இலங்கை தரப் போகும் பரிசு,,,?

இந்தியாவுக்கு நாம் மரணத்தை வழங்குவோம்                                                                        இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினால் தென்னிலங்கையில் 60,000 மக்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவால் நாம் சிந்திய குருதி கொஞ்சமல்ல. மீண்டும் மீண்டும் எங்களை இரத்தம் சிந்த அவர்கள் வைக்கலாம். ஆனால் மரணம் மெல்ல மெல்ல வரும் என்பதை இந்தியாவும், பீரீசும் உணரவேண்டும் என கொழும்பில் இருந்து வெளிவரும் த டெய்லி மிரர் நாளேடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது.


 அதன் ஆய்வுச் செய்தியின் முக்கிய பகுதிகள் வருமாறு:
’இந்திய – இலங்கை ஒப்பந்தம் எழுதப்படும்போது, பூட்டானைப் போல இந்தியாவின் ஆளுமைக்குள் சிறீலங்காவை கொண்டுவருவதே தனது திட்டம் என இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி தமிழக தலைவர்களுக்கு தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்கு பின்னர் நடந்தவற்றை நாம் அறிவோம். தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து அந்த நினைவுகளை மீட்பது பொருத்தமானது.
ஓப்பந்தத்தின் பின்னர் சிறீலங்கா வந்த இந்தியப் படையினர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் படுகொலைகளையும், பாலியல் வன்முறைகளையும், துன்புறுத்தல்களையும், கொள்ளைகளையும் மேற்கொண்டிருந்தனர். அந்த காலப்பகுதியில் பெருமளவான மக்கள் காணாமலும் போயிருந்தனர்.
அந்த சமயத்தில் தான் ஜே.வி.பியின் செயற்பாடுகளும் இங்கு அதிகரித்திருந்தது. இரண்டு வருடங்கள் இடம்பெற்ற வன்முறைகளில் 60,000 சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். 13 ஆவது திருத்தச்சட்டத்தை மட்டும் விட்டுவிட்டு இந்தியா வெளியேறியது. ஈழவரைபடத்திற்கான ஆரம்பம் அதுதான்.
சிறீலங்காவின் படை நடவடிக்கைக்கு இந்தியா உதவியபோதும், அவர்கள் அந்த உதவிக்காக எதிர்பார்ப்பது அதிகமானது. அவர்கள் செய்த உதவிக்கு நன்றியை மட்டும் தெரிவித்து சிறீலங்கா விலகமுடியாத நிலையில் உள்ளது.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், அடுத்துவரும் பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவின் ஆதரவை எதிர்நோக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சியை தள்ளியள்ளது. பீரீஸ் வெளியிட்ட அறிக்கையை நோக்கும் போது அதில் இந்தியாவின் பலவந்தம் தெரிகின்றது.
சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இந்தியா தெரிவிப்பது, அனைத்துலக சண்டியர் ஒருவர் சிறீலங்காவை மிரட்டுவது போன்றது. போரின் போது இந்தியாவிடம் இருந்து பெற்ற உதவிக்கு 13 அவது திருத்தச்சட்டத்தை காணி மற்றும் காவல்துறை அதிகாரத்துடன் வழங்வேண்டுமாம்
இந்தியாவின் கப்பலில் இருந்து அறிக்கை விடுவதுபோலவே பீரீஸ் அறிக்கையை விடுத்துள்ளார். ஆனால் இந்தியாவின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் அவர் குறிப்பிடவில்லை. காஸ்மீரிலும், இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் இந்திய அரசு மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் ஏராளம்.
அவை தொடர்பில் விசாரணைகள் வேண்டும் என சிறீலங்கா கோரமுடியும். இந்தியாவுக்கு நாம் ஏன் உத்தரவாதங்களை வழங்கவேண்டும். இந்தியாவைப் போல சிறீலங்கா பெரிய நாடோ அல்லது பெரிய பொருளாதாரத்தையோ கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் படை பலத்தை நாம் வீழ்த்தவும் முடியாது.
ஆனால் சிங்கள மக்களின் ஒற்றுமை இந்தியாவுக்கு சவாலானது. எம்மை மற்றுமொரு பூட்டானாக மாற்ற முடியாது. ராஜீவ் காந்தியும் தோல்வியை கண்டவர், ஜெயவர்த்தனாவும் தோல்வியை கண்டவர். ரஜீவ் காந்தியின் மனைவியும், பீரீசும் தோல்வியை காண்பார்கள்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினால் தென்னிலங்கையில் 60,000 மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவால் நாம் சிந்திய குருதி கொஞ்சமல்ல. மீண்டும் மீண்டும் எங்களை இரத்தம் சிந்த அவர்கள் வைக்கலாம். ஆனால் மரணம் மெல்ல மெல்ல வரும் என்பதை இந்தியாவும், பீரீசும் உணரவேண்டும்’ என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்                                                                                                                               நன்றி;பதிவு
===============================================================================================================
லெனின் :புதைக்கப்படும் சரித்திரம்

 ’சோவியத் ரஷ்யாவின் தலைவரான விளாடிமிர் லெனினின் உடல், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில், அவருக்கான சமாதிக் கட்டடத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலைப் பார்க்க அங்கு செல்கின்றனர். சோவியத் ரஷ்யா சிதைந்த பின், லெனின் உடலைப் புதைக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை கோரிக்கை வைத்தனர்.
  ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் நிருவகத்தினர் வெளியிட்ட அறிக்கையில்,’லெனினின் உடலைக் காட்சிக்கு வைப்பது என்பது ரஷ்யப் பண்பாட்டுக்கு பொருத்தமானதல்ல தான். ஆனால், அவரது உடல் பற்றிய எவ்வித முடிவுகள் எடுப்பதற்கு முன், பல்வேறு சமூகக் குழுக்களின் கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சமூகக் கொந்தளிப்புகளை உருவாக்கும் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்\’' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டில், ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் இதுகுறித்துப் பேசிய போது, லெனின் உடல் பற்றிய முடிவு எடுக்கக் கூடிய காலம் இன்னும் வரவில்லை என்று குறிப்பிட்டார்.
லெனினின் கொள்கைகளை குழிதோண்டி புதைத்த கார்பசேவ்,புடின் கும்பலுக்கு உடலை புதைக்க எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது?
 உலகெங்கும் உள்ள இடதுசாரிகளின் எதிர்ப்பை கணக்கிட்டுத்தான் இன்னும் லெனின் உடலை மண்ணில் புதைக்காமல் புடின் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?