பாசிச இந்து வெறி.

 "தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முன்னணி தொழில் நிறுவன அதிபர்களை சந்திக்கிறார்.

•வெப்ப சலனம் காரணாமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பல்லடம் அருகே பலத்த காற்றுடன் கூடிய மழையால் வாழை, தென்னை மரங்கள் சேதமடைந்தன.

• 7,000 நடன கலைஞர்கள் ஒரே இடத்தில் கூடி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது.

27 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த இளைஞர்களை பாராட்டி, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

• நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தல்..

• எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில் பிரதமர் நரேந்திர மோடி திறந்தால் புதிய கட்டிட திறப்பு விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிக்கும் என்று சிபிஎம்மின் ராஜ்யசபா எம்பி ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.

• ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளும் புறக்கணிக்கின்றன.

• டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் ஆதரவை திரட்டுகிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

• 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றும் பணி துவங்கியது. ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் வேண்டும் என்ற குழஅறிவிக்கப்பட்டுள்ளது.

• யுபிஎஸ்சி தேர்வுகள் முடிவில் முதல் 4 இடங்களை பெண்களே பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

• டெல்லியில் மல்யுத்த வீராங்களைகள் பேரணி நடைபெற்றது. நாடாளுமன்ற திறப்பு விழா அன்று அதன் எதிரே கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

• ஆந்திர மாவட்டம் பிரகாசம் மாவட்டத்தில் குட்டிகளுடன் புலி சுற்றித்திரிவதால், பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

--------------------

2022ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 


இதில் தேசியளவில் முதல் 4 இடங்களை பிடித்து பெண்கள் சாதனை புரிந்துள்ளனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதல் மூன்று இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. 

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் இந்த தேர்வை யுபிஎஸ்சி(UPSC) நடத்துகிறது.

அந்த வகையில், 2022ம் ஆண்டில், நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 பணி இடங்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி நடந்தது. முதன்மைத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றன. 

இதில், 2,529 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதில் 2022 யுபிஎஸ்சி தேர்வில் 933 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் தேசிய அளவில் முதல் நான்கு இடங்களை பெண்கள் கைப்பற்றியுள்ளனர். 

இஷிதா கிஷோர் என்பவர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

 கரீமா லோஹியா என்ற இளம்பெண் இரண்டாவது இடத்தையும், உமா ஹாரதி என்பவர் மூன்றாவது இடத்தையும், ஸ்மிருதி மிஸ்ரா என்பவர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதில் இஷிதா கிஷோர், கரீமா லோஹியா, ஸ்மிருதி மிஸ்ரா ஆகியோர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள்.

முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். 

இரண்டாம் இடம் பிடித்த கரீமா லோஹியா டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கிரோரிமல் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றவர்.

 மூன்றாம் இடம் பிடித்த உமா ஹாரதி ஹைதராபாத் ஐஐடியில் கட்டுமானப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர். நான்காம் இடம் பிடித்த ஸ்மிருதி மிஸ்ரா டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்றுள்ளார்.

யுபிஎஸ்சி தேர்வில் முதல் மூன்று இடங்களை பெண்கள் கைப்பற்றியிருப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2021ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெண்கள் கைப்பற்றியிருந்தனர். 

ஸ்ருதி ஷர்மா, அங்கிதா அகர்வால் மற்றும் காமினி சிங்லா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்திருந்தனர்.

2022ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்படி, தேர்ச்சி பெற்ற 933 பேரில், 613 பேர் ஆண்கள், 320 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் 25 இடங்களில், 14 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதல் 25 இடங்களைப் பிடித்தவர்கள், தங்களது முதன்மை எழுத்துத் தேர்வில், வணிகவியல் மற்றும் கணக்கியல், பொருளாதாரம், மானுடவியல், மின் பொறியியல், சட்டம், வரலாறு, கணிதம், அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள், சமூகவியல், விலங்கியல் போன்ற பாடப்பிரிவுகளை விருப்பப்பாடமாக தேர்வு செய்துள்ளனர்

. தமிழ்நாட்டில் மொத்தம் 39 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

--------------------------------------------------

பாசிச இந்து வெறி.

1927-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு சுமாா் 90 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள தற்போதைய நாடாளுமன்ற வளாகத்தில் இடப் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் இரு அவைகளிலும் உறுப்பினா்களின் பணித் திறன் பாதிக்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட இரு அவைகளிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, கடந்த 2020 -ஆம் ஆண்டு டிசம்பா் 10-ஆம் தேதி, பிரதமா் மோடி அடிக்கல் நாட்டிய புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் உரிய நேரத்தில் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

 தற்சாா்பு இந்தியா உணா்வை வெளிப்படுத்தும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி வரும் மே 28-ஆம் தேதி மதியம் 12 மணியளவில் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.


குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காதது,மட்டுமல்ல இந்து த்வாRSSபயங்கரவாதி வி.டி.சாவா்க்கரின் பிறந்த தினமான மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி எதிா்க்கட்சிகள் ஒன்றிய அரசை கடுமையாக விமா்சித்தன.ஒன்றிய  அரசு இவ்வாறு செயல்படுவது தேசத் தலைவா்களுக்கு செய்யும் அவமதிப்பு என்று காங்கிரஸ் கடுமையாக சாடியது.

பழங்குடி இனத்தவர் என்பதாலேயே சனாதன வழமைப்படி செயல்படிம் பா.ஜ.க இந்தியாவின் முதல் குடிமகன் பெருமைக்குரிய குடியரசுத்தலைவரை மர்மு வையே இந்திய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைக்காமல் சிறுமைப் படுத்தி கேவலமாக நடந்து கொள்கிறது.


இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவைப் புறக்கணிக்க போவதாக திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய எதிா்க்கட்சிகள் அறிவித்துள்ளன. நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முறையாகப் பெற்றதும், புறக்கணிப்பு அறிவிப்பை அதிகாரபூா்வமாக வெளியிடுவோம் என எதிா்க்கட்சிகள் தெரிவித்துள்ளனா்.


நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாகுறித்து அதிருப்தி தெரிவித்து மாநிலங்களவைத் தலைவா் டெரிக் ஒபிரையன் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நாடாளுமன்றம் என்பது வெறும் புதிய கட்டடம் மட்டும் இல்லை. பாரம்பரியம், மாண்புகள், மரபுகள் மற்றும் முன்னுதாரணங்கள் நிறைந்த அமைப்பு அது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும். 

இது எதுவும் புரியாமல் நான், எனது, என்னுடைய என சுயபெருமைகள் பாடும் நிகழ்வாக மட்டும் புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை நடத்த பிரதமா் முயல்கிறாா். 

இக்காரணத்தால் திறப்பு விழாவைப் புறக்கணிக்க திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளோம்’ என்றாா். இதே கருத்தை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜாவும் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக தெரிவித்தாா்.


இதேபோல், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவா் திறக்காதது ஏமாற்றம் அளிப்பதாக கூறி திறப்பு விழாவை புறக்கணிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, கம்யூனிஸ்ட், திமுக  உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளன.

இந்நிலையில் மே 28ஆம் தேதி நடைபெறும் இந்த திறப்பு விழாவில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, சண்முகம் உள்ளிட்டோர் அதிமுக சார்பில் கலந்து கொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?