இன்று.......
சுருக்கச் செய்திகள்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய 6 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில், கூர் ஆயுதங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், சட்டவிரோத ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணை மிரட்டியதாக அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் சதீஷ் குமாரும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணி ஆகியோர் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
*ஓ.பன்னீர்செல்வம்-டிடிவி தினகரன் இணைந்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
*அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
*படைப் பகுதித் தலைவர் (Brigadier), அதற்கு அதிகமான ரேங்க் கொண்ட அதிகாரிகளுக்கு ராணுவத்தில் பொதுவான சீருடை இருக்கும் என ராணுவ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
*மத்தியபிரதேசத்தில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
*பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறப்புப் படை பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
*இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பொதுவெளியில் பேசியது தவறு என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தைப் போல் தெலங்கானாவிலும் இஸ்லாமியர்களுக்கு 4% இட ஒதுக்கீடு ரத்தாகும் என அமித் ஷா கருத்து தெரிவித்திருந்தார்.
-----------------------------------------------------------