கலைஞர் கோட்டம்.

 கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம். 

திருவாரூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நினைவாக கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கலைஞர் உருவாக்கிய வள்ளுவர் கோட்டத்தின் ஆழித்தேர் பாணியிலேயே தற்போது கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் இந்த கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 சுமார் 7000 சதுர அடியில் 12 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இங்கு கலைஞர் கருணாநிதியின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளதோடு அவரது பொது வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் வகையில் அருங்காட்சியகம் ஒன்றும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

 அங்கு கருணாநிதியின் இளமைக்கால புகைப்படங்கள், அரசியல் பொதுவாழ்வு பணிகள் குறித்த புகைப்படங்கள், பெரியார், அண்ணா, மற்றும் திராவிய இயக்க தலைவர்களுடன் இணைந்து கருணாநிதி ஆற்றிய முக்கிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 மேலும் அங்கு கலைஞர் தன் வாழ்நாளில் பயன்படுத்திய பொருட்கள் அவர் எழுதிய புத்தகங்களும், கட்டுரைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

தன் வாழ் நாள் முழுவதும் வாசிப்பை கைவிடாத கலைஞரின் நினைவாக உருவாக்கப்பட்ட நினைவிடத்தில் நூலகம் இல்லாமல் இருக்குமா என்ன. கருணாநிதியின் தந்தை முத்து வேலர் பெயரில் நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

அது மட்டும் இல்லாமல் 2 திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளது.

திருவாரூர் என்றலே நம் நினைவலைகளில் வருவது 96 அடி உயரமும், 400 டன் எடையும் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய தேர்தான். அந்த வகையில் கலைஞர் உயிரோடு இருந்த போது தான் அமைத்த வள்ளுவர் கோட்டத்தை திருவாரூர் தேர் வடிவில் உருவாக்கினார். 

தற்போது அவருக்காக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் அதே திருவாரூர் தேர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படி கலைநயமிக்க கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று (20.06.2023)மாலை நடைபெறுகிறது. 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?