வருவாய் அதிகரிப்பு

 இந்த நிதியாண்டில்  

2022-23 நிதியாண்டில் வணிகவரித்துறையில் ரூ.1,33,541 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல்;

2021-22 நிதியாண்டை விட ரூ.28,448 கோடி வருவாய் கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளது!

மோக்கா புயல் பலி எண்ணிக்கை 6 

குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள், 700க்கும் மேற்பட்டோர் மோக்கா புயலால் காயப்பட்டிருப்பார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

1000க்கும் மேற்பட்டோரை கடல் நீர் சூழ்ந்தது. மேற்கு மியான்மிரை ஞாயிற்றுக்கிழமையன்று மோக்கா புயல் தாக்கியது. இதில் 700 பேர் காயமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.  

வரும் 2 நாட்களுக்கு அதிமாக சுட்டெரிக்கப்போகும் வெயில்

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பம் உயரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 3 வரை வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.  

ஊட்டி மலர் கண்காட்சி நிறைவு 

ஊட்டியில் கோலாககலமாக நடைபெற்ற 18வது மலர் கண்காட்சி நிறைவுபெற்றுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த மலர் அலங்காரங்களை இன்னும் சில நாட்களுக்கு காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

திடீரென கழன்ற ரயில் பெட்டிகள்!

சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரெயிலிருந்த 8 பெட்டிகள் திடீரென கழன்றதான் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினை ரெயில்வே காவல்துறைக்கு தெரியவர விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அங்கு ரயில்சேவை பாதிக்கப்பட்டது. 

காங்கிரஸ்க்கு மம்தா ஆதரவு

காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் ஆதரிப்பதாக மம்ஜா பேனர்ஜி அறிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் தன்னை எதிர்க்க கூடாது எனவும் காங்கிரசுக்கு அவர் நிபந்தனை விதித்துள்ளார். 

சுரன்16/95/2013

நியு மெக்ஸிகோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி; 7 பேர் காயம்

வடமேற்கு நியுமெக்ஸிகோவில் 18 வயது நபர் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 2 போலீஸ் அதிகாரிகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.  .


முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு 

பாகிஸ்தான் ராணுவம் நான் சிறையில் இருந்தபோது வன்முறையை சாக்குபோக்காக பயன்படுத்தி மரண தண்டனை விதிக்க முயன்றது. அது நடக்கவில்லை. தற்போது என் மீது தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தி 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க திட்டமிடுகின்றனர். கடைசி துளி ரத்தம் உள்ள வரை, நாட்டு மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்.   

வாட்ஸ் அப்பில் புதிய வசதி 

உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பிறர் பார்க்க அனுமதிக்கிறீர்களா? தனிப்பட்ட சாட்களை லாக் செய்யும் வசதி விரைவில் வரவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 

-----------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?