அலையலையாய் வரும் தகவல்கள்

அலைகற்றையில் பிரதமரை விசாரிக்கலையா?

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் கைதாகி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளவர்களில், முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெகுராவும் ஒருவர். இவருக்கு ஜாமீன் கேட்டு  அவரது வக்கீல் அமன்லே ஆஜராகி வாதாடும்போது:
:”ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விஷயத்தில் கொள்கை முடிவை சட்டத்திற்கு புறம்பாக மாற்றியது, அப்போது அமைச்சராக இருந்த ராஜா தான். இதற்கு காபினட் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதன் பின்னும் அவர், பிரதமர் மன்மோகன், மற்றும் தலைவர்கள்,மற்ற அமைச்சர்களின் நம்பிக்கையையும் ராஜா பெற்றிருந்தார். தொலைத்தொடர்பு கொள்கையை உருவாக்கியதில் பிரதமர் மற்றும் நிதி, சட்ட அமைச்சர்களுக்கு பொறுப்பு உள்ளது. இதில், அரசு அதிகாரியான எனது கட்சிக்காரர் எப்படி பொறுப்பு ஏற்க முடியும். அரசின் கொள்கையை அமல்படுத்தியதற்கு பொறுப்பு ஏற்க முடியாது. இந்த ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டிற்கு முழு பொறுப்பும் அப்போதைய அமைச்சர் ராஜா மற்றும் மத்திய அமைச்சரவையையே சேரும். ராஜா தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, தவறான கொள்கையை கடைபிடித்ததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

செயல்படுத்த திட்டம் ஏற்புடையது இல்லை என்றால், அது பிரதமர் தலைமையிலான காபினட் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கும். இது குறித்து முக்கிய பொறுப்பில் இருந்த அமைச்சர்கள் பொருத்தமான நடவடிக்கை எடுத்திருந்தால் இதை தடுத்திருக்க முடியும். இதை தாண்டி செயல்படுத்தும் நிலையில் இருக்கும் அதிகாரியால் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்.”என்று அமன் லே சொன்னார்.                                                                                                         
"ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.,வுக்கும் பங்குள்ளது. ஆனால், இந்த விஷயம் குறித்து பேசும்போது, இரு கட்சிகளும் பொதுவில் கொஞ்சி குழாவிக் கொள்கின்றனர். தனிப்பட்ட முறையில் குறைகூறிக் கொள்கின்றனர்'டில்லி வந்த கருணாநிதியை அமைச்சர்கள் சிதம்பரமும், குலாம் நபி ஆசாத்தும் சந்தித்து, கனிமொழி கைது தொடர்பாக அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றனர். இதற்கு பின்னால் பார்த்தால், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல் காட்டிக் கொள்கின்றனர். "2ஜி' ஊழலுக்கு தி.மு.க., தான் முழு காரணம் என்று பழி போட, காங்கிரஸ் முயற்சிக்கிறது. உண்மையில் இந்த ஊழலுக்கு ஆரம்பம் முதல் காங்கிரசும், தி.மு.க.,வும் தான் காரணம்’ என, பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஜகத் பிரகாஷ் கூறினார்.
 ஆனால் பிரமோத் மகாஜன்,அருண் ஜேட்லி கால அலைக்கற்றை வரலாற்றையும் அலச வேண்டும் என வேண்டுகோள்கள் விடப்பட்டுள்ளன.அப்போதுதான் இதன் முழு ஊழல் வடிவமும் வெளியே வரும் எனத்தெரிகிறது.
=============================================================================
 ராஜீவ் கொலைக்கு காரணம் யார்
இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டாக சென்று படுகொலை செய்து இருந்த தேன்மொழி இராஜரட்ணம் அல்லது தனு இந்தியாவின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளிடம் ஆயுத பயிற்சி பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒருவர் என்று பயங்கரவாத விவகாரங்கள் தொடர்பான உலக நிபுணர்களில் ஒருவரான ரொஹான் குணரட்ண தெரிவித்து உள்ளார்.

சீனாவுடனான இலங்கையின் நெருக்கமான உறவு இந்தியாவின் கோபத்தை மீண்டும் கிளறி விடும் என்று விளங்கப்படுத்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவர் இவ்வாறு கூறி உள்ளார்.
இவரது பேட்டியில் உள்ள சில முக்கியத்தகவல்கள்:

1983 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 1987 மே மாதம் வரை ’ரா’ இலங்கைக்கு எதிரான 06 இயக்கங்களுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள், வழிகாட்டல்கள், அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை வழங்கி இருந்தது.
இந்த இயக்கங்களில் புலிகளும் ஒன்று. இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் புலிகளுக்கு முதலாவது பயிற்சி வழங்கப்பட்டது. பிரபாகரன் இப்பயிற்சிகளை சரியாகப் பயன்படுத்தினார்.
இமாசல பிரதேச மாநிலத்தில் இரண்டாவது அணிக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் எட்டு அணிகளுக்கு தமிழ் நாடு மாநிலத்தில் வைத்து பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ் நாட்டில் பயிற்சி பெற்ற புலிகளில் ஒருவர்தான் தனு. "
  -இவ்வாறு குணரட்ன  தெரிவித்துள்ளார்.
 ராஜீவ் கொலையாளிக்கு பயிற்சி கொடுத்தது யார்? என்பது தெரிகிறது.தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பதுதான் வழமையாகி விட்டதே.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?