இந்த மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு

 மக்களாட்சி நீக்கம்

இந்தியாவில் ஒன்றிய மற்றும் மாநில கல்வி வாரியங்கள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன.

ஒன்றியக் கல்வி வாரியங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை பின்பற்றி வருகிறது. மாநிலக் கல்வி வாரியங்கள் அந்த மாநிலங்களுக்கு ஏற்ற பாடத்திட்டங்களை வகுத்துள்ளன.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வழங்கும் புத்தகங்களை சிபிஎஸ்இ பின்பற்றுகிறது.

 எஸ்சிஇஆர்டி மாநிலப் பாடத் திட்டத்தையும் பின்பற்றுகின்றன. அவ்வப்போது பாடத்திட்டங்களை மற்றுவது வழக்கம். 

அந்த வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் பகுதி நீக்கப்படும் என்று என்சிஇஆர்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அறிவித்து இருந்தது.

இது நடப்பு கல்வி ஆண்டான 2023- 2024-லேயே அமலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களில் இருந்து சில பாடங்கள் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 

அதாவது, தனிம வரிசை அட்டவணை (periodic table) உள்ளிட்ட பாடங்கள் அறிவியல் புத்தகங்களில் இருந்து நீக்கபப்ட்டுள்ளன. 

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் எரிசக்திக்கான ஆதாரம் உள்ளிட்ட பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. 

அதேபோல், சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து மக்களாட்சி(ஜனநாயாகம்) முழு அத்தியாயமும் (chapter) நீக்கப்பட்டுள்ளது. 

பிரபலமான போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஜனநாயகத்தின் சவால்கள் ஆகிய அத்தியாயங்கள் நீக்கப்படுவதாக என்.சி.இ.ஆர்.டி அறிவித்துள்ளது.

ஆக மாணவர்களுக்கு தேவையான பாடங களைக் கொடுக்காமல் பிற்போக்கு,வலதுசாரி பாடங்களையே.   என்.சி.இ.ஆர்.டி திணிக்கிறது.

-----------------------------------------------------------

குஜராத்.

 சூரத் தைச் சேர்ந்த நேர்மையாளர் பாஜக தலைவர் 

தேச பக்தர் சீக்கர் அகர்வாலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்

மூன்று நாட்களாக எண்ணியும் எண்ண முடியல 

பாவம்.

 ஊழலை ஒழிக்க பயங்கரமாகப் பாடுபட்டு சிறுகச்சிறுகச் சேர்ந்த பணம்.

இது போன்று பா.ஜ.க.வின் தேச முன் னேற்றத்துக்காகப் பாடுபடும்  செய்திகளை நடுநிலை நக்கி ஊடகங்கள் வெளியிடுவதுமில்லை.தொலைக்காட்சிகள் நாலுபேரைக் வைத்து விவாதம் நடத்துவதுமில்லை.

ஒன்றிய அமைச்சர் யார்?இந்த மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது தொடர்பான விவகாரம் குறித்து முதலமைச்சர்  ஸ்டாலின் ஒன்றிந கூட்டுறவுத்துறை அமைச்சர்  .அமித்ஷா-க்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

அதை,,மிகவும் கிண்டலாக கேலியாக பாஜக தலைவர்  அண்ணாமலை.

அமித்ஷா அவர்களின் கடந்த 9 ஆண்டு கால வரலாற்றில் ஸ்டாலின் அவர்கள் எழுதியதைப்போல தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள் என்று பேசியுள்ளார்..

அதை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்துவது போல,

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் எழுந்த 

அமுல் & நந்தினி மற்றும் நந்தினி & மில்மா இடையேயான எல்லை தாண்டிய சந்தைப்படுத்தல் தொடர்பான சிக்கல்களை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) தீர்த்து வருகிறது என்றும் விளக்கமளித்துள்ளார்

அதோடு நிற்காமல்,,National Dairy Development Board மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மிகவும் தவறான தகவல்..

Co-operative அமைச்சகத்தின் கீழ் தான் 

National Dairy Development Board இயங்கிவருகிறது.

அந்த துறைக்கு அமைச்சர் .அமித்ஷா அவர்கள் தான்..

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக திரு.ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார்.

அதை விமர்சித்து அரசியலுக்காக .அண்ணாமலை மேடைகளில் பேசுவது தவறில்லை.

ஆனால் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

ஒரு பொய்யை பேசிவிட்டு அதை நியாயப்படுத்த அண்ணாமலை திரும்ப திரும்ப பொய் பேசுவது கொஞ்சமும் அழகல்ல..

இஷ்டத்திற்கு மேடைகளில் அடித்து விடுவதை எல்லாம் அப்படியே நம்புவதற்கு இது குஜராத்தோ அல்லது உத்திரப்பிரதேசமோ அல்ல .

அனைவரும் சங்கிகளோ,பா.ஜ்க்வின் துக்ளக் அளிவாளிகளோ அல்ல.

ஐ.பி.எஸ் ,ஐ.ஏ.எஸ்.படித்வரெல்லாம் அறிவாளிகள் அல்ல. என்பதை அடிக்கடி உறுதி செய்பவர் நீங்கள் என்பதையும் மறந்து விட வேண்டாம்

இந்த மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு.

---------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?