வரலாற்றுப் பாடம்
ஜனநாயகக் குடியரசை சர்வாதிகார முடியரசாகப் படிப்படியாக மாற்றிய ஒரு தலைவர்,
"நான் விஸ்வகுரு , என் நாட்டின் தலைநகர் தான் உலகத்திற்கே தலைநகர்" என்று பிரகடனம் செய்தார்.அதைப் பறைசாற்றும் வகையில், பல்லாயிரக் கணக்கான கோடிகள் செலவில்,
உலகிலேயே மிகப் பிரமாண்டமான முறையில் தன் தலைநகரை மறுகட்டுமானம் செய்ய திட்டம் தீட்டினார்.
புராதன வரலாற்றுக் கலை அம்சங்களுடன், அதிநவீன வசதிகளுடன் புதிய பாராளுமன்றம், அதைச் சுற்றி மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், ராஜ பாட்டைகள், உலகத்தின் மிகப்பெரிய வெற்றித் தோரண வாயிலை விட50 மடங்கு பெரிய வாயில், மிகப்பிரம்மாண்ட விஸ்வகுருவிற்கான அரண்மனை, அதிலிருந்து பாராளுமன்றத்திற்கு நேரடி நிலத்தடி பாதை என அந்த சொர்க்க புரியைக் கட்டத் திட்டமிட்டார்.
அதற்கு கட்டடக் கலை யோசனைகள், நுணுக்கங்கள் பெற அவர் போகாத நாடில்லை! பேசாத கட்டடக்கலை வல்லுநர்கள் இல்லை!தான் நிறுவிய ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கப் போகிற அரசின் பீடமாக, உலக தலைநகராக இருக்கப் போகும் நகரை பார்த்துப் பார்த்து ஆசை ஆசையாக நிர்மானித்துக் கொண்டிருந்தார் அவர்!
பாவம, புதிய உலகத் தலைநகரில்,
அதிசயங்களின் அரண்மனையில், பிரமாண்ட பாராளுமன்றத்தில் ஆண்டு அனுபவிக்க கொடுத்து வைக்காமல்சிலமாதங்களிலேயே தோற்றுப் போய், பதவியிழந்து விட்டார். அந்த 'ஆயிரமாண்டு' அரசும் அழிந்து விட்டது.
அந்த தலைவர் தான் உலக மகா கொடுங்கோலன் இட்லர்!
வாழ்ந்தவர் கோடி.
மறைந்தவர் கோடி.
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
கொடுங்கோலர்கள் பெயர்களும் மறக்கப்படுவதில்லை.
------------------------------------------------------
- இன்று(25/05/23)
- இந்தியாவில் ஓய்ந்தது வெப்ப அலை ஓய்ந்தது. இன்னும் இரண்டே நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. பொது கலந்தாய்வு ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது.
- நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்த முடிவை பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி இன்று அறிவிக்கிறது.
- டெல்லி அரசுக்கெதிரான பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சரத்பவாரை சந்தித்து பேசுகிறார்.