்தா பெரு நகராட் சிக்காக கட்டிய கட்டிடத் தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது. எனவே அந்த உள்ளாட்சி அமைப்பு, கட்டிட வேலையை நிறுத் திட உத்தரவு போட்டுவிட் டது. மேலும் இந்த நபர் கொல்கத்தாவில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டிடங் களை பெருநகர குழுமம் சமீபத்தில் இடித்து தள்ளி யது. இந்த குற்றங்களுக்காக இவர் மீது காவல் துறை யிடம் பெரு நகர் குழுமம் இந்த ஆண்டு பிப்ரவரியில் புகார் செய்தது. அப்பொழு திருந்தே பார்த்தா டே தலை மறைவாக உள்ளார்.
இவர்கள் அனைவரும் மேற்கு வங்க திரினாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள்.
 திரினாமுல் வென்று இவர்கள் அமைச்சர்களும் ஆகிவிட்டால் வங்கம் வெளங்கிடும்.
ஆமாம் ,எது ,எதுக்கோ கட்டுப்பாடுகள் விதிக்கும் தேர்தல் ஆணையம் குற்றவாளிகள் தேர்த்லில் நிற்கக்கூடாது என்று விதித்தால் என்ன? ஏன் அதற்கு மட்டும் வாயை திறக்க மாட்டேன் என்கிறது?
.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?