மனு நீதி(பதி)

 தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் கிடையாது. 

தொடர்ந்து, வேளாண், குடிசை இணைப்புகள், 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும்.

தொடர்ந்து, வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது.

 புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இம்முறை மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

 அதன்படி, வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

------------------------------------------------


மனு நீதி(பதி)

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் 7 மாதகால கருவை கலைக்க அனுமதி கோரி அந்த சிறுமியின் தந்தை குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி சமீர் தவே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது .

அதனை விசாரித்த நீதிபதி “நாம் 21அம் நூற்றாண்டில் வாழ்கிறோம். 

ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது பாட்டியிடம் கேளுங்கள். அப்போதெல்லாம் 14-15 வயதில் திருமணம் ஆகி 17 வயதிற்குள் குழந்தை பிறந்துவிடும். 

ஆண்களுக்கு முன்பெ பெண்கள் முதிர்ச்சி அடைகிறார்கள். 

4-5 மாதங்கள் எல்லாம் பெரிய வித்தியாசம் இல்லை. மனு ஸ்மிருதியில் இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதை ஒரு முறை படியுங்கள்” என்று கூறினார்.

கோவிலில் மணியடித்து பூசை செய்பவரெல்லாம் நீதி வழங்கும் இடத்தில் இருந்தால் இப்படிபட்ட மடத்தனமானவைதான் நடக்கும்.

--------------------------------------------------

• மருத்துவ கலந்தாய்வை தமிழ்நாடு அரசே நடத்தும்

.நாட்டில் உள்ள 100 சதவீத மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே கலந்தாய்வை நடத்த உள்ளதாக அண்மையில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழமை போல் மாநில அரசே கலந்தாய்வு நடத்தும் என அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 3 உட்பட நாடு முழுவதும் புதிதாக 50 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் மருத்துவ படிப்புகளுக்கான 8,195 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

*கனடாவில் நடைபெற்ற காலிஸ்தான் ஆதரவு ஊர்வலத்தில் இந்திரா காந்தி படுகொலையை ஆதரித்து ஊர்வலத்தில் ஊர்தி இடம் பெற்றதை கடும் எதிர்ப்பு தெரிவித்து  கனடாஅரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம் செஹோர் பகுதியில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது. 55 மணி நேரம் போராட்டத்திற்குப் பின் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே ஆணையம் அளிக்கும் பரிந்துரைகள் கிடப்பில் போடப்படுவது அம்பலமாகியுள்ளது. 15 விபத்துக்கள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

--------------------------------------------

உணவே நஞ்சாகலாம்

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், 'உண்ட பின் நஞ்சாக மாறும்' (Food Poison) உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

அடிக்கடி 'உண்ட பின் நஞ்சாகும்' உணவுப் பொருட்கள் எவை என்பது பற்றியும் உணவில் தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.

அமெரிக்காவில் செயல்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDCP) தகவல் படி, வேகவைக்கப்படாத அல்லது பச்சையான இறைச்சி, சரியாகக் கழுவப்படாத காய்கறிகள், பச்சை பால், பிற பால் பொருட்கள், அதிக நேரம் சேமித்து வைக்கப்பட்ட முட்டைகள், மீன் போன்றவற்றை உண்ணும் போது அவை நச்சுத்தன்மைக்கு மாறுகின்றன எனத் தெரியவருகிறது. 

சரியாக சுத்தம் செய்யப்படாத உணவு. அசுத்தமான முளைகட்டிய பயறுகள், மற்றும் அதிக காலம் பயன்படுத்தப்படாத மாவு

பச்சையான அல்லது வேகவைக்கப்படாத இறைச்சியை உண்பதால் "உணவு நஞ்சாக" மாறும் ஆபத்துக்கள் அதிகம். 

இவற்றில் உள்ள நுண்ணுயிரிகளில் கேம்பிலோபாக்டர் என்ற பாக்டீரியா உள்ளது. சால்மோனெல்லா, க்ளோஸ்ட்ரிடியம் பெர்ஃபிரிங்கன்ஸ், மற்றும் ஈ.கோலி போன்ற நுண்ணுயிரிகளும் சில நேரங்களில் இருக்கலாம்.


பச்சை காய்கறிகள் சில நேரங்களில் சால்மோனெல்லா, ஈ.கோலி மற்றும் லிஸ்டீரியா போன்ற நுண்ணுயிரிகளைக் கொண்டிருக்கலாம். 

விளைவிக்கும் இடத்திலிருந்து நம் வீடு வரை அவை பயணிக்கும் எந்த இடத்திலும் மாசுபடலாம்.

சில நேரங்களில் அவை நம் சமையலறையில் உள்ள மற்ற பொருட்களில் படிந்துள்ள நுண்ணுயிரிகளால் மாசுபடலாம். அதனால் அவற்றை கவனமாக சுத்தம் செய்த பின்னரே உணவாக உட்கொள்ள வேண்டும்.


பச்சை பாலில் கேம்பிலோபாக்டர், கிரிப்டோஸ்போரிடியம், ஈ.கோலி, லிஸ்டீரியா, சால்மோனெல்லா போன்ற நுண்ணுயிரிகள் இருக்கலாம். இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம், தயிர் போன்றவையும் தீங்கு விளைவிக்கும்.

பாலில் உள்ள சத்துக்கள் அதை சூடாக்கும் போது பெரிய அளவில் அழிந்து போவதில்லை என்பதால் அதைச் சூடாக்கிச் சாப்பிடுவதே நலம்.

பச்சை பாலில் உள்ள லிஸ்டீரியா என்ற நுண்கிருமி மிகவும் ஆபத்தானது. அது கருச்சிதைவுகள் மற்றும் முன்கூட்டியே குழந்தை பிறத்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் . 

இது மட்டுமின்றி பச்சைப் பாலில், அடிவயிற்றில் காசநோய் ஏற்படுத்தும் அபாயமும் அதிகம்.


பச்சை முட்டைகளில் சால்மோனெல்லா இருக்கலாம். சுத்தமாகவும் உடைக்கப்படாமலும் இருக்கும் முட்டைகளில் கூட இந்த நுண்ணுயிரிகள் இருக்கலாம்.

அதனால்தான் பாஸ்ச்சுரைஸ் செய்யப்பட்ட அல்லது வேகவைத்த முட்டைகள் சிறந்தது என்கிறோம். முட்டையை வேகவைக்கும் போது அதன் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு கெட்டியாகும் வரை வேகவைக்க வேண்டும் என சி.டி.சி.பி. பரிந்துரைக்கிறது. 

அதே போல் அதை சேமித்துவைக்கும் போது குளிர்சாதன பெட்டியை சரியான வெப்பநிலையில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது.


பச்சை மீனில் பாக்டீரியா மற்றும் சில வைரஸ்கள் இருக்கலாம். இவை சாதாரண நோய் மட்டுமல்லாது, மரணத்தை விளைவிக்கும் நோயை ஏற்படுத்தும் ஆபத்து நிறைந்தவையாகக் கூட இருக்கலாம்.

அதனால்தான் மீன்களை நன்கு சுத்தம் செய்த பிறகே சமைத்து சாப்பிட வேண்டும் என்று சி.டி.சி.பி. பரிந்துரைக்கிறது.

அசுத்தமான நீரில் வளர்க்கப்படும் இறால் மற்றும் மீன்களில் நோரோவைரஸ் என்ற நுண்கிருமி காணப்படுகிறது. 

அதனால்தான் மீனின் பச்சை வாசனை மறையும் வரை அவற்றை சுத்தம் செய்து சமைக்க வேண்டும்.


முளைகட்டிய பயறுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லவை. இருப்பினும், 

அவை வளர சூடான மற்றும் ஈரப்பதமான சூழல் தேவை. இதே சூழலில் நுண்ணுயிரிகளும் வேகமாக வளர்கின்றன. இதில் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கலாம்.

நாம் எவ்வளவு காலம் அவற்றை முளைகட்டி வைத்திருந்தோம், 

அது எவ்வளவு காற்றோட்டமான பகுதியில் வைக்கப்பட்டிருந்தது என்பன போன்ற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று டாக்டர் பிரதீபா லட்சுமி கூறினார். “முளை கட்டிய பயறுகளை அதிக நேரம் ஈரமாக வைத்திருக்கக் கூடாது. 

குறிப்பாக, காற்றோட்டம் இல்லாத இடத்தில் அதிக நேரம் வைக்கக் கூடாது. அப்பகுதியில் இருக்கும் காற்று வெளியேறினால், பெரும்பாலான நுண்ணுயிரிகள் வளர வாய்ப்பில்லை.

நீண்ட நாட்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கோதுமை மாவில் மோசமான நுண்ணுயிரிகளும் இருக்கலாம். 

அதனால்தான் எந்த ஒரு மாவையும் பச்சையாக சாப்பிட வேண்டாம்.

---------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?