சந்திப்பு சரிவருமா,,,,,,,,?

நம்பிக்கை ’கை’ கொடுக்குமா?
தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவி ஏற்ற ஜெயலிதாவை சந்திக்க நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் கொண்ட குழு திட்டமிட்டுள்ளது.

 
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த பின் உலகெங்கும் பரவியுள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள், வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்த தமிழர் அமைப்பினர் இணைந்து நாடு கடந்த தமிழீழம் அமைத்துள்ளனர்.
அந்த அமைப்பின் குழு ஈழத் தமிழரின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஜெயலலிதாவுடன் விவாதிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அதைப் போல் தமிழ்த் தேசியக் கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி தலைமையிலான குழுவும் ஜெயலலிதாவை சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.
இது போன்ற செய்திகளும்,முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்குப் பின் ஈழத்தமிழர் முகத்தில் புன்னகை .காரணம் ஜெ,,பதவி ஏற்பு என சில செய்திகள் பரப்பப்படுகின்றன.
 ஜெ,இவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா?
 இதுவரை ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைக்கவனித்ததில் ஒன்றும் ஒப்பேராது என்றேத் தெரிகிறது.எம்.ஜி.யா,ருக்கு இருந்த இலங்கைத்தமிழர் மீதானபாசம்,குறிப்பாக பிரபாகரன் மீதான பாசம் சிறிது ஜெ,க்குக் கிடையாது.அவர் பல நேரங்களில் விடுதலைப்புலிகள்,ஈழத்தமிழருக்கு எதிரான  நடவடிகைகளையே கையாண்டு வந்துள்ளார். இப்போதைய தனக்கான பாதுகாப்பையே விடுதலைப் புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து என பெறப்பட்ட உச்சக்கட்டப் பாதுகாப்புதானே.
 கடைசியாக ஈழத்தில் இறுதிக்கட்டப் போர் நடக்கும் போது தமிழர்கள் கொள்ளப்படுவதாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தப் போது’ போர் என்றால் மக்கள் உயிர்இழப்பது இயற்கைதானே’ எனத்திருவாய் மலர்ந்து பொன்மொழி உதிர்த்தவர்தானே.
 தமிழகம் முழுக்க படுகொலை முக்கிய செய்தியானபோது தான் அருமை சகோதரர் வைகோ,தோழர் தா.பாண்டியன் வற்புறுத்தலினால் ஈழத்தமிழருக்கு ஆதரவு அறிக்கைகள் வெளியிட்டார். இத்தேர்தலில் ஈழத்தமிழர் அழிப்பு முக்கிய பிரச்னைகளில் ஒன்றாகிப் போனதினாலும்.கருணாநிதியின் கையாலாகாத்தனத்திற்கு எதிரான ஆயுதம் என்பதினால் இன்று அதை வைத்து கொண்டு அரசியல் நடத்தி வருகிறார்.ராஜபக்ஸேயை கூண்டில் ஏற்ற வேண்டும் என்கிறார். உண்மையில் அவருக்கு ஈழத்தமிழர் மீதும் ,அவர்களின் நலத்தின் மீதும் மனமார்ந்த  அக்கறை கிடையாது.
 இலங்கைப் பிரச்சினை மீது அக்கறை யிருந்தாலும் அவரின் ஆலோசகர்-ராஜ குரு ’சோ’’,மீடியாபாட்னர் இந்து,தினமலர் வகையறாக்கள் அதையும் அழித்தொழிப்பு செய்து விடுவார்கள்.
 இது சிம்மாசனம் ஏறிய சிலநாட்களான தேனிலவு காலம்,இன்னும் 5,6. மாதங்களாகட்டும் அம்மாவின் ஈழப்பாசம் முழுமையாக தெரியவரும்.
 ஈழமக்களின் கனவுக்கும் விடை கிடைக்கும்.
 வரும் காலம் காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் காலம்.அரசியல் காட்சிகள் மாறும் காலம். அதுதான் காலத்தின் கட்டாயம்.
 ஈழத்தமிழர்கள் பெரிய அளவில் ஜெ  , மீதான நம்பிக்கைக்  கனவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.பின் உங்களால் இந்தசோகத்தையும் சேர்த்து சுமக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
==========================================================================
ஸ்டிராஸ்கான் மீது புதிய பாலியல் குற்றச்சாட்டு
தொமினீக் ஸ்டிராஸ் கான்
நியூயார்க் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள தொமினீக் ஸ்டிராஸ் கான்
நியூயார்க் விடுதி ஒன்றில் பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தொமினீக் ஸ்டிராஸ் கானின் மீது பிரான்ஸில் பெண் eஎழுத்தாளர் ஒருவர் மேலுமொரு பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.
ஒன்பது வருடங்களுக்கு முன் தன்னிடம் தொமினீக் ஸ்டிராஸ்கான் மோசமாக நடந்துகொண்டிருந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இளம் பெண் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான டிரிஸ்தன் பனோன் 2002ஆம் ஆண்டு தொமினீக் ஸ்டிராஸ் கானிடம் ஒரு பேட்டியெடுக்க ஏற்பாடு செய்திருந்தார்.
அந்தப் பேட்டியின் போது நடந்ததாக அவர்கூறியதாவது:
””பேட்டியெடுப்பதற்காக இருவரும் ஒரு அறைக்குள் சென்று அமர்ந்திருக்கிறார்கள். கையை பிடித்துக் கொண்டிருந்தால்தான் தான் பேசுவேன் என்று ஸ்டிராஸ் தன்னிடம் பிடிவாதம் பிடித்தார். பின்னர் ஸ்டிராஸ்கான் தன்னை மேலும் நெருக்கமாகத் தொட ஆரம்பித்துவிட்டார். கடைசியில் தான் போராடி அவர் பிடியிலிருந்து வெளிவர வேண்டியிருந்தது என்றும் அந்தச் சம்பவம் மிக வன்முறையாக முடிந்தது என்றும்” திரிஸ்தன் பனோன் என்ற அந்த பத்திரிகையாளர் கூறுகிறார்.
தன்னுடைய தாயாரின் அறிவுறுத்தலின் காரணமாய் அந்த சமயத்திலேயே ஸ்டிராஸ் கானுக்கு எதிராக தான் நீதிமன்றம் செல்லவில்லை என்று திருமதி. பனோன் தெரிவித்துள்ளார்.
பனோனின் தாயாரும் சோஷலிஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். ஸ்டிராஸ்கானை நீதிமன்றத்துக்கு இழுத்தால் அவருடைய எதிர்காலமும், பத்திரிகையாளரான பனோனின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்று தாயார் பனோனை எச்சரித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்த ஆலோசனையை அப்போது தன் மகளுக்கு வழங்கியதற்காக பனோனின் தாயார் இப்போது வருந்துகிறார் என்றும், தற்சமயம் நியூயார்க்கில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவத்திற்குப் பின்னர், திரிஸ்தன் பனோனும் ஸ்டிராஸ்கனுக்கு எதிராக வழக்கு தொடர்வது பற்றி பரிசீலித்துவருகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  இவர் உலகவங்கித்தலைவரா? அல்லது உலக ஜொள்ளுகள் தலைவரா?
==========================================================================

மனிதனின் ஆயுளை கண்டுபிடிக்கலாம்                                               மனிதனின் ஆயுட் காலத்தை குரோம்சோம்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒருவரது குரோம்சோம்களின் நுனிப் பகுதி “டெலோமியர்” என அழைக்கப்படுகிறது. அவை நீளமாக இருந்தால் ஒருவரது ஆயுட்காலம் அதிகமாக இருக்கும்.

அதே பட்சத்தில் நுனிப் பகுதி சிறிதாக இருந்தால் அவரின் வாழ்நாள் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டெலோமியரின் அளவை கண்டுபிடிக்க ஒரு சிறிய ரத்த பரிசோதனை மட்டுமே போதும்.
இச்சோதனையை மாட்ரிட் நகரில் உள்ள ஸ்பெயின் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மரியா பிளாஸ்கோ மேற் கொண்டார். ஐரோப்பாவின் பல நாடுகளில் ரத்த மாதிரி எடுத்து இப்பரிசோதனை நடத்தப்பட்டது.
==========================================================================
ராம்தாசும்-அன்புமணியும் அப்போதே சொன்னார்களே,,,,,
ரஜினி மருத்துவமனை சீக்ரெட் -சிகிரெட்
ரஜினி ஆரம்பத்தில் அஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்றவற்றால் அவதிப்பட்டார். இது அவர் ராணாவுக்காக 15 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம்மாக மேற்கொண்ட கடும் உடற்பயிற்சி மற்றும் டயட்டின் விளைவு.

அதன் தொடர்ச்சியான விளைவுகளாக, நுரையீரலில் நோய்த் தொற்று மற்றும் இரைப்பை அழற்சி போன்றவை அவரைச் சற்று கடுமையாக பாதித்துள்ளன.

ரஜினிக்கு நீண்ட காலமாக புகைப் பழக்கம் இருப்பதால், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவரது அண்ணன் சத்யநாராயணாராவ் கெய்க்வாடும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனை சரிசெய்ய ஆக்ஸிஜன் மூலம் நோய் எதிர்ப்புக்கான மருந்துகள் செலுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள நோய்த் தொற்றை அடியோடு நீக்கி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினை காரணமாக அவருக்கு நுரையீரலுக்கும் இதயப் பகுதிக்கும் இடையே திரவம் (Fluid) அதிகளவு தேங்குகிறது. இந்த திரவம் நுரையீரல்களை அழுத்தி மூச்சு விட சிரமப்பட வைக்கும்.

மேலும் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் தேங்கும் திரவத்தை பெருமளவு அகற்ற முயன்று, அதில்  வெற்றியும் கிடைத்துள்ளது மருத்துவர்களுக்கு. இந்த சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ரஜினி தெம்பாகியுள்ளார்.
நுரையீரலில் இத்தனை பிரச்சினைகள் இருப்பதால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் ஒழுங்கின்மை காணப்படுகிறதாம். காலில் வீக்கம் ஏற்பட முக்கிய காரணம் இதுவே. ஆனால் இது மிக ஆரம்ப நிலை என்பதால் சீக்கிரமே சரிப்படுத்திவிட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் பிரச்சினை சரியாகிவிட்டாலே, சிறுநீரக ஒழுங்கின்மையும் ஓரளவு கட்டுக்குள் வந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இப்போது ரஜினியின் திசுக்கள் சோதனை முடிவுவந்துவிட்டன. புற்று நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய நடத்தப்பட்ட சோதனை இது. ஆனால் அப்படி எந்த அறிகுறியும் இல்லை என்பது  தெரிந்துள்ளது
==========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?