காப்பாற்றதான காப்பீடு?

  இன்று18/05/2023.

ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலியானார்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு உயர்நீதிமன்றம்  தடை விதித்துள்ளது.

*ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்."

அதானி விவகாரம் பற்றி விசாரணை நடத்த செபிக்கு மேலும் 3 மாதம் அவகாசம் விதித்துள்ளது உச்சநீதிமன்றம்

*ராகுல், கார்கேவை சந்தித்த பின் தனது ஆதரவாளர்களுடன் டி.கே.சிவகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.

*காரி பருவத்திற்கான உர மானியம் வழங்க ரூ.1.08 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

*6 மாநிலங்களில் 200-க்கும் அதிகமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

*மருத்துவமனை பாதுகாப்பு அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது கேரள அமைச்சரவை.

*2024இல் இந்தியப் பொருளாதாரம் 6.7 சதவீத வளர்ச்சி அடையும் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

*கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்..


காப்பற்றதான காப்பீடு.

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் வகையில், அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பது என பல்வேறு வகையில் தனியார்மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது மோடி அரசு.
அரசுக்கு இருக்கும் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை தங்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்.

இதன் தொடக்கமாக கடந்த 2021 பிப்ரவரி 1 ஆம் நாள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசிடம் உள்ள எல்.ஐ.சி.யின் 100 சதவிகிதப் பங்குகளின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்கப் போவதாக அறிவித்தார்.

அதோடு அல்லாமல், இதற்கான பொதுக்காப்பீட்டுத் திட்ட மசோதாவை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு.

 மேலும் எல்.ஐ.சி பங்குகளை விற்பதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி கொடுத்தது.

அதன்படி, அரசிடம் இருந்த 4.99 சதவிகித பங்குகள் விற்கப்பட்டது. கடந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி மே9 ஆம் தேதி வரை வரை நடைபெற்ற இந்த விற்பனையின்போது எல்.ஐ.சி.யின் பங்கு விலைகள் ரூ.902-949 என்ற கணக்கில் விற்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து எல்.ஐ.சி.யின் பங்குகள் மே 12-ம் தேதி பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலே கடும் சரிவை சந்தித்த நிலையில், அது தொடர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எல்.ஐ.சி.யின் பங்குகள் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில், இந்த பங்கு விற்பனை நடந்து ஒரு ஆண்டில் மட்டும் எல்.ஐ.சியின் சந்தை மூலதனம் 35% வீழ்ச்சியை சந்தித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 கடந்த மே மாதம் இதே நாளில் எல்.ஐ.சியின் சந்தை மூலதனம், அப்போது ரூ.5.48 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.3.59 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. 

இதனால் எல்.ஐ.சி.யில் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கானோரின் சந்தை மதிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

-------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?