இணைந்தால் சரி

 • போராட்டம இனி சாலையில் அல்ல நீதிமன்றத்தில தொடரும் என மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் சில நாட்களுக்கு விலகி இருக்க போவதாகவும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் விபி சிங்கிற்கு சிலை நிறுவப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிரதமராக இருந்த 11 மாதங்களில் செய்த சாதனை மகத்தானவை என புகழாரம் சூட்டியுள்ளார் முதலமைச்சர்.

• பருவ மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் வாரங்களில் தக்காளி விலை ரூ.100ஐ நெருங்கும் என்று வாய்ப்புள்ளது.

• முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தில் உணவு வகைகளை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாரத்தில் 2 நாட்களாவது சிறுதானியங்களில் வழங்கப்பட்ட உணவை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• டெல்லி மற்றும் மும்பையில் 60 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் பருவ மழை துவங்கியுள்ளது. மும்பையில் ஒரே நாளில் பெய்த கனமழையால் சுரங்கப்பாதை மற்றும் சாலைகளை வெள்ளம் ஆக்கிரமித்தது.

----------------------------------------------

38 ஆண்டுகள்3 மாத ஆட்சி பணி முடிந்து தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து 2023ஜூன் 30 ல்ஓய்வு  பெறப் போகிறார் முனைவர் வெ.இறை அன்பு  ஐஏஎஸ் அவர்கள். 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ்,

ஒரு நாளை கூட ஏன், ஒருமணிநேரத்தை கூட வீணடிக்காமல், மக்களுக்கு சேவையாற்றுவதையே தலையாய கடமையாக உறுதிபூண்டு அரசுப் பணியில் நீடித்து வருகிறார் என்பதுதான் இளம்தலைமுறைக்கான பாடமாகும்.

தலைமைச் செயலகத்திற்கு முதல் அதிகாரியாக வருவதுடன் அலுவலகத்தில் இருந்து வெளியேறும் கடைசிஅதிகாரியாகவும் இருந்து வருகிறார் .

முனைவர் வெ.இறையன்பு தலைமைச்செயலாளர் என்ற பதவிக்கு மிகப்பெரிய புகழைத் தேடி தந்திருக்கிதறார். 

வார நாட்களில் மட்டுமின்றி வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், சொந்த நலனைப்பற்றிதுளியும்அக்கறைகொள்ளாமல், அரசுப் பணியாற்றுவதிலும் மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதிலும் தணியாத ஆர்வம் காட்டுபவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் என்றால், அது மிகையாகாது.

அறிமுகமே தேவையில்லாத அளவிற்கு தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள தமிழர்கறிடையே பிரபலமாகியிருப்பவர்.

இந்திய ஆட்சிப் பணி(ஐஏஎஸ்) அதிகாரியாக, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்றிய சேவைக்கு இணையாகவே,தனது எழுத்தின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றியிருப்பவர். 

அவர் பணி ஓய்வு பெறுவது தமிழ் நாடுஅரசு நிர்வாகத்திற்கு இழப்பு.

தமிழ் இலக்கியத்திற்கு நல்வரவு.!பெருமை.!

----------------------------------------

ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதாக்கள்


கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் உள்பட 13 மசோதாக்கள் ஆளுனர் ரவியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன. 

------------------------------------------

ஒன்றிணையும்

 எதிர்கட்சிகள்.

பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக நடைபெற்ற எதிர்கட்சிக் கூட்டத்தில் 15 எதிர்கட்சிகள் கலந்துகொண்டனர். இந்த 15 கட்சிகளில், 3 கட்சிகள் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சிகளாக அங்கீகரித்துள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ (எம்) என்ற மூன்று கட்சிகள் மட்டுமே தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், ஒரு கட்சி 4 அல்லது அதற்கு அதிகமான மாநிலங்களில் மக்களால் அறியப்பட வேண்டும். மேலும்  அக்கட்சியின் வேட்பாளர் ஒட்டுமொத்த வாக்குகளில் 6 % நாடாளுமன்ற தேர்தலில் பெற்றிருக்க வேண்டும்.

2024ம் தேர்தலில் பாஜகவிற்கு கடுமையான போட்டியை கொடுக்க வேண்டுமென்றால், பாட்னாவில் கூடிய 15 எதிர்கட்சிகளும் சரியான முறையில் தொகுதிகளை பங்கீடு செய்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 15 எதிர்கட்சிகளும் சேர்ந்து ( சிவசேனா கட்சி) 154 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

பாஜக 436 தொகுதிகளில் போட்டியிட்டது, அதில் 303 தொகுதிகளில் வெற்றிபெற்று,  37.7 % வாக்குகளை பெற்றது. இந்நிலையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடந்தவற்றை திரும்பி பார்க்கலாம்.

இந்நிலையில் 2019 தேர்தலில் 39 லோக் சபா தொகுதிகளில் 24 இடங்களில் திமுக போட்டியிட்டது. காங்கிரஸ், சிபிஐ ( எம்), விசிக, மதிமுக ஆகியோருடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. இதில் 24 தொகுதிகளும் வெற்றி பெற்றது.2014ம் தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்டு, ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை.

2019ம் ஆண்டு காங்கிரஸ் 421 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 52 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 19.67% வாக்குகளை பெற்றது. இந்நிலையில் 2019-க்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஹிமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2014ம் ஆண்டு, நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 464 தொகுதிகளில் போட்டியிட்டது. 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 19.52 % வாக்குகளை பெற்றது.

2019ம் ஆண்டு 62 தொகுதிகள் ( 42 தொகுதிகள் மேற்கு வங்கத்தில் ) போட்டியிட்டது. 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 3 வது பெரும் எதிர்கட்சியாக மாற்றியது. 4.1 % வாக்குகளை பெற்றது. ஆனால் 2014ம் தேர்தலில் 45 இடங்களில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மட்டுமே அதன் செல்வாக்கை கொண்டுள்ளது.

2019 தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்டு, 5 இடங்களில் மட்டுமே வெற்று பெற்றது. 1.4 %  வாக்குகளை பெற்றது. 2014-ல் என்.சி.பி கட்சி 36 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றிபெற்றது. 1.58 % வாக்குகளை பெற்றது.

மகாராஷ்டிராவிற்கு வெளியே இக்கட்சியின் வளர்ச்சி விரிவாகாததால் கடந்த ஏப்ரலில், இதன் தேசிய கட்சிக்கான அங்கீகாரம் நீக்கப்பட்டது.

2019ம் தேர்தலில் 69 இடங்களில் போட்டியிட்டு, 3 இடங்களில் வெற்றி பெற்றது. 1. 77 % வாக்குகளை பெற்றுள்ளது. 2014ம் தேர்தலில்  சிபிஐ (எம்) 93 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 3.28 % வாக்குகளை பெற்றது. கேரளா மற்றும் திரிபுராவில் இக்கட்சியின் செல்வாக்கு அதிகமாக இருப்பதால், தேசிய கட்சிக்கான அங்கீகாரம் நீக்கப்படவில்லை.

2019 தேர்தலில் 49 இடங்களில் போட்டியிட்டு, 2 இடங்களில் வெற்றி பெற்றது. 0.59 % வாக்குகளை பெற்றது. 2014 தேர்தலில் 67 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 0.79 % வாகுகளை பெற்றது. பிகாரிலும் இக்கட்சிக்கு செல்வாக்கு இருந்தாலும், தேசிய கட்சி என்ற அங்கீகாரம்  இதற்கு கிடைக்கவில்லை.

2019ம் தேர்தலில்  21 இடங்களில் போட்டியிட்டது. 19 தொகுதிகள் பிகாரிலும், 1 தொகுதி ஜார்கண்டிலும் போட்டியிட்டது. இதில் 2 இடங்களில்  வெற்றிபெற்றது.

2014ம் தேர்தலில் 28 இடங்களில் போட்டியிட்டது. இதில் 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

2019 தேர்தலில் பிகாரில் 17 இடங்களிலும், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்நிலையில் 16 இடங்களில் வெற்றி பெற்றது. 2014 தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது.

2019 தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிட்டது. பஞ்சாபில் 13 இடங்களிலும், டெல்லியில் 7 இடங்களிலும் போட்டியிட்டது. இதில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது.

2014ம் தேர்தலில் 7 இடங்களில் ( டெல்லி) போட்டியிட்டு, ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. பஞ்சாப்பில் 4 இடங்களை பெற்றது.

------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?