களவுபோனக் கழிப்பறை?
ஏ.ஐ. பெண்ணிடம் ஏமாந்தவர்.
தாங்கள் விரும்பும் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்குச் செலவிட போதுமான வருமானம் இல்லாமல் 100 கோடி தனிநபர்கள் தவிப்பதாக Blume Ventures நிறுவனம் நடத்திய ஆய்வு
தெரிவிக்கிறது.அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாற்பட்டதாக பார்க்கப்படும் OTT தள பயன்பாடு, கேமிங், கல்வி நுட்பவியல், ஆடம்பர வீடுகள், பிரீமியம் போன்கள் உள்ளிட்டவைகளை வாங்கும் வர்க்கம் இந்தியாவில் வெறும் 10% பேர் மட்டுமே எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதி கொடுத்து எடப்பாடி ஏமாற்றியதாக திண்டுக்கல் சீனிவாசன், தூத்துக்குடியில் பரபரப்பு பேச்சு.
ஏ.ஐ,(செயற்கை)பெண்ணிடம் ஏமாந்தவர்.
செய்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஆக்கப்பூர்வமான பல வேலைகளுக்கு உதவினாலும், அதனால் உபத்திரவமும் உண்டு என்பதற்கு, சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாகியுள்ளது. ஆம், சீன இளைஞர் ஒருவர், ஏஐ காதலியிடம் லட்சங்களை இழந்துள்ளார்.

வச்ச குறி தப்பாது என்பதுபோல், தாங்கள் விரித்த வலையில் அந்த இளைஞர் சிக்கியதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டது அந்த மோசடி கும்பல்.
ஏஐ மூலமாகவே அந்த பெண் தொடர்பான அடையாள ஆவணங்களை உருவாக்கிய அந்த கும்பல், இளைஞரிடம் பிசினஸ் செய்யலாம் எனக் கூறியும், குடும்ப உறுப்பினருக்கு உடம்பு சரியில்லை, மருத்துவ செலவிற்கு பணம் வேண்டும் எனக் கூறியும், பணத்தை கரந்துள்ளனர்.
இதற்கான ஆவணங்களையும் ஏஐ மூலமாகவே அவர்கள் உருவாக்கியுள்ளனர். இப்படியாக, சுமார் 24 லட்சம் ரூபாயை அந்த இளைஞரிடம் இருந்து சுருட்டியுள்ளது அந்த மோசடி கும்பல். இது குறித்து விசாரித்த காவல்துறையினர், இளைஞருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள், வீடியோக்கள் எல்லாம், பல படங்களை இணைத்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்காக ஒரு குழுவே செயல்பட்டுள்ளதும் அவர்களது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால், பல சாதகமான விஷயங்கள் இருந்தாலும், இதுபோன்ற ஏமாற்று வேலைகளும் அதிகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதிலும், ஏஐ மூலம், உயிர்புடன் இருப்பதுபோன்ற படங்களையும், வீடியோக்களையும் உருவாக்க முடியும் என்பதால், அதை வைத்து ஏமாற்றவும் ஒரு கும்பல் கிளம்பிவிடும். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். அதையேதான், சமீபத்தில் மெட்டா நிறுவனமும் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐந்தே நிமிடங்களில் பிரிட்டனில் உள்ள பிளெனம் அரண்மனையிலிருந்து 4.8 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 53 கோடி) மதிப்பிலான தங்க கழிவறை இருக்கை 5 நிமிடங்களில் திருடப்பட்டதாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது.
பிரிட்டனை சேர்ந்த 39 வயதான மைக்கேல் ஜோன்ஸ் இந்த குற்றச்செயலில் தனக்கு எந்த தொடர்பு இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதேபோல, விண்ட்சர் பகுதியை சேர்ந்த 36 வயதான ஃபிரெட் டோ என்பவரும் 41 வயதான போரா குச்சுக் என்பவரும், திருடப்பட்ட அந்த கழிவறை இருக்கையை இடம் மாற்றியதில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தனர்.