கல்வியில் சிறந்த தமிழ்நாடு
மணிப்பூர் கூட்டம தொடர்பாக பிரதமர் இல்லாமல் கூட்டப்படும் கூட்டத்தால் என்ன பயன்? அமித்ஷா அழைப்பு விடுத்துள்ள கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
• சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட லோக் மான்ய திலக் ரயிலில் தீ விபத்து ஏதுவும் ஏற்படவில்லை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. HOG கப்ளரில் ஏற்பட்ட பிரச்னையால் புகை மட்டுமே வெளியே வந்தது. தற்போது புகை அணைக்கப்பட்டு விட்டதால் ரயில் மீண்டும் இயங்க தொடங்கிய என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பாசிசத்தை முடிவுக்கு கொண்டுவர சமூக நீதி மண்ணில் போர் முழக்கம் துவக்கம் என பாட்னா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து நேற்று இரவு ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.முன்தினம்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி நாடகமாடுகிறார் என்று விமர்சனம் செய்தார்.
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைடானிக் கப்பலை சுற்றிப்பார்க்க சென்ற சிறிய நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளியில் குழந்தைகளைக் கட்டிவைத்து துன்புறுத்தியதாக பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மீனாட்சி கைது செய்யப்பட்டார்.சி.சி.டிவி காட்சிகள் மூலம் கொடுமைப் படுத்தியது அம்பலம்
சீனாவின் யின்சுவான் நகரில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.கியாஸ் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு
2023 ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் உயர் கல்வியின் (THE) வருடாந்திர ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் 18 இந்தியப் பல்கலைக்கழகங்கள் முதல் 200 இடங்களுக்குள் நுழைந்துள்ளன, இந்திய அறிவியல் கழகம் 48 வது இடத்தில் இந்திய நிறுவனங்களில் தொடர்ந்து உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், ஐ.ஐ.எஸ்.சி கடந்த ஆண்டை விட ஆறு இடங்கள் சரிந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, முதல் 50 இடங்களில் ஒரு பல்கலைக்கழகமும், முதல் 100 இடங்களில் நான்கு பல்கலைக்கழகங்களும், முதல் 200 இடங்களில் 18 பல்கலைக்கழகங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் இரண்டு தமிழக பல்கலைக்கழகங்களும் அடங்கும். அவை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை சவீதா பல்கலைக்கழகம்.கடந்த ஆண்டு, 17 உயர் கல்வி நிறுவனங்கள் முதல் 200 தரவரிசைக்குள் இடம் பெற்றன. இந்த முறை, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான JSS அகாடமி, 2022 இல் இருந்த 65 வது தரவரிசைக்கு மாறாக 68 வது இடத்தில் இரண்டாவது உயர் தரவரிசைப் பல்கலைக்கழகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து ஷூலினி பயோடெக்னாலஜி மற்றும் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் (77 வது) உள்ளது. முதல் முறையாக 200 இடங்களுக்குள் நுழைந்த, மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் (95வது) இடம் பிடித்தது
இருப்பினும், முதல் 200 இடங்களுக்குள் உள்ள மொத்த இந்தியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை சிறிதளவு உயர்ந்திருந்தாலும், பலவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது. உதாரணமாக, ஐ.ஐ.எஸ்.சி.,யின் தரவரிசை 2016 இல் 27 இல் இருந்து இந்த ஆண்டு 48 ஆக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக குறைந்துள்ளது. உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான JSS அகாடமியும் இந்த ஆண்டு மூன்று இடங்கள் சரிந்துள்ளது, மேலும் ஐ.ஐ.டி ரோபர் (IIT Ropar) இந்த ஆண்டு 68 வது இடத்தில் இருந்து 131 வது இடத்திற்கு 63 இடங்கள் கூர்மையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. ஐ.ஐ.ஐ.டி ஹைதராபாத், இந்த ஆண்டு 174வது இடத்தில் இருந்து 106
வது இடத்திற்கு முன்னேறியது.ஒரு சில பல்கலைக்கழகங்கள் இந்த ஆண்டு மொத்தமாக முதல் 200 இடங்களுக்குள் இருந்து வெளியேறியுள்ளன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (2022ல் 167வது) மற்றும் ஐ.ஐ.டி காந்திநகர் (கடந்த ஆண்டு 120வது இடம்) ஆகியவை இந்த ஆண்டு முத
ல் 200 இடங்களுக்குள் இடம் பெறவில்லை.
டெல்லி, பம்பாய், கான்பூர், மெட்ராஸ் மற்றும் காரக்பூர் உள்ளிட்ட புகழ்பெற்ற முதல் தலைமுறை ஐ.ஐ.டி.,கள், வெளிப்படைத்தன்மை தொடர்பான கவலைகள் காரணமாக தரவரிசையைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், டைம்ஸ் உயர்கல்வியின் (THE) பிரதிநிதிகள் IIT-டெல்லி, IIT-பம்பாய் மற்றும் IIT-மெட்ராஸ் ஆகியவற்றிற்கு ஒரு விளக்கக்காட்சியை அளித்து, அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் இந்த ஆண்டு செயல்திறன் அளவுருக்களில் குறிப்பிட்ட மாற்றங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தனர். இருப்பினும், ஐ.ஐ.டி.,கள் இன்னும் புறக்கணிப்பில் இருந்து விலகவில்லை.
உயர்கல்வி பற்றிய அறிக்கைகளை வெளியிடும் இங்கிலாந்து இதழான THE இன் ஆசிய பல்கலைக்கழக தரவரிசையின் 11வது ஆண்டு பதிப்பு இதுவாகும். அதன் மதிப்பீட்டில், கற்பித்தல், ஆராய்ச்சி, மேற்கோள்கள், சர்வதேசக் கண்ணோட்டம் மற்றும் தொழில்துறை வருமானம் ஆகிய பகுதிகளில் செயல்திறன் குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது. மேற்கில் துருக்கி முதல் கிழக்கில் ஜப்பான் வரை 31 நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் பங்கேற்கின்றன.
சிறந்த ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்
“சர்வதேச தரவரிசையில் மதிப்பீட்டிற்காக தங்களை முன்னிறுத்தத் தயாராக இருக்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களின் மிக விரைவான வளர்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, இது உலகளாவிய அரங்கில் போட்டியிடுவதற்கும், ஆசிய கண்டம் மற்றும் உலகின் மிகச் சிறந்தவற்றுக்கு எதிராக தரவரிசைப்படுத்துவதற்கும் உண்மையான ஆர்வத்தைக் காட்டுகிறது” என்று சர்வேயில் பங்கேற்ற 75 இந்தியப் பல்கலைக் கழகங்களைப் பற்றி THE இன் தலைமை உலக விவகார அதிகாரி பில் பாட்டி குறிப்பிடுகிறார். கடந்த ஆண்டு 71 ஆகவும், அதற்கு முந்தைய ஆண்டு 63 ஆகவும் இருந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
தரவரிசையில் சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் முதலிடத்திலும், பீக்கிங் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இருப்பினும், ஒட்டுமொத்த தரவரிசையில் ஜப்பான் (117), சீனா (95), இந்தியா (75), ஈரான் (65), துருக்கி (61) ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஞாயிற்றுக்கிழமை அந்தக்கப்பல் காணாமல்போன சிறிது நேரத்தில், நீர்மூழ்கி கப்பல்களை ரகசியமாக கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கருவியில் வெடித்து சிதறிய சத்தத்தை அது பதிவு செய்துள்ளது என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
டைட்டன் நீர்மூழ்கி கப்பல் தொடர்டை இழந்தபோது,
அதன் அருகில் வெடிக்கும் சத்தம் கேட்டது குறித்து அமெரிக்க கப்பல் படை ஆய்வு செய்தது.
வியாழக்கிழமையன்று அமெரிக்க கடலோர காவல் படை, டைடானிக் கப்பலின் சிதைவுகள் கிடக்கும் இடத்திற்கு அருகில் 12,400 அடி ஆழத்தில் ஒரு சிதைவை பார்த்ததாக தெரிவித்தது.
தொடர்ந்து 4 நாட்கள் பல நாடுகளின் தேடுதல் வேட்டைக்கு பின்னர், அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடல் மட்டத்தில் எழுந்த அலைகளின் தாக்கத்தை பார்த்து ஆய்வு செய்ததில் அது டைட்னன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதால் ஏற்பட்டது என்று தெரிகிறது.
இதையடுத்து, அந்த நீர் மூழ்கியில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டதாக ஓசன்கேட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நீர்மூழ்கியில் பிரிட்டிஷின் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானின் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான், ஓசன்கேட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பைலட் ஸ்டாக்டன் ரஷ், பிரெஞ்ச் ஆய்வாளர் பால் ஹென்றி நர்கோலட் ஆகியோர் பயணம் செய்தனர்.
அனைவரும் பெரும் பணக்காரர்கள்.இப்பயணத்திற்காக பல கோடிகள் கட்டணமாகச் செலுத்திச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது்
இந்த கப்பல் கடந்த 18ம் தேதி தனது பயணத்தை துவங்கியது.
பயணத்தை துவங்கிய 2 மணி நேரத்திலேயே இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனேயே அமெரிக்க கப்பல் மற்றும் கடலோர காவல் படையும் சோனார் கருவிகளின் உதவியுடன் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. ஆனால், தற்போது கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலின் சில நொருங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த நீர்மூழ்கி கப்பல் வெடித்துச்சிதறி அதில் இருந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.
----------------------------------------