சோம்பேறித்தனமா?

சுறுசுறுப்பான ஜப்பானியர்களின் அசத்தல் ஆலோசனைகள்!

ஜப்பானியர்களின் கெய்சான் என்ற கலாச்சாரம் சோம்பேறித்தனத்தில் இருந்து வெளியேறுவதற்கு அவர்களுக்கு உதவுகிறது.

சோம்பேறித்தனத்தில் இருந்து நீங்கள் வெளியேறுவதற்கு முதலில் நீங்கள் சோம்பேறி என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

 உங்கள் சோம்பேறித்தனம் எங்கெல்லாம் உங்களை வீழ்த்துகிறது எங்கெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை கவனியுங்கள்.

சிறிய மற்றும் சாதிக்கக்கூடிய இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்,

 உண்மையான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பெரிய இலக்குகள் இருந்தாலும், அவற்றை சிறிதுசிறிதாக்கிவிடுங்கள். இதனால் சோம்பேறித்தனத்தில் இருந்து நீங்கள் விடுபடலாம்.

ஒரு நிமிட கொள்கையை பின்பற்றுங்கள், நீங்கள் துவங்க சோம்பேறிபட்டுக்கொண்டிருக்கும் வேலைக்காக ஒரு நிமிடம் செலவிடுங்கள், 

துவங்குவதுதான் கடினம், துவங்கிவிட்டால் முடிப்பது மிக எளிது.

பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள், சோம்பேறித்தனத்தை விட்டொழிக்க சிறந்த வழி, பழக்கமாக்கிக்கொள்வது, வேலை, உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் பிற பணிகளுக்கு என்று ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள். 

இதன் மூலம் வழக்கமாக நீங்கள் செய்யும் வேலைகளை செய்வதற்காக ஒன்றன்பின் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கும்போது சோம்பேறித்தனம் ஏற்படாது.

போமோடோடோ நுட்பம், உங்கள் வேலைகளை 25 நிமிட இடைவேளைகளாக பிரித்துக்கொள்ளுங்கள். 

இந்த நேர மேலாண்மை உங்கள் திறனை அதிகரிக்கும். இந்த இடைவேளை உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உங்களின் இலக்குகள் வேலைகள் குறித்து மனதில் காட்சிகளாக எண்ணிப்பாருங்கள். 

அதற்காக நீங்கள் குறிப்புகளையும் எடுத்து வைத்துக்கொள்ளலாம். அல்லது வீட்டில் போர்டில் எழுதிவைத்துக்கொண்டு உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளலாம்.

சுய ஒழுக்கம் பழகுங்கள், எந்த ஒரு விஷயமும் உங்களை கவரக்கூடாது. உங்கள் இலக்கு ஒன்றுதான் முக்கியம், எனவே சுயஒழுக்கத்தை கடைபிடிக்க பழகுங்கள்.

 காலக்கெடு நிர்ணயம் செய்வது, முடிக்க வேண்டிய வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றும் செய்து முடிக்க வேண்டிய காரியத்தில் முழு கவனமாக இருப்பது போன்றவற்றை மனதில் வைத்து செயல்படுங்கள்.

உங்களைப்போன்ற இலக்குகளுடன் இருப்பவர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடன் எப்போது உரையாடுங்கள், உங்களின் முன்னேற்றங்களை அவர்களுக்கு தெரிவியுங்கள், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி முன்னேறிச்செல்லுங்கள். இதுவும் சோம்பேறித்தனத்தை விட்டொழிக்க உதவும்.

முன்னேற்றத்தை கொண்டாடுங்கள், உங்கள் பணியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும், அதுகுறிதுது மகிழ்ந்திருங்கள். 

சிறு வெற்றிகளையும் கொண்டாடுவது, உங்களுக்கு நேர்மறையான சிந்தனைகளை வளர்த்து சோம்பேறி தனத்தில் இருந்து விடுபட உதவுகிறது.

தனிப்பட்ட வளர்ச்சி என்பது வாழ்நாள் முழுவதும் நடந்துகொண்டே இருக்க வேண்டிய ஒன்று. கற்றல் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும் வளர்ச்சி மனநிலையை தேர்ந்தெடுங்கள். 

தோல்வியால் துவண்டு போகாதீர்கள். அவற்றை வளர்ச்சிக்கான படிகளாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இவற்றை பின்பற்றி பாருங்களேன் வெற்றி நிச்சயம் மட்டுமல்ல சோம்பேறித்தனத்தில் இருந்தும் முற்றிலும் விடுபட்டு விடுவீர்கள்.

--------------------------------------------------






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?