இந்துவே மன்னிப்பு கேள்.......



தயாநிதி மாறன்
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி இந்தியா தலையிடாவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக நேரிடும் என்று கூறும் 2008 அனைத்துக் கட்சித் தீர்மானம் அன்றைய முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடகம், மற்றும் திமுகவில் ஊழல் மலிந்துவிட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றெல்லாம் தயாநிதி மாறன் 2008 நவம்பரில் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் இந்து நாளேடு இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
அது குறித்து தன் வழக்கறிஞர் மூலம் அனுப்பியுள்ள தாக்கீதில் தயாநிதி மாறன் அச்செய்தி பற்றி தன்னிடம் விளக்கம் கேட்காமலும், எதையும் உறுதிப்படுத்தாமலும் வெளியிடப்பட்டிருக்கும் அக்கட்டுரைகள் பொதுமக்கள் மத்தியில் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், எனவே வருத்தம் தெரிவிக்காவிட்டால் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நவம்பர் 2008ல் அமெரிக்க தூதரக அதிகாரியான கான்சல் ஜெனரல் ஆண்ட்ரூ சிம்கின்னை சந்தித்துப் பேசியபோது திமுக தலைவர் கருணாநிதியின் மருமகன் மறைந்த முரசொலிமாறனின் மகனும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் இவ்வாறு கூறியதாக விக்கிலீக்ஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்து நாளேட்டில் வெளியான கட்டுரை ஒன்று, நவம்பர் 2008ல் கான்சல் ஜென்ரல் ஆண்ட்ரூ சிம்கின்னை தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியது பற்றிய விக்கிலீக்ஸ் விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
அச்சந்திப்பில் அன்றைய முதல்வர் கருணாநிதியின் தலைமையில் அக்டோபர் 14 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட எம்.பிக்கள் பதவி விலகுவதாக எச்சரிக்கும் தீர்மானமே, மாநிலத்தில் எழுந்திருந்த கடும் மின்சாரப் பற்றாக் குறையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அதிருப்தியை திசைதிருப்ப நிகழ்த்தப்பட்ட ஒரு நாடகம்தான், ஆனால் மத்திய அரசை மிரட்ட அவ்வாறு முயன்றது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்று தயாநிதி மாறன் கூறியதாக சிமிகின்னின் கேபிள் தெரிவிக்கிறது.
அனைத்துக் கட்சித் தீர்மானம் அக்டோபர் 28க்குள் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் எனக்கோரியிருந்தது. ஆனால் அக்டோபர் 26 அன்று சென்னை வந்து கருணாநிதியை அன்றைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து ஒரு சில முன்முயற்சிகளை மத்திய அரசு எடுக்கும் என்று உறுதியளித்தவுடன் கருணாநிதி பதவி விலகல் முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்தார். 40 ஆண்டுகாலப் பிரச்சினையை 4 நாட்களில் தீர்த்துவிடமுடியாது என்றும் கருணாநிதி கூறினாரெனவும் சிம்கின்னின் கேபிள் குறிப்பிடுகிறது.
ஆனாலும்கூட அனைத்துக் கட்சி தீர்மானத்தால் எழுந்த கோபத்தின் விளைவாய்தான் சோனியா காந்தி கருணாநிதியின் மகள் கனிமொழியை அப்போது சந்திக்க மறுத்துவிட்டார் என்றும் மாறன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்க தருணத்தில் காங்கிரஸ் திமுகவிற்கு பதிலடிகொடுக்க்க்கூடும் என்று மாறன் அஞ்சியதாகவும் அக்கேபிள் தெரிவிக்கிறது.
தவிரவும் ராகுல் காந்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப்புலிகளுக்கு முடிவுகட்டவேண்டும் என்று நினைப்பதாகவும், அத்தகைய சிந்த்னை காங்கிரசிற்கும் திமுகவிற்குமிடையே மோதலை ஏற்படுத்தியதாகவும் மாறன் மேலும் விளக்கியிருந்ததாக அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?