ராஜா - இரண்டாம் இடமா?

அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் கெட்டப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.

நியூயார்க்கில் இருந்து வெளியாகும், "டைம்ஸ்' இதழின் இப்பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சன் அரசில், அந்நாட்டு ராணுவ ரகசியங்களை கசிய விட்டவர். இரண்டாம் இடத்தில் இருப்பவர், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா.3. லிபியா ஆட்சியாளர் முவாம்மர் கடாபி,4. வடகொரியா சர்வாதிகார ஆட்சியாளர் கிம் ஜாங் - 2,5. இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோரை பந்தயத்தில் முந்தி, ராஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் எல்லாம் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ராஜா குறித்து, "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "முன்னர், அசைக்க முடியாத அளவிற்கு அதிகாரத்தில் பீடத்தில் அமர்ந்திருந்த இந்திய கூட்டணி ஆட்சிக்கு, தற்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவில் எப்போதும் நடைபெறும், குதிரை பேரத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர் ராஜா. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், இந்திய அரசுக்கு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே, இது மிகப்பெரிய ஊழல். இந்த ஊழலால், ராஜாவைச் சேர்ந்த கட்சி கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்திய நீதிமன்றத்தில், இந்த வழக்கு இஞ்ச், இஞ்சாக நகர்ந்து முன்னேறி வருகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில், டைகோ தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் கோஸ்லோஸ்கி, இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோசி கத்சவ், சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஜெங் ஜியாவ்யு மற்றும் 1992ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக இருந்த ஆல்பர்ட் பால் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
0 அதெல்லாம் சரி .நம்ம ஊரு ராஜா உலக அளவில் இப்படி ஒரு பெயரை தமிழ்நாட்டிற்கும்-இந்தியாவிற்கும் பெற்றுத்தந்துள்ளார்.இதற்காக நாம் பெருமைப்படுவதா?அல்லது அழுவதா? ஒரே குழப்பமாக இருக்கிறது.
கலைஞரைத்தான் கேட்க வேண்டும்.அவர் என்ன சொல்லுவார்.”ராஜா தலித் அதனால்தான் இப்படி டைம்ஸ் பழிவாங்கி விட்டது.கல்மாடி,3ஜி டேவா நிறுவனம் பற்றி ஏன் கண்டு கொள்ளவில்லை. உண்மையில் இப்பெயர் ராஜாவை விட மறைமுகமாக உள்ள சிலருக்குத்தான் பொருந்தும்.” என்பார்.
ராஜா இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் முதல் இடத்தைப் பிடித்திருக்கலாமோ?
========================================================================
 சி.பி.ஐ ,க்குத்தேவை நல்ல துப்பறிவாளர்கள்
 
சி.பி.ஐ. தலைமையகம்
சி.பி.ஐ. தலைமையகம்
இந்தியாவின் மத்தியப் புலனாய்வுத்துறை அண்மையில் வெளியிட்டிருந்த தேடப்படுவோர் பட்டியலில் இரண்டு பேர் இந்தியாவில்தான் உள்ளனர் என்று தற்போது தெரியவந்துள்ளது இந்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முதன்மை புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ. சமீபத்தில் அடுத்தடுத்து செய்த குளறுபடிகளால் அது பொதுமக்களின் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது.
இந்தியாவில் தேடப்படும் 50 பயங்கரவாத சந்தேகநபர்கள் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக சி.பி.ஐ. தயாரித்து அளித்த அறிக்கையை இந்திய அரசு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அவர்களை ஒப்படைக்குமாறு கோரியது. ஆனால் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளோரில் இருவர் தற்போது இந்தியாவில்தான் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதில் ஒருவர் கடந்த வருடமே கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்துள்ளார் என்றும், இன்னொருவர் மும்பையில் சிறையில் இருந்துவருகிறார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
அதேபோல வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இயங்கும் ஒரு கிளர்ச்சிக் குழுவின் தலைவரான ராஜ்குமார் மேகன் என்பரை தனது தேடப்படும் நபர்கள் பட்டியலில் சி.பி.ஐ. வைத்திருந்தது. ஆனால் இவர் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டு இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள விபரமும் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது புலனாய்வுத்துறையின் இணைதளத்திலிருந்து தேடப்படுவோர் பட்டியல் மத்தியப் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வேறு இரு உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
முதலில் நல்ல துப்பறிவாளர்களிடம் சி.பி.ஐ.ஆலோசனை செய்யட்டும். ஆளும் கட்சிக்கு எடுபிடி வேலைகளிலேயே கவனம் செலுத்தினால் இப்படித்தான். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?