மைக்ரோசாப்ட் கையகப்படுத்தும் ஸ்கைப்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது:

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்கைப் நிறுவனத்தை கொள்வனவு செய்யத் தீர்மானம்
உலகின் முன்னணி மென்பொருள் உற்பத்தி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், உலகின் முதனிலை இணைய தொலைபேசி நிறுவனங்களில் ஒன்றான ஸ்கைப் நிறுவனத்தை கையகப்படுத்த தீர்மானித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கூடுதலான பணத்தைக் கொடுத்து கையகப்படுத்திய நிறுவனமாக ஸ்கைப் இருக்கும் எனத்தெரிகிறது.
ஸ்கைப் நிறுவனத்தை 8.5 பில்லியன் டாலர்கள்கொடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்துகிறது.
லக்ஸ்ம்பர்க்கை தலமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்கைப் நிறுவனத்தின் சேவையை உலகம் முழுவதிலும் உள்ள 663 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

’ஸ்கைப் ஓர் சிறந்த சேவை. இதனை உலகின் பல பாகங்களிலும் வாழும் மக்கள் விரும்புவதாகவும்’ மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்புதுறையை மேலும் எளிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆனால் நடப்பு நேரத்தில் லாபத்தை பதிவு செய்ய முடியாத நிறுவனவனமான் ஸ்கைப் நிறுவனத்தை கையகப்படுத்த மைக்ரோசாப்ட் மிக அதிகபணத்தை செலவிடுவதாக பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
====================================================================================================
இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ள ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையால் எழுந்துள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசுக்கு இந்தியாவின் ஆதரவு முக்கியமானது. பொருத்தமான நேரத்தில் அந்த ஆதரவு கிடைக்கும்’ என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்’ இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச.

அவர் கூறியது போன்றே இலங்கைக்கு ஆலோசனை வழங்க நிருபமா ராய் அங்கு சென்று வந்துள்ளார். போர்க் குற்ற குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கும் வழிகளைக் கூறி வந்திருப்பார் என நாம் நம்பவேக்கூடாது.





====================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?