ஓசாமாவைத் தீர்த்த ஒபாமா,,,,,,,/
ஒசாமா பின்லேடன் உயிரிழந்து விட்டார். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 ம்தேதி அமெரிக்கா தாக்குதல் சம்பவம் மற்றும் பல தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஒசாமா பின்லேடன், அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி.
சிறிது நேரத்திற்கு முன்னர் அமெரிக்க ஐனாதிபதி பராக் ஒபாமாவினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போதே ஒசாமா கொலை செய்யப்பட்டுள்ளதாகவும். அவரது உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க இராணுவம், டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடனின் உடலை கடலில் வீசி விட்டது.
பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால், அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறி விடும் என்ற காரணத்தால், உடலை தரையில் புதைக்காமல் கடலில் வீசியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அப்போத்தாபாத்தில் நடந்த சண்டையில் பின்லேடன் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், உடலை வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றது. அந்த இடம் ஆப்கானிஸ்தான் என்று கூறப்படுகிறது.
பின்னர் அவரது முகம் மற்றும் உடல் பாகங்களை வைத்து பின்லேடனை அடையாளம் காண்பதற்கான டிஎன்ஏ சோதனைகளை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து பின்லேடனின் உடலை கடலில் புதைத்து விட்டனர், அதாவது வீசி விட்டனர்.
இஸ்லாமிய முறைப்படி உடல் அடக்கம் நடந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடலை ஏதாவது ஒரு இடத்தில் புதைத்தால் அது நினைவிடமாக மாறி விடக்கூடாது என்பதற்காகவே கடலில் உடலை வீசியது அமெரிக்கா.
அமெரிக்காவினால்தான் ஒசாமா பின் லேடன் வளர்த்துவிடப்பட்டான்.ஆப்கானிஸ்தானை சோவியத் ரஷ்யாவின் பிடியில் இருந்து தான் கைப்பற்றவே ஒசாமாவை அமெரிக்கா தேர்ந்தேடுத்தது.
அவனுக்குத்தேவையான தீவிரவாதப் பயிற்சிக்களை அமெரிக்காதான் கற்றுக்கொடுத்தது.
ஏராளமான பொருளுதவியும்,ஆயுத உதவியும் செய்தது. கொரில்ல முறையில் சோவியத் படையுடன் மோதினான் ஒசாமா.
கடைசியில் சோவியத் சிதைந்து போனது.வரம் கொடுத்த அமெரிக்காவையே எதிரியாக்கிக் கொண்டது தாலிபான்.
இரட்டைக் கோபுரத் தாக்குதலின் மூலம் அமெரிக்காவின் தேடப்படும் தீவிரவாதியாகிவிட்டான். முதலில் பத்து லட்சம் பின்25 லட்சம் மில்லியன் ஒசாமாவின் தலைக்கான விலையாக அமெரிக்கா நிர்ணயம் செய்தது. இன்று அவன் கதை முடிந்தது.ஆனால் பாகிஸ்தானின் இரு வேட நடிப்புதான் இக்கதையில் மிக நன்றாக இருந்தது.
ஒரு பக்கம் அமெரிக்காவுடன் சேர்ந்து ஒசாமாவைத்தேடியது[?] மறு பக்கம் அவனுக்கு தனி பங்களா அமைத்து பாதுகாத்தது. இரு வேடங்களிலும் ஆஸ்கார் அளவிற்கு தூள் பறத்தியது.
அமெரிக்கா அப்படியே அங்கிருக்கும் இந்திய தீவிரவாதி தாவூத் இப்ராகிமையும் கண்டு பிடிக்குமா?