புதுசுக் கண்ணா,புதுசு!

 ஜப்பானில் பழமையான ஒசாகா கோட்டையை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவு செய்யவேண்டும்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது. சினிமா பாணியில் ப்ளூடூத்தை காதில் மறைத்து வைத்து காப்பியடித்த நபர் கைது செய்யப்பட்டார்.

பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் பூச்சிதாக்குதலால் பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 50 ரூபாய்க்கு கீழ் விற்கப்படுவதால் விவாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன்களில் டாம் என்ற வைரஸ் பரவி மெசேஜ்கள், அழைப்புகள், கேமரா உள்ளிட்டவற்றை ஹேக் செய்வதாக மத்திய அரசின் தொழில்நுட்பக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களில் இருந்து தரவிறக்கம் செய்வதை தவிர்க்க மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்திய குடிமைப்பணி 2023ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று நடக்கிறது.

குடியரசுத்தலைவர் அழைக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து தாடாளுமன்றப் புதிய கட்டிடத் திறப்ப விழாவை எதிர்கட்சிகள் புறக்கணித்தன.

டெல்லியில் ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 21 ஆதீனங்கள் பங்கேற்கிறார்கள். காலை 8.30 மணி முதல் 9 மணி வரை மக்களவைக்குள் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்க்குள் செங்கோலை நிறுவுகிறார் பிரதமர் மோடி.

மஹாராஷ்ட்ரா முழுவதும் உள்ள கோயில்களின ஆடை கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும் என்று அம்மாநில கோயில் கூட்டமைப்பு சங்கம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக நாக்பூரில் உள்ள கோபாலகிருஷ்ண கோயில், பெலோரியின் சங்கத்மோச்சன் பஞ்சமுக அனுமன் கோயில் உள்ளிட்ட 4 கோயில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வேலையை இழந்த மன அழுத்தத்தில்தான் விமானத்தின் கதவுகளை திறந்தேன் என்று தென்கொரியாவில் தரையிறங்கும்போது, ஏசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை திறந்த 30 வயதான நபர் போலீசிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்ற 26ம் தேதி இச்சம்பவம் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் உள்ள வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் திருநாவுக்கரசர் என்பவர் காயமடைந்தார். வீட்டில் இருந்த மற்றவர்களை இரவோடு இரவாக தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

விநாயக் தாமோதர் சாவர்க்கர்

விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற பொதுவாக வி.டி. சாவர்க்கர், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு சர்ச்சைக்குரிய,சந்தேகத்துக்குரிய நபராகத்தான் வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறார்.

 விடுதலைப்போராட்ட வீரர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி உள்ளிட்ட பன்முகத்தன்மை கொண்டவராக அறியப்படும் சாவர்க்கர், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைம் போராட்டத்திஅடிப்படைவாத தீவிர இந்துத்துவா கொள்கைகளை ஆதரித்ததற்காக அவர் மீது இன்றளவும் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஐம்பதாண்டு சிறை விதிக்கப்பட்ட சாவர்கர் ஆங்கிலேயனுக்கு துதி பாடியும்,ஆறு முறை மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளியே வந்துவிட்டார்..

மேலும் அவருக்கு மாதம் 60 ரூபாய் ஆங்கிலேய அரசு ஊதியம் வழங்கியது.

எதற்கு? 

விடுதலைப் போராட்ட வீர்ர்களைக் காட்டிக் கொடுப்பதற்கு.அவர்கள் போடும் திட்டங்களைப் பற்றி போட்டுக் கொடுப்பதற்கு.

 பாஜக முன்னெடுக்கும் சனாதன இந்துத்துவ அரசியலின் அடிப்படைவாதியான முகமாக கருதப்படும் சாவர்க்கர் பிறந்தநாள் இன்று .

அதைக் கணக்கிட்டுத்தான் நாடாறுமன்ற புதியக் கட்டிடம் திறப்பு விழா நடத்துகிறார் மோடி.

சனாதனதர்ம்படி தாழ்த்தப் பட்ட இனத்தைச் சார்ந்த  குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை.

பா.ஜ.க எவ்வளவு சனாதன வெறி பிடிச்சவனுங்க தெரியுமா? 

திரவுபதி முர்மு குடியரசுத் தலைவரான பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் லண்டனுக்கு தான். அதுவும் இங்கிலாந்து ராணி எலிசபெத் அஞ்சலி நிகழ்ச்சிக்கு! 

அவ்வளவு உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர் தம் முதல் வெளிநாட்டு பயணம்.

ஒரு துக்க நிகழ்வில் கலந்து கொள்வது தான் என்றால் அதை விரும்புவார்களா? ஆனால் இவர்கள் குடியரசுத் தலைவரை தான் இந்தியா சார்பாக அனுப்பி வைத்தார்கள். 

அதே லண்டனில் இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டது யார் தெரியுமா? குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தங்கர்!பிராமணர்.

அந்த நிகழ்வு நடக்கும் போது திரவுபதி முர்மு இந்தியாவில் தான் இருந்தார். இப்போது புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அவருக்கு அழைப்பு கூட இல்லை! 

நாங்கள் பட்டியல் இனத்தவரை ஜனாதிபதியாக்கினோம், 

ஆதிவாசியை ஜனாதிபதியாக்கினோம் என்று செய்தது எல்லாம் அவர்களை அவமானப்படுத்தவே!

----------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?