அவசியம் என்ன?
'ஒன்றிய' நிதிநிலை அறிக்கை? தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சிப்பதும், ஒன்றிய நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதும், ஒன்றிய பா.ஜ.க அரசின் வழக்கமான நடவடிக்கையாக உள்ளது. இந்தியாவின் முன்னோடி மாநிலமாக இருந்து, பல துறைகளில் பல்லாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வரும் வேலையில், தமிழ்நாட்டை தகர்க்கும் வகையில் பெயர் குறிப்பிடப்படாத ஒன்றிய நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனை கண்டிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து தகவல் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள் - இரயில்வே திட்டங்கள் - கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்...