செம்மொழியான தமிழ்.


கி.பி 794 முதல் கி .பி 1185 வரையிலான காலத்திய ஜப்பானிய இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன. 

17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு இலக்கியங்களும் செவ்வியல் இலக்கியங்களாக கருதப்படுகின்றன. கி.பி 1660 முதல் கி.பி 1714 காலத்திய ஆங்கில இலக்கியங்கள் செவ்வியல் தன்மை கொண்டதாய் கருதப்படுகின்றன.

தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்புகள், நடுவுநிலைமை, தாய்மைத் தன்மை, கலை பண்பாட்டுத் தன்மை, தனித்து இயங்கும் தன்மை, இலக்கிய இலக்கண வளம், கலை இலக்கியத் தன்மை, உயர் சிந்தனை, மொழிக் கோட்பாடு போன்றவை செம்மொழிக்கான தகுதிகளாக பார்க்கப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற மொழியியல் அறிஞரும், லத்தீன், கீரேக்கம், தமிழ், சம்ஸ்கிருதம், ரஷ்ய உள்ளிட்ட பல உலக மொழிகளில் ஆழ்ந்த புலமை மிக்கவருமான ஜார்ஜ் எல். ஹார்ட் 2000-ம் ஆண்டு தமிழின் செம்மொழித் தகுதி பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டார்.

 அவரது அறிக்கையே தமிழ் செம்மொழிக் கோரிக்கைக்கான உந்து விசையாக மாறியது.

அதேசமயம் இந்தியாவில் தமிழுக்கு செம்மொழித் தகுதியை தர மறுப்பதற்குவட இந்திய ஆரிய அரசியல் காரணம் மட்டுமே இருக்க முடியும். 

தமிழுக்கு இந்த தகுதியை அளித்தால் பிற மொழிகளும் அதே கோரிக்கையை முன்வைக்கலாம் ,தேவ மொழி சமஸ்கிருதத்தைப் பற்றிய கவலையே என்பதே அந்தக் காரணம் என்று முன்னெச்சரிக்கையோடு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 150 ஆண்டுகளாக தமிழ் சொம்மொழி என்பது குறித்த விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. 

கால்டுவெல் 1856ல் தான் எழுதிய நூலில் தமிழின் தொன்மை குறித்து பேசினார். இது உலக அளவில் பேசப்பட்டது. பின்னர் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் 

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என 1902ல் கோரிக்கை விடுத்தார். 

இதையடுத்து இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்பு தமிழை செம்மொழியாக அறிவிக்க பல நிலைகளில் முயற்சிகளை மேற்கொண்டனர்.

ததிழ்நாடு முதலமைச்சராக இருந்த  முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி இதற்காக அரும்பாடுபட்டார்.

அவருடைய ஆட்சிகாலத்திலேயே தமிழ் செம்மொழியாக்கப்பட்டது்


இத்தகைய நூற்றைம்பது ஆண்டு கால முயற்சிகளுக்கு பின் 2004 ஜூலை 6ந் தேதி தமிழ் ஒரு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. 

அதுமட்டும் இல்லாமல் செம்மொழி என இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் மொழியே.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை தமிழரான குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அறிவித்தார்.

இந்தியாவில் தமிழகம், புதுச்சேரியில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. இலங்கையில் 3 ஆட்சி மொழிகளில ஒன்றாக தமிழ் உள்ளது.

 மலேசியா மற்றும் சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியல் அமைப்பின் அங்கீகாரம் உள்ளது.

அது மட்டும் இல்லாமல் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகளில் ஏராளமான தமிழ் எழுத்துக்கள் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கல்லில் மட்டும் அல்ல. தமிழகத்தில் மதுரை அருகே உள்ள தேனூர் கிராமத்தில் தங்க கட்டிகளில் தமிழ் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 அதில் கோதை என்ற பெண்ணின் பெயர் தங்க கட்டிகளில் இருப்பது. கடந்த 2013ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் கீழடி, உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழ் மொழியின் சிறப்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் பானை ஓடுகள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

அந்த வகையில் சங்கத் தமிழ் மட்டும் அல்ல தங்கத் தமிழான நம் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று.

-------_----------------_--------------------_-------------------------

இன்று

பொறியியல் கலந்தாய்விற்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கான ரேண்டம் எண் இன்று வெளியாகிறது.

நகர்புற சுகாதார மையங்கள் இன்று திறப்பு

708 நகர்புற சுகாதார மையங்களை காணொலி காட்சி வாயிலாக புதிய முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 22 கட்டிடங்களில் 10 கட்டிடங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதால் அவை திறக்கப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்து - 101 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 101 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் 55 பேர் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது..

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வேட்புமனுவில் தவறான தகவல் அளித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

---------------------------------------------------------------

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல், ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.

எங்கெங்கு டாஸ்மாக் கடைகளை மூடுவது என்பது குறித்து பட்டியல் தயாராகி வருவதாக தகவல்.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாடு தளங்களுக்கு அருகே உள்ள மதுபானக்கடைகள் மூடப்படும் என்று ஏற்கனவே சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.


தமிழகத்தில் மொத்தம் 5,332 மதுபானக் கடைகள் இருக்கின்றது. இதில் 500 கடைகள் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

--------------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?