மரியம் மரணத்தில் மர்மம்?

Top news


சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியம் பிச்சையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய  ஜெயலலிதா’, மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து சிபிசிஐடி போலிசார் விசாரிப்பார்கள்’ என்றும்  தெரிவித்தார். சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில் 23-மே காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார். 
 பிற்பகலில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயலலிதா. தனி விமானம் மூலம் திருச்சி விரைந்தார். மரியம் பிச்சையின் உடலுக்கு அவர் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மரியம் பிச்சையின் மனைவி, பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினார். அங்கிருந்த அதிமுகவினர்,’ மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் நிலவவதாக’ கூறியதால்காரில் ஏறப்போன ஜெயலலிதா,  செய்தியாளர்களை அழைத்து’ அமைச்சர் சாவில் மர்மம் இருக்கிறது. விபத்து குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 மரியம் பிச்சை மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். ஜெயலலிதா இப்படிக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மரியம் பிச்சையின் கார் ஓட்டுனர் ஆனந்தனைப் பிடித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்தக் கோர விபத்தில் அமைச்சர் மட்டுமே பலியாகியுள்ளார். அவரது உடல் நசுங்கிப் போய் விட்டது. ஆனால் ஓட்டுனர் ஆனந்தன் ஒரு காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார். ஆனந்தன் சென்னை முகப்பேரைச் சேர்ந்தவராவார்.
விபத்தை ஏற்படுத்திய லாரியுடன் அதை ஓட்டிவந்தவர் தலை மறைவாகி விட்டார்.
12 மணிக்குள்  சட்ட மன்ற உறுப்பினர் பதவி ஏற்க செல்ல வேண்டும் என காலை 6/40க்கு திருச்சியில் இருந்து அதிவேகமாக காரை ஓட்டிச்சென்றதே இவ் விபத்துக்குக் காரணம் என பின்னால் வந்த மற்றொரு அமைச்சர்சிவபதி கூறுகிறார். வேறு என்ன மர்மம் இருக்கப் போகிறது?
இன்று சட்டப்பேரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி இருக்கையில் அவசரமாக திருச்சி சென்றது ஏன்? சரியான கால அவகாசம் இல்லாதபோது விமானத்தில்  சென்னை வரலாமே, அவசரமாக சென்னை திரும்ப வேண்டிய வேளையில் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதை தள்ளி வைத்திருக்கலாமே?இதுபோன்ற பல ஏன்கள் இருக்கிறது.
ஆனால் ஜெயலலிதாவின் மர்மப்பேச்சின் மூலம் ஏதோ அரசியல் ரீதியில் பழி வாங்கும் நோக்க மர்மமே இருப்பதாகத் தெரிகிறது.அது போகும் இலக்கு முன்னால் அமைச்சர் நேரு வாக இருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது.
நல்ல வேளை மரியம் மரணம் மதுரை அருகே நடக்கவில்லை,,,,.
சட்டசபை முதன் முதலாக இன்று கூடவிருந்தது. இதில் தற்காலிகமாக நேற்று தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் தமிழரசன் இன்று எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக இருந்தது.  விபத்தில் அமைச்சர் இறந்து விட்டதால் இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி சபை கூடியது. எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு நடந்தது. அனைத்துக்கட்சி எம்.எல்ஏ.,க்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?