வருகிறது அணுரசாயன குண்டு,,,,,,,,,,,

 
இந்தியாவில்  ஹெலிகாப்டர்-விமான விபத்துகளில் பல அரசியல் தலைவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.                                                                                                    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி, 1980-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி, டெல்லியில், ஒரு குட்டி விமானத்தில் பயணம் செய்த போது எதிர்பாராதவிதமாக அது நொறுங்கி விழுந்தது. இதில் சஞ்சய் காந்தி பலியானார்.
 
பஞ்சாப் கவர்னராக இருந்த சுரேந்திரநாத், மாநில அரசுக்கு சொந்தமான குட்டி விமானத்தில், தனது குடும்பத்துடன் பயணம் செய்த போது, இமாச்சல பிரதேச மலையில் மோதி, அதில் பயணம் செய்த அனைவரும் பலியானார்கள். இது 1994-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி நடந்தது.
 
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரியாக இருந்த வருமான மாதவராஜ் சிந்தியா 2001-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி, விமான விபத்தில் பலியானார்.பாராளுமன்ற சபாநாயகராக இருந்த பாலயோகி, ஹெலிகாப்டரில் பயணம் செய்த போது அது நொறுங்கி விழுந்து பலியானார்.
 
இந்த சம்பவம் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி, ஆந்திராவில் நடந்தது.   அரியானாவின் விவவாய மந்திரியாக இருந்த சுரேந்திரசிங்கும் பிரபல தொழில் அதிபர் ஜின்டால் என்பவரும் 2005-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்ற போது, அது நொறுங்கி விழுந்து பலியானார்கள்.  
 
ஆந்திர மாநில முதல்-மந்திரியாக இருந்த ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், சித்தூர் மாவட்டத்தில் அடர்ந்த காடுகளில் விழுந்து நொறுங்கியது. இதில் ராஜசேகர ரெட்டி பலியானார். இந்த கோரச்சம்பவம் 2009-ம் ஆண்டு செப்டம்பர் 3-ந்தேதி நடந்தது.தற்போது கடைசியாக அருணாசல பிரதேச முதல்-மந்திரி டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி நொறுங்கி விழுந்தது.இதில் அவருடன் சென்ற அனைவரும் பலியானார்கள்.
 
முன்பு இந்திரா காந்தியின் மந்திரி சபையில் மத்திய மந்திரியாக இருந்த மோகன் குமாரமங்கலம், டெல்லியில் நடந்த விமான விபத்தில் 1973-ம் ஆண்டு மே 30-ந்தேதி பலியானார். 1976 ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி மும்பையில் நடந்த விமான விபத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பொன்னப்ப நாடார், நடிகை ராணிசந்திரா உள்பட 95 பேர் பலியானார்கள்.
 
தி.மு.க. மத்திய மந்திரி என்.வி.என். சோமு, 1997-ல் அருணாசல பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்கள். இதே போல் மலையாள நடிகர் ஜெயன் 1980-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி படப்பிடிப்பின் போது ஹெலிகாப்டர் விபத்திலும் நடிகை சவுந்தர்யா பாரதீய ஜனதாவுக்காக பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் சென்ற போதும் விபத்தில் இறந்தனர்.
================================================================================
புதிய அல்கொய்தா தலைவர்=அல் அலாகி
அன்வர் அல் அலாகி
அன்வர் அல் அலாகி

 ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து, அன்வர் அல் அலாகி என்பவர் அல் குவைதா தீவிரவாத அமைப்பின் புதிய தலைவராகக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் பிறந்த அன்வர் அல் அலாகியின் பெற்றோர், ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
40 வயது நிரம்பிய அவர், அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைகழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு பயின்றவர்.
விடுமுறைக்காக ஆப்கானிஸ்தான் சென்ற அலாகி, அங்கு தீவிர மத சிந்தனை கொண்டவராக உருவெடுத்தார்.
அமெரிக்கா திரும்பிய பின்னர் அங்குள்ள மசூதி ஒன்றில் அவர் இமாமாக பொறுப்பு வகித்தார்.
நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வு துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மும்பை தாக்குதலைப்போன்று, பிரிட்டனில் தாக்குதல் நடத்த  அன்வர் அல் அலாகி சதித்திட்டம் தீட்டியிருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் தி சன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்தபின் லெடன் தயார்.

 அணுரசாயனக் குண்டுகளை வீச திட்டம். இண்டர்போல் எச்சரிக்கை,,,,,,,,,,,

அமெரிக்க இராணுவ நடவடிக்கையால் பின்லேடன் ‌கொல்லப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் உஷார்ப்படுத்தும்படி சர்வதேச பொலிஸ் ஏஜென்சியான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகநாடுகளில் உள்ள தூதரகங்கள், முக்கிய வர்த்தக நகரங்களில் பாதுகாப்பினை பலப்படுத்தும்படியும் கூறியுள்ளது.

இது குறித்து இன்டர்போல் அமைப்பின் பொதுச்செயலாளர் ‌ரொனால்டு நோபல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பின்லேடன் கொல்லப்பட்ட போதிலும் அவரது தலைமையிலான அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தக்கூடும்.

ஏற்கனவே பின்லேடனை பிடிக்க முற்பட்டால்ஐரோப்ப முழுவதும் அணுரசாயண குண்டு வீசப்படும் என அல்கொய்தா அமைப்பின் சீனியர் தலைவர் எச்சரித்திருந்ததும், அச்செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டதும் மேற்‌கோள்காட்டப்பட்டது.

எனவே அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் உள்ள தூதரகங்கள், வர்‌த்தக நகரங்கள், அணு உலைகள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?