வாயைத் திறங்கள்!

 சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

 "ஒடிசா ரயில் விபத்தை திமுகவோ முதலமைச்சரோ அரசியல் செய்ய விரும்பவில்லை. இந்திய வரலாற்றில் லால்பகதூர் சாஸ்திரி தொடங்கி லாலுபிரசாத், மம்தா பானர்ஜி உட்பட அனைவரும் தார்மீகரீதியாக பதவி விலகி உள்ளார்கள்.

மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே “நாங்கள் ரயில் விபத்து தடுப்பு அமைப்பு திக்காஸ் என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வந்தோம் ஆனால் அது எங்களுக்கு பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக ’கவாச்’ என்று மாற்றினீரக்ள் .

ஆனால் 70 ஆயிரம் கி.மீ நீளமுள்ள இந்திய ரயில்வே தண்டவாளத்தில் 1500 கி.மீக்கு மட்டுமே கவாச் கருவி பொறுத்தி உள்ளார்கள். 

இது ஒட்டுமொத்த ரயில் பாதையில் 2 சதவீதம் கூட இல்லை” என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டும்போது ரயில்வே அமைச்சர்ஒன்றும் பேச முடியமல் ஊமையாக உள்ளார்.

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டுக்கு குறித்து ரயில்வே அமைச்சரிடம் இருந்தோ அல்லது பிரதமரிடம் இருந்தோ நேரடியாக பதில் இல்லை.

திமுக இதில் அரசியல் செய்யவில்லை; ஆனால் இவ்வுளவு தொழில்நுட்பம் வந்ததற்கு பிறகும் யார் காரணம். சிஸ்டாமா?

 தனிமனிதரா?

சிஸ்டம் என்றால் இதற்கு பொறுப்பேற்பது யார்? 

இதுவரை பொறுப்பேற்பதற்கு ஏதாவது முயற்சி எடுத்துள்ளார்களா?

ஆனால் தமிழ்நாட்டில் ஏதாவது ஒன்று நிகழ்வு நடந்த உடனே முதலமைச்சர் பதவி விலக வேண்டும் அமைச்சர் விலக வேண்டும் என்று சொல்லும் பாஜக, அதிமுக இதுவரை ஏன் வாய்த்திறக்கவில்லை.

வந்தே பாரத் என்ற ரயிலை விடுகிறீர்கள் அதற்கு ஒரு ரயில் இயக்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் சென்றால் போதும் மற்ற ரயில்களை ரயில்வே அமைச்சரே ரயில்களை தொடங்கி வைக்கலாம். ஆனால் எல்லா மாநிலத்திற்கும் சென்று பிரதமர் விளம்பரம் தேடிக்கொள்கிறார். அதில் கவனம் செலுத்தும் நீங்கள் இதில் ரெயில்கள்,பயணிகள் பாதுகாப்பில் ஏன் கவனம் செலுத்தவில்லை.

ஒரு மாடு முட்டினால் கூட மோடி ஆரம்பித்த வந்தேபாரத் பழுதாகி நின்றுவிடுகிறது.

ரயில்வே நிலங்களை விற்று இருக்கிறார்கள். 

வெறும் பிம்பம் விளம்பரத்தில் மட்டுமே ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விபத்திற்கு பிறகு மத்திய அரசுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

.அவர்களிடம் தேச பாதுகாப்பிற்கு,மக்கள் நலனுக்கு எந்த திட்டமும் இல்லை.முழிக்கிறார்கள்.மக்கள்,எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்வதே இல்லை.

அவர்களிடம் அதானி,கார்பரேட் நலனுக்கான,பாதுகாப்புக்கான செயல் திட்டங்கள் மட்டுமே உள்ளன."

                           - என்று கூறினார்..

----------------------------------------------------------

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாகி, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது! இதனால் வரும் 5, 6 ஆகிய 2 நாட்களில் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாடும் நிலா பிறந்தது.

ஸ்ரீபதி பண்டிட்ராத்யுலா பாலசுப்ரமணியம், சுருக்கமாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், இன்னும் சுருக்கமாக எஸ்.பி.பி.

திரைப்பட பின்னணி பாடகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், டிப்பிங் கலைஞர், படத்தயாரிப்பாளர் என பல்வேறு முகங்கள் கொண்டவர்.

எனினும் அவர் அடையாளம் இந்தியாவிலேயே சிறப்பு வாய்ந்த பாடகர். 

ஆந்திராவின் நெல்லூரில் தெலுங்கு பிராமிண் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை எஸ்.பி.சம்பமூர்த்தி ஹரிகதா கலைஞர். நாடகங்களில் நடிப்பார். 

இவரது தாய் சகுந்தலம்மா. இவருக்கு 2 சகோதரர்கள் மற்றும் எஸ்.பி.ஷைலஜா உள்ளிட்ட 5 சகோதரிகள். இவரது மகன் எஸ்.பி.பி.சரணும் புகழ்பெற்ற பாடகர் மற்றும் திரைத்துறையில் இயங்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்கள் பாடிள்ளார்.

தெலுங்கில் 1966ம் ஆண்டு அறிமுகமானார். 50 ஆண்டுகளைக்கடந்து திரைப்பின்னணி பாடகராக இருந்தார். சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய விருதை 6 முறை பல்வேறு மொழிகளுக்காக பெற்றுள்ளார். தெலுங்கு திரையுலகில் சிறந்து விளங்கியதற்காக ஆந்திராவில் 25 நந்தி விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் மற்றும் கன்னட திரையுலகிலும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 6 ஃபிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளார். 

50,000க்கும் மேற்பட்ட பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளார். 

1981ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி மட்டும் இவர் காலை 9 முதல் இரவு 9 மணி வரை 27 கன்னட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார்.

 இதேபோல் ஒரு நாளில் தமிழில் 19, இந்தியில் 16 பாடல்களை பாடிய சாதனைக்கும் சொந்தக்காரர். மேலும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

நம்மை இசை மழையில் நனைத்து வந்த எஸ்.பி.பி 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நம்மைவிட்டு பிரிந்தார். 

இசைஉலகமே நின்று போனது.

ஆனால் அவர் இன்ஜினியரிங் படித்து அரசு பணியாளர் ஆக வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் ஆசை. ஆனால் இன்ஜினியரிங் படித்தபோதே அவர் பாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றார். உடல்நலக்குறைவு காரணமாக இவர் படிப்பை கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது.

 சென்னையில் இன்ஜினியர்கள் மையத்தில் சேர்ந்தார். அப்போது அவர் ஒரு பாட்டுப்போட்டியில் முதல் பரிசை வென்றார்.

இளையராஜா மற்றும் கங்கை அமரனுடன் சேர்ந்து இயங்கத்துவங்கினார். 

அப்போதுதான் அவருக்கு முதலில் பாட வாய்ப்பு கிடைத்த பாடல்,

 "நிலவே என்னிடம் நெருங்காதே. "

அந்தப்பாடலை பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடியிருந்தார்.

பின்னர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 

பின்னர் கன்னடம் என தொடர்ந்து 16க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடலை பாடியுள்ளார். 

அவரின் தனிச்சிறப்பு, அவர் காதல் பாடல் பாடினால் அதில் காதலின் இன்பம், வலி, வேதனை என அனைத்தும் இருக்கும். அவர் உற்சாகமாக ஒரு பாடலை பாடினால் நாம் எழுந்து ஆட்டம்போடும் அளவுக்கு உற்சாகம் பொங்கும். 

அவர் பாடும் சோகப்பாடல்கள் நம்மை உருக்கும் வகையில் இருக்கும். அவரின் இந்த சிறப்புதான், நம்மை இன்று வரை அவரை ரசிக்க வைக்கிறது. 

இவரது மனைவி சாவித்திரி, இவரது மகள் பல்லவி, மகன் சரண்.

---------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?