செங்கோல் வரலாறு

 அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் வீடு, அலுவலகங்களில் இரவிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. கரூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு .

முறையின்றி சோதனை தவறு என எதிர்ப்பு.

தெற்கு ஆசியாவில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று ஜப்பான் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டான். வேளாங்கன்னி அருகே தலைமறைவாக இருந்தவனை காவல்துறையினர் கைது வெசய்தனர்.

அத்திக்கடவு - அவினாசி திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். 99 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

பேரை கொன்ற அரிசி கொம்பன் யானை மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்தது. குமுளி மலைச்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தினேஷ் குண்டுராவ், ஹெச்.கே.பாட்டீல் உள்ளிட்ட 24 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கிறார்கள்.

செங்கோல் கொடுத்த புகைப்படத்தில் மவுண்ட்பேட்டன் இல்லை எந்த ஆதாரமும் இல்லையென திருவாவடுதுறை ஆதீனம் விளக்கமளித்துள்ளார்.

பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாக இருப்பதும், ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாக இருப்பதும் ஏன்? 9 ஆண்டு கால பாஜக அரசுக்கு அடுக்கடுக்காக 9 கேள்விகளை எழுப்பியுள்ளது காங்கிரஸ்.

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வலா நியமிக்கப்பட்டுள்ளார்.

-------------------------------------------------------

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று .(27.5.1964)

நேரு நவம்பர் 14, 1889ம் ஆண்டு அலகாபாத்தில் பிறந்தார். 

இவர் ஒரு குடிமைப்பணியாளராக வரவேண்டும் என்று விரும்பி மோதிலால் நேரு இவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். 

ஆனால் ஜவகர்லால் நேரு, ஹார்ரோவில் உள்ள பள்ளியை முற்றிலும் விரும்பவில்லை.

இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி முடித்துப் பின், ட்ரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். பின் தந்தையின் அழுத்தத்தின் பேரில், 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயில சேர்ந்தார். 

1912இல் வெற்றி பெற்று வழக்குரைஞர் ஆனார். பின் இந்தியாவில் வழக்கறிஞர் பணியாற்றினார்.

இவர் இந்திய தேசிய காங்கிரஸின் கொள்கைகள் பிடித்து 1919ல் அதில் இணைந்தார். 

அதோடு மகாத்மா காந்தியுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் 1923ல் அனைத்து இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளரானார். 

1929ல் காங்கிரஸின் தலைவரானார். 1930-35ல் காந்தி அவர்கள் முன்னெடுத்து சென்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றார்.

குழந்தைகள் மேல் அளப்பரிய பிரியம் கொண்டிருந்ததால், இவரின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.

 வெள்ளையர்களிடமிருந்து விடுதலை அடைந்த பின்னர் ஆகஸ்ட் 15, 1947ல் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். 

நேரு தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் குழந்தைகளுக்குப் பால் மற்றும் மதிய உணவு அளிக்கும் திட்டத்தையும் அமலாக்கினார். 

கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார்.

இவருக்கு கமலா கவுல் என்ற பெண்ணுடன் 17 வயதில் திருமணம் ஆனது. அப்போது கமலாவுக்கு 16 வயது. கமலா நேருவும் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகவே ஈடுபட்டார். இவர்களுக்கு இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் இருந்தார். 

பின் நாட்களில் இந்திரா காந்தி என்று அழைக்கப்பட்டார். சத்தியாகிரகம் மற்றும் காங்கிரசால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றதற்காக 1930 முதல் 1935 அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 

1935, பிப்ரவரி 14ம் தேதி அல்மோரா சிறையில் அவர் தனது சுயசரிதையை எழுதி முடித்தார்.

சிறையில் இருந்த நாட்களில், உலக வரலாற்றின் சில காட்சிகள் (1934), தன் சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார்.

 1964 இல் சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக காஷ்மீர் சென்றவர்,

 காஷ்மீரிலிருந்து திரும்பியதும் பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். இதன் விளைவாக 1964, மே 27 அன்று காலமானார். 

--------------------------------------

செங்கோல் வரலாறு.

ஆர்.எஸ்.எஸ்- பாஜக பாசிஸ்ட்களால் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் செங்கோல் அவர்கள் சொல்வது போல் சோழர் காலச் செங்கோல் அல்ல. 

குஜராத்தின் நர்மதை ஆறுக்கும், கர்நாடகத்தின் காவிரிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பை கி.பி.6 முதல் 12 வரை சாளுக்கியர்கள் ஆட்சி செய்தனர்.


கி.பி.8 ம் நூற்றாண்டில்  மேலைச் சாளுக்கியர்களால் கர்நாடகத்தில் பட்டடக்கல்லு எனுமிடத்தில் விருப்பாக்‌ஷா கோவில் கட்டப்பட்டது. அக்கோவிலில் நந்தி சின்னம் பொறித்த செங்கோலுடன் சிவன் சிலை அமைக்கப்பட்டது.

சாளுக்கிய அரசு உருவான வரலாறும், அவர்கள் யாரை வீழ்த்தினார்கள்,யாரிடம் வீழ்ந்தார்கள்

என்ற வரலாறை நீங்கள் படித்தால், இச்சின்னம் உருவாக்கப்பட்ட முழு வரலாறையும் நீங்கள் அறியலாம்.சுருங்கச் சொன்னால்,

குஜராத்திலிருந்து புறப்பட்டு தென்பகுதியை வெற்றிகொள்ள சாளுக்கியர்கள் முயன்றார்கள். சோழர்களோடு போரிட்டார்கள். ஆனால் சாளுக்கிய மன்னன், பல்லவ மன்னனிடம் தோற்றான் என்பது வரலாறு.

குஜராத்திகள் செங்கோலை அமைத்து தமிழ்நாட்டைக் கைப்பற்ற நினைக்கலாம்.

ஆனால் மாமல்லன் நரசிம்ம பல்லவனிடம் குஜராத்திலிருந்து புறப்பட்ட சாளுக்கியர்கள் தோற்றார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

                                   -சூர்யா சேவியர்

--------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?