போலிகள்-27தானா?

பக்ரீத் பண்டிகை வருகின்ற 29ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி டாக்டர் சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுரஅடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. 

விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். கலைஞர் கோட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரும், முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் திறந்து வைக்கின்றனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், “சென்னை – பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை கடந்து சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும்,

இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்து வாகனங்கள் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்பீடு ரேடார் கன் தொழில் நுட்ப கருவி பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு வருவதால் தானியங்கி முறையில் வழக்கு பதிவு எனவும் அவர் தெரிவித்தார்.

ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

பியூலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராக நியமனம்

ரமேஷ் சந் மீனா சிறப்பு செய்லாக்கத் திட்டத்துறைச் செயலாளராக நியமனம்

வீர பிரதாப் சிங் வணிகவரி துறை இணை ஆணையராக நியமனம்

விஜயரா ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம்

ஆசி மரியம் சிறுபான்மை துறை ஆணையராக நியமனம்.


2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து 1146 கன அடியில் இருந்து 1424 கன அடியாகவும், ஏரியின் கொள்ளளவு 117 மில்லியன் உயர்ந்து 2530 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

மேற்கு சிக்கிம் மற்றும் கியால்ஷிங் மாவட்டங்களில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

பாதிகப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆறு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி. 

--------++++++---------------------------

27 போலி மருந்துகள்

இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 27 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியாகவும் இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.*

அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

 அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,302 மருந்துகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன.

அவற்றில் காய்ச்சல், சா்க்கரை நோய், இரும்புச் சத்து, உயா் ரத்த அழுத்தம், கிருமித் தொற்று பாதிப்பு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 27மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

 அவற்றுடன் மாரடைப்பு, பக்கவாதத்தைத் தடுப்பதற்கான ரத்த அடா்த்தியைக் குறைக்கும் ஹெபாரின் மருந்தில் ஒன்று போலியாக இருந்ததும் தெரியவந்தது.

அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்துக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

-------------------------------

உங்கள் உடல் தரும் பிரமிப்பு.

31. உங்களது தகவல் நரம்புகளில் தகவல்கள் மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் கடக்குமாம்.

32. ஒருவரது வாழ்க்கையில் சராசரியாக 300 கோடி முறை இதயம் துடிக்குமாம்.

33. உங்களது இடது பக்க நுரையீரல் வலது பக்க நுரையீரலை விட 10 சதவீதம் சிறியது.

34. மனிதர்களின் பற்கள் ஒரு சுறா மீனுடைய பற்களுக்கு இணையான வலுவானவையாம்.

35. மனிதர்களின் மூக்கு 3 லட்சம் வித்தியாசமான வாசனைகளை நுகரும் திறன் வாயந்தது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

36. ஒரு மனிதரின் உடலில் 8 சதவீதம் ரத்தம் அடங்கியிருக்குமாம்.

மனிதர்களின் கைரேகைகள் போலவே அவர்களது நாக்கின் ரேகையும் தனித்துவமானதாம்.

37. ஒரு குழந்தையின் ரத்தக்குழாய்கள், நரம்புகள், நுண்ரத்தக்குழாய்களை விரித்துவிட்டால் சுமார் 60 ஆயிரம் மைல்கள் இருக்குமாம். அதேபோல் வளர்ந்த மனிதர்களின் ரத்தக்குழாய்கள், நரம்புகள், நுண்ரத்தக்குழாய்கள் சுமார் 1 லட்சம் மைல்கள் இருக்குமாம்.

38. புஞ்சைகள் ஒரு மனிதரின் மூளையைக் கட்டுப்படுத்தி கொடூரமான காட்டுமனிதராக ஆட்டிப்படைக்கும் சக்தி வாய்ந்தனவாம்.

39. உங்கள் உடல் பருவம் எய்தியபின் வளர்ச்சி நின்ற பிறகும் உங்களது காதுகள், மூக்கு வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்குமாம். இதற்கு காரணம் புவியீர்ப்பு விசை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

40. உங்கள் கண்களில் மேல்புறம் உள்ள கார்னியா படலத்துக்கு எந்த ரத்த விநியோகமும் கிடையாது. இதனால் அது நேரடியாக காற்றிலிருந்து பிராணவாயுவைப் பெறுகிறது.

----------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?