புகையிலை எதிர்ப்பு

 கேரளாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. நின்று கொண்டிருந்த ரயில் பெட்டி என்பதால் உயிரிழப்பு நல்வாய்ப்பாக தடுக்கப்பட்டுள்ளது.  இதே ரயிலுக்கு ஏற்கனவே தீ வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜூலை 1 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை (7 மாதங்கள்) சென்னை கடற்கரையில் இருந்து சேப்பாக்கம் வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

*வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்துள்ளது. ஒரு சிலிண்டர் ரூ.1,937க்கு விற்பனையாகிறது.

*சென்னையில் குடிநீர் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் செய்யப்பட்டு உள்ளது . இதனால் இன்று வழக்கம் போல் குடிநீர் லாரிகள் இயக்கும் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளது.

*டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்திக்க உள்ளார்.


புகையிலை எதிர்ப்பு தினம்.

புகையிலையை புகைப்பவருக்கு மட்டுமில்லாமல் அந்த பாதிப்பு அருகில் உள்ளவர்களுக்கும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எந்தவொரு வடிவத்திலும் புகையிலையின் நுகர்வு எல்லோருக்கும் தீங்கிழைக்கக்கூடியதுதான். 

ஆனாலும் உலகெங்கும் பலர் இதற்கு அடிமையாகி உயிரிழக்கின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்து பிரபல தொற்றுநோய் நிபணர் புரோஹித் கூறுகையில், "அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 26 கோடியே 80 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். 

இந்த புகையிலை பயன்பாட்டால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகையிலை சுவாசிப்பதால் உயிரிழப்பதாகவும்” தெரிகிறது.

புகை பிடிப்பதால் இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன. பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களில் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள்.

 மேலும், இந்தியாவில் புற்றுநோய் மரணங்களில் 27 சதவீதம் மரணங்கள், புகையிலை பயன்பாட்டால் ஏற்படுகின்றன.

புகையிலையால் ஏற்படும் தேவையற்ற உயிரிழப்புகள் குறித்து விழிப்புணர்வு செய்யும் வகையில், 

உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் இணைந்து 1987ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி இந்த நாளை உலக புகையிலை எதிர்ப்பு நாளாக அறிவித்தது.

புகையிலை எதிர்ப்பு தினம் 2023: கருப்பொருள்

2023 ஆம் ஆண்டுக்கான புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளாக நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல (“We need food, not tobacco”) என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புகையிலை சாகுபடி செய்பவர்களை உணவு தானியங்கள், நெல் போன்றவற்றை பயிரிட ஊக்குவிக்கும் பொருட்டு இந்தக் கருப்பொருள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில், புகையிலை கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்த முன்முயற்சிகளில் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பள்ளிகள் மற்றும் சமூகங்களில் கல்வித் திட்டங்கள், சுகாதார பரிசோதனைகள் மற்றும் கொள்கை வாதிடுதல் ஆகியவை அடங்கும். புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பது,

 நிறுத்த முயற்சிகளை ஆதரிப்பது மற்றும் இளைஞர்கள் புகையிலை பழக்கத்தைத் தொடங்குவதைத் தடுப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

புகையிலை எதிர்ப்பு தினம் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீது புகையிலையின் அழிவுகரமான தாக்கத்தை நினைவூட்டுகிறது.

 புகைப்பிடிப்பவர்களை விட்டுவிட ஊக்குவிப்பதும், இளைஞர்கள் அந்தப் பழக்கத்தைத் தொடங்குவதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும். 

விழிப்புணர்வு மற்றும் புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம், புகையிலை எதிர்ப்பு தினம் புகையிலை தொடர்பான நோய்களின் சுமையை குறைப்பதில் மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது

விளம்பரபடுத்துவதில் மோடியை மிஞ்சிய

"ஆ  "தீனங்கள்

திருவாவடுதுறை ஆதீனம் நேருவுக்கு செங்கோல் கொடுத்தது குறித்து ஹிண்டு நாளிதழில் செய்தி வந்ததாகச் சொல்லப்பட்டு வந்தது அல்லவா? இப்போது இன்னொரு உண்மையும் தெரிய வந்துள்ளது.

உண்மையில் அது செய்தியே அல்ல. ஆதீனம் கொடுத்த விளம்பரம்! 

தில்லியில் நேருவிடம் செங்கோல் கொடுத்த புகைப்படங்களைக் கொண்டு வந்த பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆதீனம் இந்தப் படங்களைக் கொடுத்து விளம்பரமாகப் போடச் சொல்லியிருக்கிறது.

செங்கோல் கொடுத்த செய்தி ஹிண்டு நாளிதழில் தலைப்புச் செய்தியாக வந்தது என்று பக்தர்கள் பரப்பும் புரட்டினை மறுத்து, ஹிண்டு நிறுவனத் தலைவர் அந்த நாளின் செய்தித்தாளின்  பக்கத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  Advt என்று அடிக்குறிப்பு தெள்ளத் தெளிவாக உள்ளது.

இதில் மீண்டும் நிரூபணமாகிற விஷயங்களைப் பார்த்தால் எவ்வளவு பொய்களை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்று மலைப்பாக உள்ளது. —

1. நாடாளுமன்ற அவையில் செங்கோல் மவுன்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டு பிறகு நேருவிடம் கொடுக்கப்பட்டது என்ற உருட்டும் பொய். யார்க் ரோட்டில் இருக்கும் நேருவின் வீட்டில் தரப்பட்டது என்று இந்த விளம்பரத்திலேயே தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

2. சிறப்பு விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டதாகச் சொன்னதும் பொய். 11ஆம் தேதி  சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் முன்பு எடுத்த படம் என்பதும் தெளிவாக உள்ளது. 

3. இன்னும் சுவையான விஷயம் - உண்மையில் ஆதீனம் அம்பலவாணர் இதை நேருவிடம் நேரடியாகக் கொடுத்ததாக இந்த விளம்பரத்தில் இல்லை. 

Photo of the party deputed by Adeenam to present the Golden Sceptre before leaving Central Station on 11-8-1947. 1. Sri Kumaraswami Thambiran (Leader), 2. Sri Manikka Othuvar, 3. Sri K.V. Ramalingam Pillai (Adeenam Supt.) 4. Sri E. Subbiah Bharathiar 5. Adeena Vidwan Sri T.N. Rajaratnam Pillai. 

ஆக, இன்று சுயவிளம்பர மோகி மோடி செய்வது போலவே அன்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது ஆதீனம்.

அதுக்குள்ள என்னா உருட்டு உருட்டிட்டானுக!

-------------------------------------------------------

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு 87 முறை பதிலளித்திருக்கிறார். 

மோடி ஒரு முறை கூட பதில் அளித்ததில்லை. பாராளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்வதில்லை. 

எந்தச் சட்டமும் பாராளுமன்ற குழுவில் வைத்து விவாதித்து இறுதி செய்யப்படுவதில்லைதான்.

இதுதான் அவருடைய நடைமுறை. இந்த லட்சணத்தில் செங்கோலை வைத்து என்ன செய்யப் போகிறார்? 

ஆதினங்களுடன் கோலாட்டம் ஆட வேண்டியது தான்.

-------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?