ஊழலை ஒழிக்குமா லோக்பால்,,,,,,,,,,?

ஜன்லோக்பால்- ஒரு மாற்றுக் கருத்து
-கே.என். பணிக்கர்
42 ஆண்டுகளின் தயக்கத்துக்கும் தடு மாற்றத்துக்கும் பிறகு நாடு முழுவதிலும் பல் கிப்பெருகியுள்ள ஊழலை எதிர்கொள்வதற்கு ஒரு நிறுவனமய ஏற்பாடு கண்ணுக்குத் தெரி யத்தொடங்கியுள்ளது. இப்போது அரசு இயந் திரத்தை நகர வைத்துள்ளது அன்னா ஹசாரேயின் தலைமையில் நடைபெற் றுள்ள போராட்டமே. இந்த போராட்டத்துக்கு பெரு நகரங்களில் மட்டும் தன்னெழுச்சி யான ஆதரவு இருந்துது. புதுதில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக் கிய ஐந்துநாட்களுக்குள் மத்திய அரசு அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. மத்தியில் ஒரு லோக்பால் அமைப்பை நிறுவுவதற்கான குழுவை அமைத்தது. இது இந்திய அரசின் கடந்த கால அணுகுமுறையிலிருந்து வேறு பட்டதாக இருந்தது. ஆந்திரமாநிலம் அமைக் கப்படவேண்டும் என்பதற்காக காலவரை யற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு அக்கோரிக்கைக்காக தனது உயிரை அர்ப்பணிக்க வேண்டியிருந்தது என் பதை நினைவுபடுத்திக்கொள்வோம். ராணு வப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் ரத்து செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐரம்ஷர்மிளா 10 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ஜன் லோக்பாலை அமைக்கும் முடிவின் பின்னணியாக அமைந்த சில நிகழ்ச்சிப் போக்குகள் இந்திய ஜனநாயகம் செயல்படும் முறை குறித்து சில அடிப்படைக்கேள்வி களை எழுப்புகின்றன. குழுவின் பரிசீல னைக்காக வைக்கப்படும் தலைப்புகளையும் குழு உறுப்பினர்களையும் முடிவு செய்வதில் அன்னா ஹசாரேஎன்ற ஒரு தனிநபர் தீர்மான கரமான பங்கினை ஆற்றியுள்ளார். மக்களின் சார்பாக குழுவில் இடம்பெற வேண்டிய பிரதி நிதிகள் அவரால் தேர்வு செய்யப்பட்டுள்ள னர். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள பல் வேறு அரசியல் கருத்துக்களின் பிரதிநிதி களுக்கு குழுவில் இடமளிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் சார்பாக ஐந்து மத்திய அமைச்சர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். குழு உறுப்பினர்களைத்தேர்வு செய்வதில் எத்தகைய ஜனநாயகக் கோட்பாடுகளும் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் கூறத் தேவையில்லை.

ஊழலுக்கு எதிரான இந்த இயக்கத்தில் அன்னா ஹசாரேயின் தனிப்பட்ட செல் வாக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது என்ற போதிலும் அவர் உண்ணாவிரதம் மேற்கொண் டதும் அவர் விடுத்த இறுதி எச்சரிக்கையும் மிரட்டிப்பணியவைக்கும் அணுகுமுறை என்று பலரும் கூறியுள்ளனர். இத்தகைய அணுகுமுறைகளுக்கு ஒரு ஜனநாயக அமைப்பில் இடமில்லை என்பது பலரது கருத்து.

தான் ஒரு அரசியல் சார்பற்றவர் என அன்னா ஹசாரே கூறிக்கொள்கிறார். ஆனால் அரசியலின் மீதும் அரசியல்வாதிகளின் மீதும் அவரது அவநம்பிக்கை ஆழமானது. ஊழல் நோயை எதிர்ப்பதற்கு அரசியல் முறையைத் தான் அவர் நாடவேண்டியிருந்தது என்பது ஒரு முரண்பாடு. தார்மீகப்பாதையை அவர் தேர்ந்தெடுத்திருப்பார் எனில் ஊழல்களை சாத்தியமாக்கியுள்ள சமூகச்சூழல்களின் மீது அவர் கவனம் செலுத்தியிருப்பார். குடியுரிமை ஆர்வலர்கள் சிலராலும் ஆங்கிலமொழி ஊட கங்களாலும் தேசத்தின் ரட்சகர் போல சித் தரிக்கப்பட்டுள்ள இவரைக்கண்டு அரசாங் கத்தின் தன்னம்பிக்கை, காற்று பிடுங்கப்பட்ட பலூனின் நிலைக்குச் சென்று விட்டது.

எனினும் இந்த இயக்கத்தின் தார்மீக உள்ளடக்கத்தைவிட இது துவங்கப்பட்ட நேரம் தான் மக்களின் ஆதரவுக்குக் காரண மாக இருந்துள்ளது. ஆட்சி பீடத்திலுள்ள பெரிய மனிதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன தாராளமயக்கொள்கைகளும் தொழில் நிறுவனங்களின் ஆதாயத்துக்காக பொதுச்சொத்துக்களை பிரம்மாண்டமான அளவில் தாரை வார்ப்பதும் தொழில் நிறு வனங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் அரசி யல் ஆதரவுமே ஊழலுக்கான வாய்ப்பு வாசல் களை விரியத் திறந்து விட்டுள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் செயல்பட்டுள்ளன. அவை தனியார்மயத்தை தொடர்ந்து ஆத ரித்து வந்துள்ளன. இந்தியாவை நவீனமய மாக்குவதற்கு அந்நிய மூலதனத்தை வர வேற்றுவந்துள்ளன. தாராளமயத்தால் உரு வாக்கப்பட்ட பொருளாதார சூழல்களும் முன் னெப்போதும் இல்லாத ஊழல்களும் உட னுறை நிகழ்வகளாக இருந்து வருகின்றன.

ஊழல் என்பது ஒரு சிக்கலான பிரச் சனை. இது அதிகார வர்க்கத்தின் நெகிழ்ச்சித் தன்மையற்ற போக்கிலும் பொருளாதார வாய்ப்பு வசதிகளைத் திறந்து விடுவது மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றின் மீதும் பதியவைக்கப்பட்டுள்ளது. இந்த விதத்தில் அரசே ஊழலை ஊக்குவிக்கும் காரணியாக இருக்கிறது. இதனை வெறும் அறநெறி சார்ந்த பிரச்சனையாக மட்டும் கருதக்கூடாது. சில தனிநபர்களை தண்டிப்பதன் மூலம் மட்டும் இதற்கு தீர்வுகண்டுவிட முடியாது. அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் வகுப்பு வாதிகளையும் ஆன்மீக வியாபாரிகளையும் வலதுசாரிகளையும் ஓரணியில் திரட்டியுள் ளது. அதுமட்டுமல்ல,குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு தனது ஆசிகளை வழங்கி யுள்ள அன்னா ஹசாரே, குஜராத் மாதிரி வளர்ச்சியை போற்றிப்புகழ்ந்துள்ளார். அவர் பெரிதாகப் பேசிவரும் நியாய-அநியாய அம்சங்களை இங்கே புறக்கணித்துள்ளார்.

தர்ம நியாயங்களில் நடுநிலை வகிக்க லாம் என நம்பும் ஒருவரை தேசத்தின் ரட்சகர் நிலைக்கு சிலரும் அரசாங்கமும் உயர்த்தி யுள்ளது என்பது பெரும் சோகமே. இதில் வியப்படைய எதுவுமில்லை. ஏனெனில் அமைப்புமுறை மற்றும் நிறுவனங்களை மாற் றியமைப்பதைப் பற்றிப் பேசாமல், சீர்திருத்த நடவடிக்கைகளை மட்டும் ஆதரித்து வரும் வரையில், அவர் அன்னா ஹசாரேயாக இருந் தாலும் வேறு எவராக இருந்தாலும் அவர் களைக் கொண்டாடுவதில் அரசுக்கு பிரச் சனை எதுவும் இல்லை. மாறாக அவரையே இதற்கான ஒரு கருவியாக மாற்றுவது அர சின் முயற்சியாக இருக்கும். இதன் விளை வாக அன்னாஹசாரேயும் அவரது குழுவும் இறுதியில் அரசினால் இயக்கப்படும் ஊழல் எதிர்ப்பு இயந்திரத்தின் ஆதரவாளர்கள் நிலைக்கு தள்ளப்படலாம். ஊழல்வாதிகளை தண்டிப்பதற்கான சட்டங்கள் இல்லாமலில் லை. அதற்கான அரசியல் உறுதி ஆட்சி யாளர்களிடம் இல்லை என்பதே உண்மை யான பிரச்சனை.

சமூகப்பிரச்சனைகளில் ஒரு சர்வாதி காரப் போக்குடன் அன்னாஹசாரே செயல் பட்டுவருவதற்கு சிலகிராமங்களில் அவரால் நடத்தப்படும் சமூக சேவை அமைப்புகளே நல்ல உதாரணமாக அமைந்துள்ளன. அரசும் இதே அணுகுமுறையுடன் செயல்பட்டுவரு வதை உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர் பான அரசின் சட்டமுன்வரைவிலிருந்து காணமுடிகிறது. புதிய குழுவின் பரிசீலனை யில் உள்ள ஜன்லோக்பால் சட்டமுன்வரை வின்படி அமையவிருக்கும் ஜன்லோக்பால் அமைப்பு தற்போதுள்ள நீதித்துறையின் அதிகாரவரம்புக்கு கட்டுப்படாததாகவும் சமூக வெற்றிடத்தில் இயங்குவதாகவும் இருக்கும். அது வெளிப்படைத்தன்மையற்ற தாகவும் தனது நடவடிக்கைகள் குறித்து எவருக்கும் விளக்கமளிக்கவேண்டிய கட மையற்றதாக வும் இருக்கும்.

சட்ட முன்வரைவின் நோக்கம் ஊழ லைத்தடுப்பது அல்ல. ஊழல் செய்தவரை தண்டிப்பது தான் அதன் நோக்கம். இது தற் போதுள்ள நிறுவன ஏற்பாடுகளிலிருந்து வேறுபட்டதல்ல. வெளிப்படையான அமைப்புமுறைக்கு இடமளிக்கப்பட்டால் மட்டுமே ஊழலைத் தடுப்பது சாத்தியமான தாக இருக்கும். முடிவு எடுக்கப்படுவதற்கான நிகழ்முறைகள் முற்றிலும் மாற்றப்பட்டு வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் ஊழலை சாத்தியமாக்கும் சூழலை அகற்றுவது லட்சியமாக இருக்கவேண்டும். அதற்கு தற்போதைய அரசு நிர்வாக முறை முழுமையாக மாற்றப்படவேண்டும்

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று கூறத்தக்க இன்றைய சூழலில் ஜன்லோக் பால் அமைப்பது வரவேற்கத்தக்க முன்முயற் சியே. ஆனால் இப்போது உருவாக்கமுயலும் லோக்பாலின் மூலம் ஒரு பெரும் பூதத்தை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. இந்த அமைப்பு ஊழலுக்கு எதிராக தற்போதுள்ள அமைப்புகள் அனைத்தையும் விழுங்கி விடும். தானே சுயேச்சையான முறையில் விசாரணை நடத்துதல், குற்றவாளிக்கூண் டில் நிறுத்துதல் அகிய அனைத்து அதிகாரங் களும் கொண்ட அமைப்பாக அது இருக்கும். ஆனால் தனது செயல்பாடு குறித்து எவருக் கும் விளக்கமளிக்கவேண்டிய கடமை அதற்கு இருக்காது.எனவே அது ஜனநாயக செயல்பாட்டு முறை அனைத்துக்கும் புறம் பானதாக இருக்கும். மக்கள்அமைப்பு என்று பொருள் தரக்கூடிய ஜன் என்ற அடைமொழி இணைக்கப்பட்டுள்ள அந்த அமைப்பு அவ் வாறே செயல்படவேண்டுமானால் அதன் சர்வாதிகாரத்தன்மையும் அதிகாரக்குவிப்பும் இணைந்த அதன் கட்டமைப்பு கைவிடப்பட வேண்டும். மக்களுக்கு அதிகாரம் வழங்கும் கருவியாக அது மாற்றப்படவேண்டும். எனவே இந்த சட்ட முன்வரைவை வடிவ மைக்கும். ஆரம்பக்கட்டத்திலேயே அது ஒவ் வொரு கிராமப்பஞ்சாயத்துக்கும் விவாதத்துக் காக அனுப்பி வைக்கப்படவேண்டும்.

இதன் மூலம் தேசத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியும்.

                                                                                        நன்றி; இந்து “                                                                    தமிழில்: இலக்குவன்
============================================================================
           பாகிஸ்தானில்குடியிருந்த பின்லேடன் சிக்கியது எப்படி?

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்கு எல்லைப்புற மாகாண பகுதியில் அமைந்துள்ளது அபோட்டா பாத் நகரம். இந்நகரில் ஒதுக்குபுறமான ஒரு பகுதியில் விளை நிலங்களுக்கு இடையே இரண்டு மாடிகள் கொண்ட மிகப்பெரிய வீட்டில் ஒசாமா பின்லேடன் தனது மனைவிகள், மகன்கள் மற்றும் உறவினர்களுடன் தங்கியிருந்ததாக அமெரிக்கா தெரிவித் துள்ளது.

அபோட்டாபாத் நகரம், பாகிஸ்தான் ராணுவத்தின் மிக முக்கிய பயிற்சி மையம் அமைந்துள்ள இடமாகும். இந்தப் பயிற்சி மையத்தில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிந்திருக்கிறார்கள். முன்னாள் ராணுவத்தினரும் ஏராள மாக உள்ளனர். இந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இன்னும் அதிர்ச்சியடையச் செய் திருப்பது, பின்லேடன் தங்கியிருந்த வீடு, பாகிஸ்தான் ராணுவப் பயிற்சி மையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது என்பதே.

இந்த வீட்டை 2005-ம் ஆண்டு கைபர் பழங்குடி பகுதி யைச் சேர்ந்த ஹர்சத்கான் என்பவர் விலைக்கு வாங்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இந்த வீட்டில் குடியிருந்தவர் கள் உள்ளூர் மக்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளனர். பின்லேடனைத் தேடி பல்வேறு இடங் களில் ரகசியமாக கண்காணித்த அமெரிக்க உளவுப்பிரிவி னர், அபோட்டாபாத் நகரிலும் கண்காணித்தபோது இந்த வீடு அவர்களது கண்களில் சிக்கியுள்ளது. பல ஆண்டுக ளாக இந்த வீட்டைப் பற்றிய விபரங்கள், தங்கியிருப்போர் பற் றிய விபரங்களை சேகரித்துள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில், இங்கு தங்கியிருப்பது பின்லேடனும் அவரது குடும்பத்தினரும்தான் என்பதை உறுதிப்படுத்திய தாகவும் அதை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக சில மாத காலம் எடுத்துக்கொண்டதாகவும், அமெரிக்க ராணுவத் தின் உளவுப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப்பின்னணியில் அந்த வீட்டில் பின்லேடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பின்லே டனை தாக்கி அழிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டதன் பேரில், ஞாயிறன்று நள்ளிரவு அதிரடியாக வீட்டை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதாக ராணுவத் தினர் தெரிவித்தனர். அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ஹெலிகாப்டர்களில் வந்த அதிரடிப் படையினர், வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது உள்ளிருந்து ஹெலிகாப்டரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடந்தது என்றும் அதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் கடும் துப்பாக்கி மோதல் நடந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலின்போது, வெளியேவந்த ஒசாமா பின்லேடனை நெற்றியில் சுட்டுக் கொன்றதாகவும் அவரைப்பாதுகாக்க முயன்ற அவரது மகன், இரண்டு உதவியாளர்களையும் சுட்டுக்கொன்றதாகவும் அதி காரிகள் தெரிவித்தனர். இந்த மோதலின் இடையே பின் லேடன் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் சிக்கி பலி யானதாகவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களது உடல்களை எடுத்துச்சென்றனர். பின்லேடனின் இரண்டு மனைவிகள் மற்றும் 4 குழந்தைகளை கைது செய்தனர்.
===========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?