பிடிபட்டது

 அரிக்கொம்பன் யானை

கம்பம் வனப்பகுதியில் 7 நாட்களாக சுற்றித்திரிநித் அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. யானையை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.


முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2173 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம்

சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 693 மில்லியன் கனஅடியாக உள்ளது

கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 455 மில்லியன் கனஅடியாக உள்ளது.


ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் 51 மணி நேரத்திற்கு பின் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது. பயணிகள் ரயில் சேலை நாளை மறுநாள் முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பீகாரில், கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்தது. 1,700 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தனது செல்போனை பிரதமர் மோடி ஒட்டுக்கேட்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ஹலோ மோடி என்று கூறி கிண்டல் செய்தார்.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில்தான் மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாஜக பாவ மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் வரும் 12ம் தேதி நடைபெற இருந்த எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் சுட்டெரித்த வெயில், வரும் நாட்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருச்செந்தூர் கடலில் குளித்தபோது தவறிவிட்ட ஒன்றரை சவரன் வளையல்களை மீட்டெடுத்த சிப்பி தொழிலாளர்களை மக்கள் பாராட்டினர்..



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?