1.25 பில்லியன் ஊழல்?
உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் உள்ளிட்ட பல இடங்கள் சுற்றுலாத்தலமாக மட்டுமல்லாமல், மத வழிபாட்டுத் தலமாகவும் திகழ்கின்றன. கேதார்நாத் கோயில் கருவறையில் தங்க பிளேட் பொருத்தியதில் ரூ.1.25 பில்லியன் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தொல்லியல் துறையின் மேற்பார்வையில் கோயில் கருவறை மற்றும் அதன் சுவர்களில் தங்க பிளேட் பொருத்தும் பணி நடந்தது. இதற்கு 23.777 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது.இதன் மதிப்பு 14.38 கோடியாகும். இது தவிர, ஆயிரம் கிலோ காப்பரும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இதில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது குறித்து சார்தாம் மகா பஞ்சாயத்து துணைத்தலைவர் சந்தோஷ் திரிவேதி அளித்த பேட்டியில், கேதார்நாத் கோயில் கருவறைக்கு தங்க பிளேட் பொருத்தப்பட்டதில் 1.25 பில்லியன் ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், தங்கத்துக்கு பதில் பித்தளை பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக மாநில சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சத்யபால் மகாராஜ் தெரிவித்திருக்கிறார்.
சார்தாம் யாத்திரையைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பதாகவும், பொற்கொல்லர்கள் உட்பட நிபுணர்கள் அடங்கிய குழு இது குறித்து விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சார்தாம் யாத்திரைக்குப் பயன்படுத்தப்படும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சார்தாம் யாத்திரை என்பது யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் போன்ற இடங்களுக்குச் செல்வதாகும்.
இவை மலைப்பகுதியில் இருக்கிறது. இந்த நான்கு இடங்களுக்கும் செல்லும்போது பயணிகள் ஏராளமான இன்னல்களைச் சந்திக்கின்றனர். கேதார்நாத் சார்தாம் யாத்திரை என்பது 20 முதல் 25 கிலோமீட்டர் தூரம் கொண்டதாகும்.
பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவோ அல்லது குதிரை மற்றும் கழுதை மூலமாகவோ கேதார்நாத் கோயிலுக்குச் செல்கின்றனர்.
இந்த கேதார்நாத் யாத்திரையின்போது குதிரை மற்றும் கழுதைகள் மிகவும் கடுமையாகச் சித்ரவதை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளிவந்தது. அதில் இரண்டு பேர் குதிரையைப் புகைபிடிக்க வைத்து சித்ரவதை செய்வது போன்று இருந்தது.
27 விநாடி வீடியோவில், இரண்டு பேர் குதிரையைப் புகைபிடிக்கும்படி வற்புறுத்துவதையும், அதன் மூக்கில் சிகரெட்டை தள்ளுவதையும் காண முடிகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது.
வீடியோவில் காணப்பட்ட ஒரு நபர் குதிரையின் மூக்கை இறுக்கி அதன் வாயை தனது கைகளால் மூடுகிறார். மற்றொருவர் குதிரையின் மூக்கில் கஞ்சா இருந்த சிகரெட்டை சொருவுகிறார்.
சில விநாடிகளுக்குப் பிறகு, குதிரை புகையை வெளியிடுவதைக் காண முடிந்தது. கேதார்நாத் மலையேற்றத்தில் இருவர் குதிரையை கஞ்சா புகைக்க வைத்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து கேதார்நாத் போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
மேலும், வீடியோவில் காணப்படும் நபர்களை அடையாளம் காண முயல்வதாக போலீஸார் தங்கள் ட்விட்டரில் தெரிவித்திருக்கின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அருகிலுள்ள காவல்துறை அல்லது 112 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இது தொடர்பாகக் காவல்துறையில் இதுவரை முறையான புகார் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.
இந்த விஷயத்தில் தேவையான உதவிகளை வழங்கியிருப்பதாக விலங்குகள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
நடிகை ரவீணா தண்டன் உத்தரகாண்ட் அரசிடம் இது தொடர்பாக புகார் செய்திருக்கிறார்.
குதிரையை சித்ரவதை செய்தவர்களைக் கைதுசெய்யுமாறு முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் ட்விட்டரில் வலியுறுத்தியிருக்கிறார்.
ரவீணா தனது ட்விட்டர் பதிவில், 'எங்கள் புனித இடங்களில் குதிரைகளைத் தொடர்ந்து துன்புறுத்துவதை நிறுத்த முடியுமா... அப்பாவிகள் சித்ரவதைச் செய்யப்படும்போது பிரார்த்தனையால் இவர்கள் என்ன பலன் அடைகிறார்கள்.
இவர்களைக் கைதுசெய்ய முடியுமா?' என கூறியிருக்கிறார்.
-----------------------------------
தீட்சதர்கள் ரவுடித்தனம்.
இதனையெடுத்து அறநிலையத்துறை செயல் அலுவலகர் சரண்யா, அரசின் உத்தரவை மீறி வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பதாகை குறித்தும், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்த தீட்சிதர்கள் மீது நடவடிக்கைக்க கோரியும் புகார் அளித்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் கோயிலுக்குள் வந்து சர்ச்சைக்குரிய பதாகையை அகற்றினர்.
கோவிலை வைத்து பிழைக்கும் கூலிகள் கூட்டமான தீட்சிதர்கள் கோவிலை தங்கள் சொத்து போல் அதிகாரம் செய்வதும்,அரசுக்கும் அதிகாரிகளுக்பும் அடங்காமல் செயல்படுவதும்,பக்தர்களை அடித்து உதைப்பதும் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
அவர்கள் பணியாளர்கள்தான் கோவில் உரிமையாளர்கள் அல்ல எனபதை அவர்கள் உணரும் வகையில் அடக்கி வைக்கப்படவேண்டும்.
----------------------------------------