மணிப்பூர் தோல்வி
மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் டபுள் இன்ஜின் சர்கார் தோல்வியடைந்துவிட்டது' என்ற வெளிப்படை விமர்சனம் எழத் தொடங்கியிருக்கிறது. ‘
இரும்பு மனிதர்’ என்றெல்லாம் பா.ஜ.க-வினரால் பெருமையுடன் குறிப்பிடப்படும் அமித் ஷாவால்கூட, மணிப்பூரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.
இத்தகைய சூழலில்தான், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சில தரப்பினரிடமிருந்து எழுந்தது.ஆனால், மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க அரசை கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைப்பது சரியானதல்ல என்றும், அது பா.ஜ.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பா.ஜ.க தலைவர்கள் கருதுகிறார்கள்.
எனவேதான், மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்த சூழலில், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற முடிவுக்கு அமித் ஷா இறங்கிவந்திருக்கிறார்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க சட்டமன்றக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தின. மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அந்தக் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையோ, மணிப்பூர் மக்களின் வேண்டுகோள்களையோ ஒன்றிய அரசு மதிக்காமலேயே இருந்தது.
அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் ஆகியோருடன் பிரதமர் மோடி சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களைக் கண்டு மணிப்பூர் மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.ஏற்கெனவே, ‘பிரதமர் மோடியைக் காணவில்லை’ என்று சுவரொட்டிகளை ஒட்டி தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய மணிப்பூர் மக்கள் மத்தியில், பிரதமர் மோடி மீதான கோபம் மேலும் அதிகரித்திருக்கிறது.
மணிப்பூரில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் இன வன்முறை, தேசத்தின் துயரமாக மாறியிருக்கிறது. மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பற்றியெரிந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கு அமைதியை நிலைநாட்ட உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாமல், அமெரிக்காவுக்குப் போய்விட்டார் பிரதமர் மோடி.
அதுமட்டுமல்ல மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடியைச் சந்திக்க வேண்டுமென்று மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஜக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் நேரம் கேட்டனர். பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கடந்த ஜூன் 10-ம் தேதி அளித்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கு முயற்சி செய்தனர்.
ஆனால் அதைக் காது கொடுத்துக் கேட்காமலேயே அவர்களைச் சந்திக்காமலேயே மோடி பைடன் மனைவிக்கான விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடன் அமெரிக்காவுக்குப் போய்விட்டார்.
தற்போது தீவிரமாகிவரும் மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க அரசை கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைப்பதுஎன்ற கோரிக்கை பா.ஜ.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பா.ஜ.க தலைவர்கள் அஞ்சுகிறார்கள்
எனவேதான், மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்த சூழலில், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற முடிவுக்கு அமித் ஷா இறங்கிவந்திருக்கிறார்.