சட்டம் 40
புழல் ஏரியில் நீர்இருப்பு 2367 மில்லியன் கனஅடியாக உள்ளது; 59 கனஅடி நீர் வெளியேற்றம்
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 729 மில்லியன் கனஅடியாக உள்ளது
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 463 மில்லியன் கனஅடியாக உள்ளது.
கரூர் பரமத்தியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகி உள்ளது. வேலூர், திருத்தணி, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது வெப்ப நிலையால் மக்கள் அவதியடைந்தனர்.
5 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
இன்று இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 ஆவது நினைவு தினம்.. நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின் முதல் முறையாக நாளை தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டத்தொடர். 3 நாட்கள் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 365 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று (மே 21) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கும் ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.
உக்ரைனின் பேமுத் நகர் கைப்பற்றப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது. ஆனால் கிவ் அதை மறுக்கிறது
சட்டம்-40
உலகநாயகன்கமல்ஹாசன் நடிப்பில் நட்பு, காதல், துரோகம் போன்ற விஷயத்தை அடிப்படையாக கொண்ட படமாக இருந்த சட்டம் .
ஒரு கமர்ஷியல் ஹிட்டாகவும் அமைந்தது.இந்தியில் அமிதாப் பச்சன், சத்ருகன் சின்ஹா, ஸீனத் அமான் என பெரிய நட்சத்திரங்கள் நடித்து வசூலில் பட்டையை கிளப்பிய தோஸ்தானா படத்தின் தமிழ் ரீமேக்தான் சட்டம் என்ற பெயரில் கமல்ஹாசன், சரத்பாபு, மாதவி நடிப்பில் உருவானது.
நட்புக்கு இலக்கணமாகவும், காதலால் நட்புக்கு இடையே ஏற்படும் பிளவு பின்னர் சுபம் என கமர்ஷியல் பார்முலாவின் உருவான இந்தப் படம் கமலுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. நட்ப்பை பறைசாற்றும் விதமாக கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்றாக இந்த சட்டம் படம் இருக்கும்.
இன்ஸ்பெக்டரான கமலும், வக்கீலான சரத்பாபுவும் வெவ்வேறு தருணங்களில் மாதவியை சந்திக்கிறார்கள். இருவரும் மாதவி மீது காதல் வயப்படுகிறார்கள். இது ஒரு கட்டத்தில் தெரியவர இருவரின் நட்புக்குள்ளும் பிளவு ஏற்படுத்துகிறார்கள்.
இருவருக்கும் பொது எதிரியாக திகழும் கடத்தல்காரர்களான ஜெய்சங்கர், விஜய்குமார். அப்புறம் வழக்கமான பரஸ்பர அன்பு, விட்டுக்கொடுத்தல், மீண்டும் நண்பர்கள் ஒன்றிணைதல் என படம் முடிகிறது.
சட்டம் வெளியான 1983ஆம் ஆண்டில் கமல்ஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் பிஸியான நடிகராக இருந்தார்.
தமிழில் கமல் நடிப்பில் சட்டம், தூங்காதே தம்பி தூங்காதே என இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின.
சட்டம் திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிப்படமாக அமைந்தது.
--------------------------------------------------------------