ராஜீவ்-கலைஞர்-பத்மனாதன்,.


 முன்னாள் புலிகள் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மனாபன் இப்போது திடீர் குண்டுகளை வீசிவருகிறார்.ராஜீவை பிரபாகரன்தான் திட்டமிட்டுக் கொன்றார்.அதில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு என்கிறார்.கே.பி,எனப்படும் அவர் இவ்வளவு காலம் இதைக்கூறாமல் இப்போது வாய்திறந்தது எதற்காக.?
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியின் படுகொலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தவறு என்றும் அவர் கூறியுள்ளார். ”இந்த படுகொலை பிரபாகரனும் பொட்டுஅம்மானும் மிகவும் நன்றாகத் திட்டமிட்டு நடத்தியதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.
இந்திய மக்களுக்கு குறிப்பாக ராஜிவ்காந்தி குடும்பத்தினருக்கு நான் சொல்ல விரும்புவது, பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். உங்களை நாம் வேண்டிக் கொள்கிறோம். இதற்காக எல்லோரும் மன்னியுங்கள். ராஜிவ்காந்தியின் மகன் மற்றும் மகளின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்கிறோம்.”

இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏற்கனவே அதிக விலை கொடுத்து விட்டார்கள். இனிமேல் எதையும் இழக்கக் கூடாது. தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்றும் குமரன் பத்மநாதன் அந்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதோடு.இக்கொலையை கருணாநிதி ஆலோசனையில் தான் செய்ததாகக்கூறி வருகிறார்.அதுசரி பிரபாகரன் கருணாநிதி கைப்பிடியில் இருந்ததாகக் கூறுவதுதான் சற்று சந்தேகத்தைக்கிளப்புகிறது.கே.பி.வேண்டும் என்றே இப்போது யாருடைய தூண்டுதலிலோக் கூறுவது போல் தெரிகிறது. காரணம் பிரபாகரன் எம்.ஜி.ஆர்.மீது   மதிப்பும் ,மரியாதையும் கொண்டவர்.இலங்கை போர் வகையில் எம்.ஜி.ஆர், கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்ட பிரபாகரன் கருணாநிதி கொடுத்த நிதியை வாங்க மறுத்து விட்டார்.அது அனைவரும் அறிந்த ரகசியம்.இறுதிவரை கருணாநிதி பிரபாகரனை பற்றி விமர்சனம் செய்தே வந்தார்.அதற்கு பல அறிக்கைகள் இன்றைய அளவில் சாட்சியாக.இருக்கிறது.ராஜீவ் கொலையால் அதிகம் பாதிக்கப் பட்டது தமிழகத்தில் கருணாநிதியும்,தி.மு.க,வும்தான்.ராஜீவ் கொலையால் பாதிப்பு தனக்குத்தான் ,ஆதாயம் ஒன்றும் இல்லை எனும் போது அதை செய்யக் கூறுவாரா?


 அதெல்லாம் வேண்டாம் கே.பி.க்கு திடீரென இப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏன் தோன்றியது.
 பாவ மன்னிப்புக்கு இப்போது என்ன கட்டாயம் ஏற்பட்டது.? ராஜ பக்ஸே அழித்தொழிப்பு நடந்து இரு ஆண்டுகளாக பேசாநிலையில் இருந்து விட்டு இப்போது பிரபாகரன்,பொட்டு அம்மன் ,கருணாநிதி,வைகோ போன்றோர் மீது ராஜீவ் கொலையைத்தினிப்பது.சோனியா -மகன்,மகளீடம் மன்னிப்பு கேட்பது செயற்கையாக ,ஏதோ உள்நோக்கு இருப்பதாகத் தெரிகிறது.
=========================================================================
கலைஞர் காப்பீடு இனி எம்.ஜி.ஆர்.காப்பீடு.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்ற இத்திட்டத்தை விரைவில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஏழைகள் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்' என, பெயர் மாற்றம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, குழு அமைக்கப்படுகிறது.இக்குழு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மேம்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
எம்.ஜீ.யார் மறைந்து கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதியால் உருவாக்கப் பட்ட ,அவரின் பெயரால் ஆன காப்பீடுதிட்டத்திற்கு எம்.ஜியார் பெயர் வைப்பது சரியல்ல கருணாநிதி பெயர் எரிச்சலாக இருந்தால் தமிழக அரசு காப்பீடு என வைத்து விடலாமே?
காழ்ப்புணர்ச்சி என்றால் என்ன அர்த்தம்
 ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்த அன்று காழ்ப்புணர்ச்சி எனக்கு கிடையாது என்றார்.ஆனால் அவர் வரிசையாகச் செய்யும் காரியங்கள் அவர்காழ்ப்புணர்ச்சியின் எல்லையில் இருப்பதாகவேத் தெரிகிறது.   தலைமைச்செயலகம் மாற்றம் .அவரின் ஆட்சிக்காலத்தில் மேலே ஒழுகுகிறது வேறு கட்டப்போகிறேன் என ராணி மேரிக்கல்லுரியை இடிக்கக் கிளம்பியவர் தானே இவர்.ஆனால் மையப்பகுதியிலேயே அரசு இடத்திலேயே கோடிகளைச்செலவிட்டுக்கட்டிய கட்டடத்தை விட்டு பழையக்கட்டிடம் செல்வதற்குப் பெயர் என்ன?
 சமச்சீர் கல்விக்கு குழு அமைத்து முடிவேடுத்து 500 கோடிக்குமேல் செலவிட்டு புத்தகங்கள் அச்சிட்டு அனுப்பிய பிறகு ,அது வேணாம் பழையத்திட்டம் போதும் என்றது என்ன ?அது கூட பரவாயில்லை.அவர் இனி ஒரு குழு அமைத்து சமச்சீர் கல்வியை அடுத்த ஆண்டு தருவாராம்.இடற்குபெயர் காழ்ப்புணர்ச்சி இல்லையா?
கலைஞர் காப்பீடு பெயர் மாற்றம்,வீடு வழங்கும் திட்டம் பெயர் மாற்றம்,[எம்.ஜி.ஆர்.சத்துணவுத்திட்டம் பெயர் மாற்றப் படாமலேதான் கருணாநிதி ஆட்சியிலும் நடந்தது]
  அமைச்சர் மரியம் பிச்சை விபத்திலும் ஏதோ உள்நோக்கம்தான் சி.பி.சி.ஐ.டி. விசாரணையைக் கொண்டு வந்துள்ளது.பழி நேரு வாக வாய்ப்புள்ளது.
 அன்பார்ந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களே,நீங்கள் இன்னும் மாற வில்லை என்றே தெரிகிறது.ஆட்சியை செம்மையாக வழங்குவதை விட்டு,விட்டு பெயர் மாற்றம்,சிலதிட்டங்கள் மாற்றம் ,என்பதும் பெண் என்பதால் கனி மொழிக்கு பிணை வழங்கிவிட வேண்டாம் என்பதும் டான்சி,சொத்து்க்குவிப்பு,போன்ற வாய்தா புகழ் நீங்கள் செய்வது சரியல்ல,,,
===========================================================================
கமல்ஹாசன் நடிக்கும் `விஸ்வரூபம்’ என்ற புதிய படத்தை செல்வராகவன் டைரக்ஷனில், டெலி போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டது.
செல்வராகவன் இப்போது, அவருடைய தம்பி தனுஷ் நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் `பிஸி’யாக இருப்பதால், `விஸ்வரூபம்’ படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு வருகிறது.
தனுஷ் படத்தை முடிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று செல்வராகவன் உறுதியாக கூறிவிட்டார்.
அதுவரை கமல்ஹாசனை காத்திருக்க வைப்பதில், தயாரிப்பாளருக்கு உடன்பாடு இல்லாததால், `விஸ்வரூபம்’ படத்தை கமல்ஹாசன் டைரக்ஷனில் தயாரிக்க முடிவு செய்தார். கமல்ஹாசனை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார்.
`விஸ்வரூபம்’ படம் தாமதமாகிக்கொண்டே போவதை கருதியும், தயாரிப்பாளரின் பணம் விரயமாவதை தவிர்க்கவும் படத்தை இயக்குவதற்கு கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்தார்.
கமல்ஹாசனின் கதை-திரைக்கதை-வசனம்-டைரக்ஷனில், `விஸ்வரூபம்’ படம், ஜுன் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது.
படப்பிடிப்பு லண்டன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. `தசாவதாரம்’ படத்தை விட, பத்து மடங்கு பிரமாண்டமான முறையில், `விஸ்வரூபம்’ உருவாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், ரூ.150 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. `ஹாலிவுட்’டின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் பணிபுரிகிறார்கள்.
இளமை மிகுந்த புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் இந்த படத்தில் தோன்றுவார். அவருடைய தோற்றத்தை `ஹாலிவுட்’ தொழில்நுட்ப கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். படத்தின் உடையலங்காரத்தை கவுதமி கவனிக்கிறார்.
கதாநாயகியாக, பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். சங்கர் லீசான் ராய் இசையமைக்கிறார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், ரெட் காமிரா மூலம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
கமல்ஹாசனின் பிறந்தநாள் பரிசாக, வருகிற நவம்பர் மாதத்தில் படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளர் திட்டமிட்டு இருக்கிறார்.
===========================================================================
கிறுக்கர்களுக்கும் அழிவில்லை... 
கடந்த 21.05.2011 ஆம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என விளம்பரத்திற்க்காக பொய் பேசித்திரிந்த அமெரிக்காவைச் சேர்ந்த கிருத்துவ மத போதகர் தற்போது  உலகம் அழியாததால்தலைமறைவாகிவிட்டார்.

முன்னாள் பொறியியலாளரான 89 வயதான ஹரோல்ட் கேம்பிங் எனும் இப்போதகரும் அவரின் ஆதரவாளர்களும் 2011 மே 21 ஆம் தேதி சனிக்கிழமை இறைவனின் நியாத் தீர்ப்பு நாள் எனவும் அன்று இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவார் எனவும் அருள்வாக்கு கூறியிருந்தார்.

உலகில் ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலை 6 மணியுடன் பூகம்பங்கள் போன்ற மிகப்பெரிய அழிவுகள் ஏற்பட்டு உலகம் அழிய ஆரம்பிக்கும் எனவும், சிறந்த கிறிஸ்தவர்கள் சொர்க்கலோகத்திற்கு கொண்டு செல்லப்படுவர் எனவும் விசுவாசமற்றவர்கள் இறந்துவிடுவர் கூறியிருந்தார்.
பல்வேறு நாடுகளில் 61 மொழிகளில் செய்யப்பட்டஇந்த கதையைஉண்மையென பலர் நம்பிநம்பிக்கொண்டிருந்தனர்.
பலர் உலகம் அழிந்துவிடப்போகிறதுதானே என எண்ணி தமது வேலையையும் விட்டு இந்த கிறுக்கனின் கூட்டங்களில் பங்கேற்றனர். நியூயார்க் நகரைச் சேர்ந்த ரொபர்ட் பிட்ஸ்பட்ரிக் என்பவர் சுமார் 140,000 டாலர்களை (சுமார் ஒன்றரை கோடி ரூபாய்) செலவிட்டு இவனின் கொள்கையை பரப்பிவந்துள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தைச் சேர்ந்த கீத் பேவ்யர் என்பவர் 4830 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து ஹரோல்ட் கேம்பிங்கின் பெமலி ரேடியோ எனும் பரப்புரை நிலையம் அமைந்துள்ள கலிபோர்னியா மாநிலத்தை அடைந்தார்.
‘இந்த பூமியைவிட சொர்க்கலோகம் நன்றாக இருக்கும் என நான் நினைத்தேன் என்கிறார் அவர்.’ இது போன்று ஏராளமானோர் உலக அழிவு பரப்புரைகளை நம்பியதுடன் மற்றவர்களையும் நம்பவைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் எந்த நாட்டிலும் உலகம் அழிவது போல் ஒரு நிகழ்வு நிகழ்ந்துவிடவில்லை. உலகில் எங்கும் மிகப்பெரிய பூகம்பம் ,சுனாமி போன்ரஎதுவும் ஏற்படவில்லை. அதையடுத்து ஹரோல்ட் கேம்பிங்கும் அவரின் ஆதரவாளர்கள் கூறியது முற்றிலும் பொய் என்பது நிருபணமாகியது.
அவர் கூறிய நேர எல்லையான கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் பின் ஹரோல்ட் கேம்பிங் எங்கும் தென்படவில்லை என பிபி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.தென்பட அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
உலகம் கடந்த சனிக்கிழமை (மே.21) அழிய போகிறது என பீதியைகிளப்பி, 200 மில்லியன் கிருஸ்தவர்கள் மட்டும் சொர்க்கத்திற்கு செல்வார்கள், மற்றையவர்களுக்கு நரகம் தான் என்று கூறி ஏமாற்றி தலைமறைவானவர்.
Harold Camping இப்போது மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது போல்
வந்து விட்டார்.”முன்பு கணித்தது தப்பாகிவிட்டது. அக்டோபர் 21ம் தேதி நிச்சயம் உலகம் அழியும்'’ எனக்கூறிவருகிறார்.
அதையும் நம்ப சிலர் தயாராகி வருகின்றனர். நீங்கள் எப்படி......அக்டோபர் 22ல் சந்திப்போமா?  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?